நினைத்தது ஒன்று! நடந்தது ஒன்று!! — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  › நினைத்தது ஒன்று! நடந்தது ஒன்று!! — } சங்கர சுப்பிரமணியன்.

கட்டுரைகள்

நினைத்தது ஒன்று! நடந்தது ஒன்று!! — } சங்கர சுப்பிரமணியன்.

தமிழரை கிள்ளுக்கீரை என்று நினைத்து வருகிறார்கள். அதனால்தான் அவர்களை
எல்லா வகையிலும் எல்லோரும் அசட்டை செய்கிறார்கள். தமிழரும் அதற்காக
பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இந்த அலட்டிக்கொள்ளா தன்மையை தப்பாக
எடுத்துக்கொள்ள முடியாது.
“ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும்
வாடியிருக்குமாம் கொக்கு” என்றான் பொய்யாமொழிப் புலவன்.
உரிமை கேட்கும் தமிழரை ஒடுக்கிவிடலாம் என்ற தவறான எண்ணத்தை தமிழர்
வாழும் இடங்களில் எல்லாம் கடைப்பிடிக்கிறார்கள். காவிரி நதிப்பிரச்சனையை
கையிலெடுத்தால் கர்நாடகவாழ் தமிழர்களைத் தாக்குகிறார்கள். முல்லைப்
பெரியாறு விவகாரமா கேரளாவாழ் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். செம்மரக்
கடத்தலா? அதற்கு மூலகாரணத்தை அறியாமல் அப்பாவித் தமிழர்களை சிக்கவைத்து
சிறைபிடிக்கிறார்கள். அல்லது சுட்டுக் கொள்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? தமிழரை என்னசெய்தாலும் தட்டிக்கேட்க ஆளில்லை
என்ற காரணமா? அப்படித்தான் நினக்க வைக்கிறது. ஏனெனில் தமிழருக்கென போராட
இப்போது தலைவர்கள் இல்லையா? தலைவர்களெல்லாம் நிறையவே இருக்கிறார்கள்.
ஆனால் இங்கே பிரச்சினைகள் தான் வெவ்வேறு. காவிரி பிரச்சினையா அல்ல முல்லைப்
பெரியாறு பிரச்சினையா அணுஉலை பிரச்சினையா அல்ல மீத்தேன்வாயு விவகாரமா
இதெல்லாம் தமிழர் பிரச்சினை என்று எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக எல்லா
தலைவர்களும் ஒன்றாய் இணைந்து இது தமிழர்சார்ந்த பிரச்சினை என எண்ணி
போராடுவதில்லை. மாறாக தனித்தனியாக தம்பங்குக்கு அறிக்கை கொடுத்துவிட்டு
வேறு யாராவது தீர்த்துவைப்பார்கள் என ஒதுங்கிக் கொள்கிறார்கள். காரணம் ஒன்று
கூடிப்போராடினால் தனக்கு என்ன பெயர் வந்து விடப்போபொகிறது? அதனால் நமக்கு
என்ன பயன் என்ற எதிர்பார்ப்பே எல்லோரிடத்தும் இருக்கிறது. தமிழர் எக்கேடு கெட்டால்
நமக்கென்ன என்ற இனவுணர்ச்சியற்ற நிலைக்கு தள்ளபபட்டுள்ளார்கள்.
அடுத்ததாக தன்மானப்பிரச்சினை. அந்ததலைவர் முன்னெடுத்துச்சென்ற செயலுக்கு நாம்
ஏன் துணைபோகவேண்டும். அச்செயல் வெற்றிபெற்றால் அவருக்குத்தானே பெயரும்
புகழும் செல்லும் என்ற காழ்ப்புணர்ச்சி. இதனால் தமிழருக்கு நல்லது நடக்கிறதே என்ற
நல்லெண்ணமோ அவருக்கு புகழ் வந்தால் வந்துவிட்டுப் போகட்டுமே என்ற பரந்தமனப்
பான்மையோ சிறிதளவும் இல்லாமல் போய்விட்டது.
இந்தநிலையில் இன்னொரு கூத்தும் இங்கு நடக்கிறது. அதுதான் தமிழர் தம்தலையிலே
மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வது. எப்படி என்று கேட்கிறீர்களா? நாம் மதம், சாதி,
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், கற்றவன், கல்லாதவன் என்றெல்லாம் பிரிவை
ஏற்படுத்தி ஒற்றுமையைத் தொலைத்து நம்தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக்
