மாணவர்கள் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்க! ( வீடியோ )

 ›  ›  › மாணவர்கள் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்க! ( வீடியோ )

செய்திகள்+,முகநூல்

மாணவர்கள் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்க! ( வீடியோ )

ஒருபுறம் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு ஆட்டோவுக்குத் தீ வைக்கிறார் ஒரு பெண்காவலர். மறுபுறம் காவலர்கள் கூட்டமாகச் சென்று, வண்டிகளை அடித்து நொறுக்குகின்றனர், பெண்கள் கையில் இருக்கும் தண்ணீர்க் குடத்தைப் பிடுங்கி உடைக்கின்றனர், வாசலில் நிற்பவர்களை அடிக்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அராஜகம்!

உலக மக்களே பாருங்கள் … பாசிச இந்திய அரசின் தூண்டுதலில் , திராவிட அரசின், மலையாளி காவல் துறை அதிகாரிகள் தூண்டுதலில் காவல் துறை பெண்மணி வீடுகளுக்கு தீ வைக்கும் அதிர்ச்சி காட்சி !!அன்று மாணவிகளை பஸ்சில் வைத்து தீ கொழுத்தியதும் திராவிட கட்சிகள் தான் …வீதிக்கு வந்து அற போராட்டத்தால் திராவிட அரசை தூக்கி எறிவோம் !! தமிழகத்தில் நமக்கான ஒரு தமிழ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இப்படி நடக்குமா ???

Posted by Madhana Rajan on Monday, January 23, 2017

எப்படி அமைதியான போராட்டக்களத்தில் விஷமிகள் ஊடுறுவியதாகச் சொல்லப்படுகிறதோ அதேபோல மக்களைக்காக்க உறுதிபூண்ட காவல்துறையிலும் ரௌடிகள் உண்டு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களில் பலதரப்பட்ட கட்சி விசுவாசிகளும், கொள்கை ஏற்பாளர்களும், காசுக்கு விலைபோகும் மனிதர்களும் இருக்கக்கூடும்.

போராட்டத்தின்போது எப்படியும் கலவரம் தானே வெடிக்கும் என்று காத்திருந்திருப்பார்கள். அது நடக்கவில்லை. மக்களும் இளைஞர்களும் அறவழியை மேற்கொண்டு அவர்கள் நினைப்பில் மண்ணை அள்ளிக்கொட்டினர். நிலைமை சற்று பதட்டமானதும், இதுதான் உகந்தநேரம் என இவர்கள் தாமும் கலவரத்தில் இறங்கியுள்ளதுபோல் தெரிகிறது.

செல்போனும், சமூக வலைத்தளங்களும் இல்லாத காலமெனில் இவையனைத்துமே போராட்டக்காரர்கள் செய்த வன்முறை என்று அவர்கள் தலையில் பழியைக் கட்டிவிட்டிருக்கக்கூடும். காலம் மாறிற்று! மக்களே மக்கள் செய்தியாளர்களாகச் செயல்படுகின்றனர்; உண்மைகள் உடனுக்குடன் காணொளி ஆதாரத்தோடு வெளியாகின்றன என்று தெரிந்தும்கூடக் காவல்துறையினரில் சிலர் இவ்வளவு துணிச்சலோடு கேவலமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது. சம்மந்தப்பட்ட காவலர்களை அடையாளம் கண்டு அவர்கள் மேல் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Share this Post:
மாணவர்கள் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்க! ( வீடியோ ) Reviewed by on January 24, 2017 .

ஒருபுறம் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு ஆட்டோவுக்குத் தீ வைக்கிறார் ஒரு பெண்காவலர். மறுபுறம் காவலர்கள் கூட்டமாகச் சென்று, வண்டிகளை அடித்து நொறுக்குகின்றனர், பெண்கள் கையில் இருக்கும் தண்ணீர்க் குடத்தைப் பிடுங்கி உடைக்கின்றனர், வாசலில் நிற்பவர்களை அடிக்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அராஜகம்! உலக மக்களே பாருங்கள் … பாசிச இந்திய அரசின் தூண்டுதலில் , திராவிட அரசின், மலையாளி காவல் துறை அதிகாரிகள் தூண்டுதலில் காவல் துறை பெண்மணி வீடுகளுக்கு தீ வைக்கும் அதிர்ச்சி காட்சி !!அன்று

ABOUT AUTHOR /