மனித உடலின் எதிர்காலம்! — – } ஏலையா க.முருகதாசன்.

 ›  › மனித உடலின் எதிர்காலம்! — – } ஏலையா க.முருகதாசன்.

கட்டுரைகள்

மனித உடலின் எதிர்காலம்! — – } ஏலையா க.முருகதாசன்.

மனிதனின் உடலில் இருக்கும் தோல் தொட்டு அனைத்து உறுப்புக்களும் பூமியிலிருக்கும் மூலகங்களால் ஆக்கப்பட்டவையே. உடல் இயக்கம் வேதியல் மாற்றங்களினாலும் மூளை என்ற அதிநுட்ப தொழிற்சாலையாலும் அவற்றோடு இணைந்த நரம்பு மண்டலங்களாலும் நடைபெறுகின்றது.வெளித்தோற்றத்தில காணப்படும் தோல் உட்பட அனைத்து உறுப்புகளும் அனுபவித்தலுக்காக பயன்படுகின்றன.மனிதன் அனுபவித்து வாழ ஆசைப்படுகிறான். மகிழ்ச்சியாக வாழ்வதற்கே ஒவ்வொரு மனிதனும் அதற்கு எதிராக, தடையாக நிற்கும் துன்பச் சுவர்களை தகர்த்தெறிவதற்காக வாழ்நாள் முழுவதும் போராடுகிறான்.கண்களால் காட்சிகளையும், காதுகளால் ஓசையையும், மூக்கினால் வாசனையையும், நாக்கினால் ருசியையும், உடல் எங்கும் போர்வையாக போர்த்தியிருக்கும் தோலினால ஸ்பரிச உணர்வுகளையும் அனுபவிக்கிறான். ஆசைகள், நினைவுகள்,எதிர்பார்ப்புகள், உணர்ச்சிகள்,விருப்பங்கள் போன்றவையே அவனுக்கு வாழ வேண்டும் என்ற வேகத்தையும் துடிப்பையும் ஏற்படுத்துகின்றன.
இயற்கையின் பிரவசமாக மனிதன் தோற்றப்பட்டு, இயற்கைக்கும் தனக்குள் உள்ள தொடர்பினை மூலகங்கள் மூலம் தக்க வைத்துள்ள மனிதனை, அவனின் உடலில் தோன்றும் வேதியல் இணைவெதிர்ப்பியல் வழியாகத் தோன்றும் கிளர்ந்தெழும் அலைகளை நரம்பியல் கூறுகள் உடலின் பாகங்களுக்கு கொண்டு சென்று அனுபவிக்க வைக்கின்றன.பாசம், பற்று, காதல், காமம், இரசித்தல், ருசித்தல் யாவிற்கும் கோர்மோர்ன்களே காரணமாகின்றன. இது இயற்கை மனிதனுக்கு கொடுத்த கொடையாகும்.  உணவை சாப்பிடும் போது மூளையின் கட்டளைக்கமைய நாவின் ருசியறியும் தன்மைக்கூடாக உடல் அந்த உணர்வை அறிகிறது,அனுபவிக்கிறது.குடும்ப உறவு முறைகளில் காணப்படும் வேறு வேறுவிதமான பற்றுப் பாசத்திற்கும் அதனால் ஏற்படும் உணர்வுகளுக்கும் கோர்மேன்களே காரணமாகின்றன.அனுபவித்தலில் மனிதன் உணர்ச்சி வசப்பட்டு தோலினாலும், உடல் உறுப்புகளினாலும் அனுபவிக்கும் மனம் சார்ந்த உடல் சார்ந்த இன்பத்தை மனிதன் விரும்புகிறான்.காதலும் காமமும் இல்லையெனில் இனவிருத்தியே இல்லாமல் போய்விடும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஈர்ப்பு, பிளஸ் மைனஸ் என்ற குறியீட்டு வரையறை ஊடாக இது ஏற்படுகின்றது.காதல் வசப்படும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் ஈர்ப்புச் சக்திக்கு மனிதன் ‘காதல்’ எனப் பெயரிட்டு புனிதப்படுத்தியுள்ளான். காமத்தின் உந்துதலால் எற்படும் உணர்ச்சியூடாக  ஆணும் பெண்ணும் மேற்கொள்ளும் உடல் உறவே இனவிருத்திக்கு வழிவகுக்கின்றது. இந்த உறவின் போது, கோர்மோன்களில் செயல்பாட்டால் ஏற்படும் நரம்பலைகளின் இன்ப அதிர்வே உடல் உறவு கொள்ளும் ஆசையை அணுக்கும் பெண்ணுக்கும் தூண்டுகிறது. இந்த இன்பவுணர்ச்சி  அனுபவித்தல் மனிதனுக்கு இல்லையெனில் இனவிருத்தி என்பதே இந்த உலகில் இருக்கவே இருக்காது. எவ்வித உணர்வோ உணர்ச்சியோ இல்லாது இயந்திரம் போன்று ஆசைகளற்ற நடைப்பிணமாக மனிதனால் வாழவே முடியாது.