கொண்டோம். இன்னும் ஒருபடி மேலேபோய் நாம் எங்கிருந்தாலும் நாம் அனைவரும்
தமிழரே என்ற எண்ணம் ஏற்படாமல் அவன் அந்த நாட்டை சேர்ந்தவன் இவன் இந்தநாட்டை
சேர்ந்தவன் என்று எண்ணுகிறோம். அந்தநாட்டுக்கரனைவிட  நாம்தான் நன்றாய் படித்தவர்கள்
என்று இந்தநாட்டவனும் இந்தநாட்டவனைவிட நாம்தான் சிறந்த அறிவாளிகள் என்று அந்த
நாட்டவனும் என்று எண்ணிக் கொள்வதும் நம் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது.
இப்படி நமக்குள்ளேயே ஏற்றதாழ்வை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் விலகி நிற்பது
நம் உரிமையை பறிக்க நினைப்பவர்களுக்கு உதவியாய் இருக்கிறது. அவர்கள் நமக்குள்ள
இந்த முரண்பட்டைப் பயன்படுத்தி நமக்குள்ளே சிண்டுமூட்டி நம்மை பலவீனப்படுத்தி
நம்போராட்ட குணத்தை வலுவிழக்கச்செய்து அந்தசந்தர்ப்பத்தில் நம் உரிமையை எளிதில்
தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்படித்தான் நம் உரிமைகளை ஒவ்வொன்றாய் தட்டிப்பறித்தார்கள்.
இதே மனப்பான்மையுடன் தான் இந்த ஏறேஉதழுவல் விசயத்திலும் தங்கள் சாமர்த்தியத்தை
காட்டியிருக்கிறார்கள்.
ஆனால் நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு அதனாலே முழிக்குது அம்மாப்பொண்ணு என்ற
கதையாக முழித்துக்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி. அவர் எதிர்பார்த்தது ஒவ்வொரு
தலைவரும் ஆளுக்கொரு அறிக்கையை விடுவார்கள். தனித்தனியாக வெவ்வேறு நாட்களில்
கட்சித்தொண்டர்களுடன் கட்சிகொடியோடு போராட்டம் நடத்தி யார் அதிகக்கூட்டத்தை திரட்டினோம்
என்று பலத்தைமட்டும் காட்டிவிட்டு தம்வேலையைப் பார்க்கப்போய் விடுவார்கள். மிஞ்சிப்போனால்
காலையில் சிற்றுண்டியை முடித்துவிட்டு வந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்து இரவு உணவுக்கு
தயாராக உண்ணாவிரதத்தை முடித்துவிடுவார்கள். இதைத்தான் வலைவிரித்தவர்களும் மற்றவர்களும்
எதிர்பார்த்தார்கள்.
ஆனால் வாடியிருந்த கொக்குக்கு இப்போதுதான் உறுமீன் கிடைத்துள்ளது. காவிரி, முல்லைப்பெரியாறு,
அணுஉலை போன்றவற்றால் எல்லாம் நமக்கு இழப்புத்தான். ஆனால் மொழி, பண்பாடு என்பது
நமக்கு உயிர். இதை நம்வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. தமிழ்மொழியை இரண்டாம்தரமாக்கி
இந்தியைபுகுத்த நினைத்த காங்கிரஸ் கட்சியை அவர்கள் நாட்டிற்கே விடுதலை வாங்கித்தந்தவர்கள்
என்றாலும் நம் மொழிமேல் கைவைத்ததால் அவர்களை தமிழ்நாட்டை விட்டே விரட்டியடித்தார்கள்.
அந்த இந்தி எதிப்புப்போராட்டத்தில் எத்ததனையோ தமிழர் தம் இன்னுயிரை ஈன்று மொழிகாத்தார்கள்.
அதே நிலைதான் இப்போதும். இன்று நம் பண்பாட்டை அழித்திட பாரதிய ஜனதா காட்சி வந்திருக்கிறது.
இவர்கள் தமிழ்நாட்டில் காலெடுத்து வைக்குமுன்னே தமிழரின் பண்பாட்டை குழிதோண்டிப் புதைக்க
முடிவெடித்திருக்கிறார்கள். ஒருவேளை தமிழ்நாட்டின் ஆட்சிபீடத்தைப் பிடித்தால் என்னென்னவெல்லாம்
செய்வார்கள் என்பதை தமிழர் அனைவரும் அறிவர்.
1967ல் இந்தியை திணிக்கவந்த காங்கிரஸ் கட்சிக்கு சாவுமணி அடித்து பழம்பெரும் தலைவர்
காமராஜையே தோற்கடித்தது மாணவர் எழுச்சியே. அதே மாணவர் எழுச்சிதான் இன்று ஏறுதழுவலுக்கும்
