வரும் 18ம் திகதி கூடுகிறது  தமிழக சட்டப் பேரவை

 ›  › வரும் 18ம் திகதி கூடுகிறது  தமிழக சட்டப் பேரவை

இந்தியா

வரும் 18ம் திகதி கூடுகிறது  தமிழக சட்டப் பேரவை

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை கூட்டம் வரும்  சனிக்கிழமை நடைபெற உள்ளது.

சட்டமன்றச் செயலர் ஜமாலூதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேற்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் 31 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி கே.பழனிச்சாமியை சட்டமன்றத் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவை இருமுறை சந்தித்து  எடப்பாடி கே.பழனிச்சாமி வலியுறுத்தி வந்தார்.

அதனைத்தொடர்ந்து, எடப்பாடி கே.பழனிச்சாமியை முதலமைச்சராக நியமித்த ஆளுநர் சட்டமன்றத்தில் 15 நாட்களுக்குள்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பிப்ரவரி 18 ம் திகதி சட்டப்பேரவை விதி எண் 26 (1) -ன் கீழ், பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.

அதில், புதிய அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this Post:
வரும் 18ம் திகதி கூடுகிறது  தமிழக சட்டப் பேரவை Reviewed by on February 17, 2017 .

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை கூட்டம் வரும்  சனிக்கிழமை நடைபெற உள்ளது. சட்டமன்றச் செயலர் ஜமாலூதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் 31 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி கே.பழனிச்சாமியை சட்டமன்றத் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவை

ABOUT AUTHOR /