ஏறுதழுவல் எல்லோராலும் ஏற்றம் தழுவட்டும்!

 ›  › ஏறுதழுவல் எல்லோராலும் ஏற்றம் தழுவட்டும்!

கவிதைகள்

ஏறுதழுவல் எல்லோராலும் ஏற்றம் தழுவட்டும்!

ஏறுதழுவல் வதையென்று சொல்லும் அமைப்பு
ஏறுமேல் அமர்வதும் வதையென்று சொல்லியே
அவர்வாழும் ஆலயத்தில் வாகனத்தை அகற்ற
வேண்டுமென்று விரும்பிச்சொன்னால் நீங்கள்
வெறுமனேநின்று விரும்பி பார்த்து மகிழ்வீரோ
காளையது சிலையாய் ஆலயத்தில் இருந்தாலும்
வதையென சொல்லி ஏறுதழுவலை பழித்ததுபோல்
இழிவென்று சொல்லியதை எடுத்திட சொன்னால்
அப்போதுதான் நீங்கள் வீதியிறங்கி போரிடுவீரோ
சிறுகுழந்தை முதல் மாணவரென போராடயிலே
தமிழினத்தை வைத்தே வாழும் மதப்பெரியோரே
இனமழிந்து போனதென்றால் எவருக்கிங்கு பூஜை
ஆதலால் மதப்பெரியொரே நம்மினப் பற்றிருந்தால்
வீதியில் இறங்கி பாரம்பரியம் காக்க உம்பங்கை
காட்டிட இறங்கிடுவீர் களமதிலே இல்லையெனில்
நீவிர் நம்மினமல்ல என்றே தூற்றிட இடமளிப்பீர்
வதையென்று சொல்லி வாழும் இனக்கருவறுப்போர்
இழிவென சொல்லி பறவையை துணைக்கழைப்பார்
கருடன்மேல் கடவுள் இருத்தல் இழிவென்று சொல்லி
கருடவாகனம் அகற்ற சொல்லும் நாள் தூரமில்லை
மதத் தொடர்புடையோரே தமிழர் பூஜைக்குமட்டுமல்ல
அவர் உணர்வுக்கும் மதிப்பபளிப்பீர் இல்லையெனில்
இனம் உமக்கு முக்கியமல்ல என்பதாய் எண்ணப்படும்!
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
ஏறுதழுவல் எல்லோராலும் ஏற்றம் தழுவட்டும்! Reviewed by on January 20, 2017 .

ஏறுதழுவல் வதையென்று சொல்லும் அமைப்பு ஏறுமேல் அமர்வதும் வதையென்று சொல்லியே அவர்வாழும் ஆலயத்தில் வாகனத்தை அகற்ற வேண்டுமென்று விரும்பிச்சொன்னால் நீங்கள் வெறுமனேநின்று விரும்பி பார்த்து மகிழ்வீரோ காளையது சிலையாய் ஆலயத்தில் இருந்தாலும் வதையென சொல்லி ஏறுதழுவலை பழித்ததுபோல் இழிவென்று சொல்லியதை எடுத்திட சொன்னால் அப்போதுதான் நீங்கள் வீதியிறங்கி போரிடுவீரோ சிறுகுழந்தை முதல் மாணவரென போராடயிலே தமிழினத்தை வைத்தே வாழும் மதப்பெரியோரே இனமழிந்து போனதென்றால் எவருக்கிங்கு பூஜை ஆதலால் மதப்பெரியொரே நம்மினப் பற்றிருந்தால் வீதியில் இறங்கி பாரம்பரியம் காக்க

ABOUT AUTHOR /