ரம்புடன் உருத்திரகுமாரனை சிண்டு முடியும் சிங்கள அரச ஆதரவு ஊடகம் !

 ›  ›  › ரம்புடன் உருத்திரகுமாரனை சிண்டு முடியும் சிங்கள அரச ஆதரவு ஊடகம் !

உலகம்,செய்திகள்+

ரம்புடன் உருத்திரகுமாரனை சிண்டு முடியும் சிங்கள அரச ஆதரவு ஊடகம் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களை அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரம்புடன் சிண்டுமுடியும் முனைப்பில் சிங்கள அரச ஆதரவு ஊடகமொன்று ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவே முதன்மை – அமெரிக்கர்களே முதன்மை எனும் அமெரிக்காவின் புதிய அதிபர் ரொனால்ட ரம்பின் நிர்வாக கொள்கைக்கு மாறாக, அமெரிக்க வாசியான வி.உருத்திரகுமாரனின் கொள்கை அமைந்துள்ளதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் கொடியினை முன்னிறுத்திக் கொண்டுள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒர் அரசாங்கத்தினை அமெரிக்காவுக்குள் இருந்து கொண்டு நடத்துவது, அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல் சாசனத்து முரணானது என அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது குறித்து கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க தரப்பு, இவ்வாறு சிங்கள அரசாங்கமோ அல்லது சிங்கள ஆதரவு சக்திகளோ புதிதல்ல.
தமிழ் மக்களுடைய உண்மையான உரிமைப் போராட்டத்தினை ஓர் பயங்கரவாதமாக சித்தரித்து, தனது அரச பயங்கரவாதத்தினையையும், தனது இனவாத, இனவழிப்பு முகத்தினையும் சிங்கள அரசு மூடிமறைத்து வருகின்றமை வழமையான ஒன்று.
தற்போது சிங்களத்தின் இனவழிப்பு முகம் உலக அரங்கில் அம்பலமாகி வரும் நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, அனைத்துலக வெளியில் உள்ள சனநாயக விழுதியங்களுக்கு அமையவும், அனைத்துலக சட்டங்களுக்கு அமையவே செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.
Share this Post:
ரம்புடன் உருத்திரகுமாரனை சிண்டு முடியும் சிங்கள அரச ஆதரவு ஊடகம் ! Reviewed by on February 11, 2017 .

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களை அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரம்புடன் சிண்டுமுடியும் முனைப்பில் சிங்கள அரச ஆதரவு ஊடகமொன்று ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவே முதன்மை – அமெரிக்கர்களே முதன்மை எனும் அமெரிக்காவின் புதிய அதிபர் ரொனால்ட ரம்பின் நிர்வாக கொள்கைக்கு மாறாக, அமெரிக்க வாசியான வி.உருத்திரகுமாரனின் கொள்கை அமைந்துள்ளதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் கொடியினை முன்னிறுத்திக் கொண்டுள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒர் அரசாங்கத்தினை

ABOUT AUTHOR /