ஒரு உதாரணத்திற்கு, காதலனும் காதலியும் அருகருகே உட்கார்ந்திருக்கும் போது அவர்களின் உடல் உரசிக்கொள்ளும் போது ஸ்பரிச உணர்வினால் இருவரும் இன்பத்தை அனுபவிக்கின்றனர். புன்னகைத்து தலைமுடியை பின்னால் தள்ளிவிட்டு தலைதிருப்பிப் பார்க்கும் காதலியின் பார்வையால் காதலன் வானத்தில் பறப்பான்.இருவரின் நாசித்துவாரங்களில்  இருந்து வரும் சூடான சுவாசம் அவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும். காதலியின் உடலிலிருந்து வரும் வாசனையை விலைமதிக்க முடியாத வாசனைத்திரவியமாக ஆசை கொள்ள வைத்து, அவனின் உடலில் அவ்வேளை தோன்றியிருக்கும் கோர்மோன்கள் அவனை வசப்படுத்தும்.தனது காதலனுடன் பேசும்போது அவன் வாயிலிருந்து வரும் சிகரட்புகை வாசமோ, வியர்வை வாசனையோ காதலியை கிறங்க வைக்கும்.
காதலன் காதலியாகவோ,கணவன் மனைவியாகவோ இணைவு நிலைக்குள்ளாகும் ஆணும் பெண்ணுமே மனித உயிரினத்தின் தோற்றுவாயாக தொடக்கப்புள்ளியாக அனுபவித்தலுக்குக்  காரணமாகின்றனர். இங்கிருந்துதான் மனிதப் பெருக்கம் ஆரம்பிக்கிறது.இதற்கு தொடரான ஊக்கவிசையாக இருப்பது மனித உடலின் உருவாக்கத்திற்குக் காரணமான மூலகங்களும் அந்த மூலகங்களினால் பெறப்பட்ட கோர்மேன்களான வேதியல் பொருள்களுமேயாகும். இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக இருப்பது இயற்கையே. மனிதனை அனுபவிக்க வைப்பதும் இயற்கையே.ஆனால் மனிதன் எவ்வித உணர்வுகளையோ உணர்ச்சிகளையோ ஆசாபாசங்களையோ கொண்டிராத மின்னணுக்களால் இயக்கப்படும் இயந்திரப் பிண்டங்களாக நிலைமாறும் காலத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கியுள்ளான். இயற்கையாலும் அங்கிருந்து பெறப்பட்ட மூலகக்கூற்று வழிவந்த கோர்மொன்களாலும் அனுபவித்து தானாக இயங்காத மனிதனாக இயக்கப்படும் நடைப்பிணமாக அவனையே அவனுக்குத் தெரியாத சூனிய இருளை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளான். முழு மனித குலத்தையும் மின்காந்த அலைகள் ஊடாகவும், மின் அணுக்கள் ஊடாகவும் இயங்க வைக்கும் சக்தி விஸ்வரூபம் பெற்று வளர்ந்து வருகின்றன. ஒரு மனிதனுக்கு இருக்கும் பசி,ருசி, ஆசை, காதல்,காமம், பந்தபாசம்,பற்று போன்ற உணர்வுகளும், உணர்ச்சிகளுந்தான் அவனை வாழ வைக்கின்றன. அவை இல்லையேல் அவன் நடைப்பிணமே. நாளொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களும் தடையில்லா கணிணி நவீனமும்,உலகைக் கைக்குள் அடக்கிவிட்டதாக மமதை கொண்டு கைகளிலும் பைகளிலும் கொண்டு திரியப்படும் கைத்தொலைபேசிகளும்,வீடு எங்கினும் வியாபித்திருக்கும் தொலைத்தொடர்புச் சாதனங்களும் அவற்றால் எழும் காந்த அலைகளும் படிப்படியாக மெதுமெதுவாக கார்மோன் சுரப்பிகளையும் மூளை தொட்டு நரம்பு மண்டலங்களை சிதைத்தும் அழித்தும் வருகின்றன.
