கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்

 ›  › கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்

இலங்கை

கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டம் இன்று 18 ஆவது நாளை எட்டியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராமத்தில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்கும் முகமாக அங்கு செல்பவர்களை விமானப் படையினர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈ:டுபட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் காணியை மீட்கும் போராட்டம் தொடரம் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Post:
கேப்பாப்புலவில் தொடரும் போராட்டம் Reviewed by on February 17, 2017 .

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டம் இன்று 18 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராமத்தில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்கும் முகமாக அங்கு செல்பவர்களை விமானப் படையினர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈ:டுபட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் காணியை மீட்கும்

ABOUT AUTHOR /