வணங்குகின்றேன் மகிழ்வுடனே! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

 ›  › வணங்குகின்றேன் மகிழ்வுடனே! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

கவிதைகள்

வணங்குகின்றேன் மகிழ்வுடனே! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

மடிமீது நான்கிடக்க
மலர்ந்தவிழி தனைப்பார்த்து
குடிமுழுதும் காக்கவந்த
குலசாமி எனவழைத்து
விரல்சூப்பும் எனைரசித்து
வேதனைகள் தனைமறக்கும்
எனதருமை அம்மாதான்
எப்போதும் என்தெய்வம் !

என்கண்ணில் நீர்கண்டால்
ஏங்கியவள் தவித்திடுவாள்
என்சிரிப்பைப் பார்த்தவுடன்
எல்லாமே மறந்திடுவாள்
என்எச்சில் தனையவளும்
இன்னமுது எனநினைப்பாள்
எப்படிநான் துப்பிடினும்
இருகரத்தால் ஏந்திநிற்பாள் !

பிடிவாதம் பிடித்தாலும்
பெருங்குறும்பு செய்தாலும்
கடிகின்ற உணர்வகற்றி
கருணையுடன் எனைவணைப்பாள்
அடியுதைகள் நான்கொடுக்க
அவள்மடியைத் தந்துநிற்கும்
அன்புநிறை அம்மாவே
அவனிதனில் என்தெய்வம் !

கோவிலுக்குச் சென்றாலும்
குலதெய்வம் பார்த்தாலும்
சாமியென அம்மாதான்
சன்னதியில் தெரிகின்றாள்
தூய்மைநிறை மனமுடையாள்
துன்பமெலாம் தாங்கிடுவாள்
வாய்மைநிறை அம்மாவை
வணங்குகின்றேன் மகிழ்வுடனே !

Share this Post:
வணங்குகின்றேன் மகிழ்வுடனே! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. Reviewed by on January 18, 2017 .

மடிமீது நான்கிடக்க மலர்ந்தவிழி தனைப்பார்த்து குடிமுழுதும் காக்கவந்த குலசாமி எனவழைத்து விரல்சூப்பும் எனைரசித்து வேதனைகள் தனைமறக்கும் எனதருமை அம்மாதான் எப்போதும் என்தெய்வம் ! என்கண்ணில் நீர்கண்டால் ஏங்கியவள் தவித்திடுவாள் என்சிரிப்பைப் பார்த்தவுடன் எல்லாமே மறந்திடுவாள் என்எச்சில் தனையவளும் இன்னமுது எனநினைப்பாள் எப்படிநான் துப்பிடினும் இருகரத்தால் ஏந்திநிற்பாள் ! பிடிவாதம் பிடித்தாலும் பெருங்குறும்பு செய்தாலும் கடிகின்ற உணர்வகற்றி கருணையுடன் எனைவணைப்பாள் அடியுதைகள் நான்கொடுக்க அவள்மடியைத் தந்துநிற்கும் அன்புநிறை அம்மாவே அவனிதனில் என்தெய்வம் ! கோவிலுக்குச் சென்றாலும் குலதெய்வம் பார்த்தாலும்

ABOUT AUTHOR /