தேசிய ஆலோசகர் பதவியை ஏற்க, டிரம்ப் தேர்வு செய்தவர் மறுப்பு

 ›  › தேசிய ஆலோசகர் பதவியை ஏற்க, டிரம்ப் தேர்வு செய்தவர் மறுப்பு

உலகம்

தேசிய ஆலோசகர் பதவியை ஏற்க, டிரம்ப் தேர்வு செய்தவர் மறுப்பு

தேசிய ஆலோசகராக தான் தேர்வு செய்தவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்ததன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, அவரது தேசிய ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் நீக்கப்பட்டார். ரஷ்ய தூதருடன் நடந்த உரையாடல் தொடர்பாக, துணை அதிபர் மைக் பென்ஸை அவர் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில், ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் ராபர்ட் ஹர்வர்டை அந்தப் பதவிக்கு நியமிக்க அவருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.

அவர், தன்னுடன் பணியாற்றும் அணியை தானே முடிவு செய்வேன் என்று கூறியதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தனது நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் போல நிர்வாகம் சீராக இயங்குவதாகக் குறிப்பிட்டார். தனக்கு கிடைக்க வேண்டிய நற்பெயரை தடுத்து, ஊடகங்கள் நேர்மைக்கு மாறாக நடந்து கொள்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

 

Share this Post:
தேசிய ஆலோசகர் பதவியை ஏற்க, டிரம்ப் தேர்வு செய்தவர் மறுப்பு Reviewed by on February 17, 2017 .

தேசிய ஆலோசகராக தான் தேர்வு செய்தவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்ததன் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தை அமைக்கும் முயற்சியில் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அவரது தேசிய ஆலோசகர் மைக்கேல் ஃபிளின் நீக்கப்பட்டார். ரஷ்ய தூதருடன் நடந்த உரையாடல் தொடர்பாக, துணை அதிபர் மைக் பென்ஸை அவர் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில், ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் ராபர்ட் ஹர்வர்டை அந்தப் பதவிக்கு நியமிக்க

ABOUT AUTHOR /