வீறுகொண்டு எழுந்துள்ளது. தலைவர்கள் செய்யத்தவறிய செயலை தன்மானச் சிங்கங்களாம் மாணவர்
படை கையிலெடுத்து போராட்டத்தில் குதித்துள்ளது. மாணவர்களுக்கு எவ்விதமான உள்நோக்கமும்
கிடையாது. அதனால் அவர்களுக்கு சிறியவர் பெரியவர் என்று சமுதாயத்தின் எல்லாத்தளத்து மக்களும்
தோள்கொடுத்து துணைநிற்கிறார்கள். இதை எந்த அரசியல் அமைப்பும் எதிர்பார்க்கவில்லை. இந்த
ஏறுதழுவலை வைத்து எந்தஅளவுக்கு அடுத்த தேர்தலுக்கு காயை நகர்த்தலாம் என்ற கணக்கெல்லாம்
மண்ணாய் போயிற்றே என்ற அதிர்ச்சியில் உறைந்துபோனாலும் தனிமைப்பட்டு விடக்கூடாது  என்று
எல்லாதலைவர்களும் கட்சிகளும் மாணவர்களுடன் இணைந்து போராடத் தொடங்கியுள்ளார்கள்.
இச்சூழலில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அது பிரதமர் மோடிக்கு அரசியல் சாணக்கியம் எந்த
அளவுக்கு உள்ளது என்பதுதான். தமிழ்நாட்டில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சியால் ஐம்பது
ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்துக்கும்
அவர்கள்செய்த துரோகம்தான் அவர்களுக்கு அந்தநிலை. இது தெரியாதா மோடிக்கு. அவர்களாவது தமிழ்
நாட்டை ஆண்டுகொண்டு தங்கள் திட்டத்தை நிறைவேற்ற முயன்றார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாட்டில் இன்னும் சரியாக காலூன்றவேயில்லை. அதற்குள்ளேயே தமிழர் விரோத நிலைப்பட்டை
எடுத்து தமிழர் பண்பாட்டுடன் விளயாடினால் தமிழ்நாட்டில் அக்கட்சி இனிமேல் காலூன்றமுடியுமா?
இதையெல்லாம் நினைத்துப் பார்க்காதவரா திரு. மோடி. ஒருவேளை தமிழ்நாட்டில் காலூன்றமுடியாது
என்று தெரிந்தே தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றாரோ? எது எப்படியோ யாரும்
எதிர் பார்க்காதது போல் திரு, மோடி அவர்களும் எதிர்பார்க்கவில்லை.
கருப்புபணத்தை ஒழிக்கிறேன் என்ற நல்ல எண்ணத்துடன் செயல்பட்டாலும் தகுந்த முன்னேற்பாடின்றி
செயல்பட்டதால் இன்னும் நாட்டு மக்கள் சொல்லொனாத்துயரத்தை அடைந்துவருகிறார்கள். இப்போது
தெரிந்தோ தெரியாமலோ தமிழரை தப்பாக எடைபோட்டதால் தேன்கூட்டுக்குள் கையைவிட்டுவிட்டார்.
புலிவாலைப் பிடித்துவிட்டார். புலி அவரை அடிக்கிறதா அல்லது அவர் புலியை அடிக்கிறாரா என்பது கூடிய
சீக்கிரம் தெரிந்துவிடும்.
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
நினைத்தது ஒன்று! நடந்தது ஒன்று!! — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on January 21, 2017 .

தமிழரை கிள்ளுக்கீரை என்று நினைத்து வருகிறார்கள். அதனால்தான் அவர்களை எல்லா வகையிலும் எல்லோரும் அசட்டை செய்கிறார்கள். தமிழரும் அதற்காக பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. இந்த அலட்டிக்கொள்ளா தன்மையை தப்பாக எடுத்துக்கொள்ள முடியாது. “ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு” என்றான் பொய்யாமொழிப் புலவன். உரிமை கேட்கும் தமிழரை ஒடுக்கிவிடலாம் என்ற தவறான எண்ணத்தை தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் கடைப்பிடிக்கிறார்கள். காவிரி நதிப்பிரச்சனையை கையிலெடுத்தால் கர்நாடகவாழ் தமிழர்களைத் தாக்குகிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரமா கேரளாவாழ் தமிழர்கள்

ABOUT AUTHOR /