உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாரிய கூட்டணி  அரசாங்கத்தை அமைப்போம்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

 ›  › உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாரிய கூட்டணி  அரசாங்கத்தை அமைப்போம்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

இலங்கை

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாரிய கூட்டணி  அரசாங்கத்தை அமைப்போம்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாரிய கூட்டணியை அமைத்து 2020 இல் அரசாங்கத்தை அமைக்கும் நோக்குடனேயே களமிறங்குவோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்துள்ளது.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்களின் மனங்களின் அடிப்படையிலேயே தீர்வுகளை முன்வைத்து வருகிறார்.

மைத்திரிபால சிறிசேன ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்றே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால், ஒரு மாவட்டத்தின் மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்றவர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் தாண்டி செயற்பட முற்படும் போதே பிரச்சினைகள் வலுப்பெற்று வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் உள்ளதாக கூறுகின்றார்.

கட்சியை எவரும் பிளவுப்படுத்த நினைத்தால் அது கட்சிக்கு செய்யும் துரோகமாகும். 2020 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்துச் செயட்பட வேண்டும்.

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கே கட்சியை  பிளவுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாரிய கூட்டணியை அமைத்து களமிறங்கவுள்ளோம்.

இதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலம் நிரூபனமாகும். கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வரவேண்டும் என்பது பொதுக்குழுவின் தீர்மானமாகும்.

இதேவேளை, அடுத்த பொதுத் தேர்தலும் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழேயே நடைபெறும்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் உள்ளன. 19ஆவது திருத்தத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 19ஆவது திருத்தத்திற்கு முன்னர் பொது மக்களின் வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதால் 2021 ஆம் ஆண்டு வரை அவரின் பதிவுகாலம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

Share this Post:
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாரிய கூட்டணி  அரசாங்கத்தை அமைப்போம்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி Reviewed by on February 17, 2017 .

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பாரிய கூட்டணியை அமைத்து 2020 இல் அரசாங்கத்தை அமைக்கும் நோக்குடனேயே களமிறங்குவோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தெரிவித்துள்ளது. கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்களின் மனங்களின் அடிப்படையிலேயே தீர்வுகளை முன்வைத்து வருகிறார். மைத்திரிபால

ABOUT AUTHOR /