விஞ்ஞானிகள் கணிணி,கைத்தொலைபேசிகளின் புதியபுதிய மென்பொருள்களைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றைக் கொண்டு பாவனையாளர்களை தமது கட்டுப்பாட்:டுக்குள் கொண்டுவரத் தொடங்கிவிடுவர்.கண்டு பிடிப்பாளர்களும் முதலீட்டாளர்களும் சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களும் சத்தமில்லாமல் மனிதர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரிகளாக இயங்கத் தொடங்கிவிடுவர்.உல மனிதர்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இயக்கும் சக்தியாக இவர்கள் உருப்பெறுவார்கள். உலகத்தை இயக்கும், அந்தந்த நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக 13 மிகப்பெரும் கோடிகளுக்கும் அப்பால் பணமும் ஆளுமை பலமும் கொண்டவர்கள் இருப்பதாக அறியப்படுகின்றது. இவர்களுடன் விஞ்ஞானச் சர்வாதிகாரிகள் கைகோர்த்துவிடுவார்கள்.
உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கோர்மோன்கள் தீர்மானிப்பதை, செயலூக்கம் கொடுப்பதைத் தவிர்த்து எமது கைகளிலும் பைகளிலும் வீட்டு மேசைகளிலும் இருக்கும் கைத்தொலைபேசிகளின் மென்பொருள்கள் வெளிப்படுத்தும் காந்த அலைகள் தீர்மானிக்கும்.பசித்து ருசித்து சாப்பிடும் கோர்மோன்களின் இணைஎதிர்வினைச் செயலை சிதை;து மின்காந்த அலைகள் பசிக்காமல் ருசியறியாமல் சாப்பிட மூளைக்கலங்கள் ஊடாக ஆணையிடும் நிலை தோன்றும். காதலுக்கு சி மாற்றுப்  பாலியல் ஈர்ப்பு இல்லாமல் போய்விடும். ஆண் பெண் தமது பாலியல் உறுப்புகள் மூலம் தொடர்பு கொண்டு இன்பத்தை அனுபவித்து இனவிருத்தி செய்யும் நிலை சிதைந்து எவ்வித உணர்வோ உணர்ச்சியோ அற்ற நிலையில் குழந்தைகளைப் பெறுவார்கள். இதனை ஆணையாக மின்காந்த அலைகள் கட்டளையிடும்.மனிதர்கள் அனைவரும் கோர்மோன் ஊற்றுச் சிதைவுக்கு உட்பட்டு விஞ்ஞானச் சர்வாதிகாரிகளால் மந்திரித்து விடப்பட்ட மனிதர்களாக மாறுவார்கள். இது மனித இனத்தின் பேரழிவிற்கான முதல் படியாகும். கருணை அற்ற மனித உயிரினமாக ஒப்புக்கு வாழும் மனிதர்களாக ரோபோ போன்று ஒவ்வொரு மனிதனும் நடமாடத் தொடங்குவான்.கோர்மோன்களின் சிதைவு மனித குலத்தின் அழிவாகும்.மனித உடலின் இயக்கவிசையாக ஊற்றுக்கண்ணாக இருக்கம் வேதியல் பொருளான கோர்மன்களை சிதைவுறாமல் தடுக்கவும், மனித உடலுக்குளஇ தக்க வைப்பதற்கும் மனிதகுலம் அதீத விஞ்ஞானத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. மனித உடலின் எதிர்காலம் கேள்விக்குறியே?!.
Share this Post:
மனித உடலின் எதிர்காலம்! — – } ஏலையா க.முருகதாசன். Reviewed by on February 13, 2017 .

மனிதனின் உடலில் இருக்கும் தோல் தொட்டு அனைத்து உறுப்புக்களும் பூமியிலிருக்கும் மூலகங்களால் ஆக்கப்பட்டவையே. உடல் இயக்கம் வேதியல் மாற்றங்களினாலும் மூளை என்ற அதிநுட்ப தொழிற்சாலையாலும் அவற்றோடு இணைந்த நரம்பு மண்டலங்களாலும் நடைபெறுகின்றது.வெளித்தோற்றத்தில காணப்படும் தோல் உட்பட அனைத்து உறுப்புகளும் அனுபவித்தலுக்காக பயன்படுகின்றன.மனிதன் அனுபவித்து வாழ ஆசைப்படுகிறான். மகிழ்ச்சியாக வாழ்வதற்கே ஒவ்வொரு மனிதனும் அதற்கு எதிராக, தடையாக நிற்கும் துன்பச் சுவர்களை தகர்த்தெறிவதற்காக வாழ்நாள் முழுவதும் போராடுகிறான்.கண்களால் காட்சிகளையும், காதுகளால் ஓசையையும், மூக்கினால் வாசனையையும், நாக்கினால் ருசியையும், உடல்

ABOUT AUTHOR /