கச்சைத்தீவு கதை விமர்சனத்துக்கு ஆசிரியரின் பதில்.

 ›  › கச்சைத்தீவு கதை விமர்சனத்துக்கு ஆசிரியரின் பதில்.

வாசகர்கள்

கச்சைத்தீவு கதை விமர்சனத்துக்கு ஆசிரியரின் பதில்.

அன்பின் வாசகர் அண்டனூர் சுராவுக்கு

 என்னை சிந்திக்க வைத்த தங்கள் விமர்சனத்துக்கு மிகவும் நன்றி. இது போன்ற வாசகர்களின் விமர்சனங்கள் ஒரு எழுத்தாளனின் கற்பனை வளத்துக்கு உரமாகிறது. கதையில் அந்தனிமுத்து, இலங்கை கடற்படையின் கட்டளைக்கு பணியாதலால் சுடப்பட்டான். அவனோடு சென்ற நண்பன் உயிர் தப்பி வந்து நடந்ததை சொன்னதாக கதையில் எழுதியுள்ளேன். அந்தனிக்கு என்ன நடந்தது என்பது தந்தை சூசைக்கு  எப்படி தெரியவந்தது என்பதை சொல்லவே அப்படி சுருக்கமாக எழுதினேன். இதை நீடித்து, அந்தனியயையும் அவன் நண்பனையும் கடற்படை சிறை பிடித்து சித்திரவதைக்கு, உற்பட்டு இருவரும் முடமாகி,வழக்கு நடந்து  விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற வேறுபட்ட கருவில் இன்னோரு சிறுகதையை ஏழுதி முடித்துவிட்டேன். எனது கதைகள் மனித உரிமை மீறல்களை கருவாகக் கொண்டவை. இது போன்ற கதைகளை ஆங்கிலத்திலும் எழுதி இலங்கை பத்திரிகையில் வெளியிட உத்தேசித்துள்ளேன்.Amazon.comயில் எனது ஆங்கில் Sufferings of Innocent Souls என்ற சிறுகதைத் தொகுப்பு  மனித உரிமை மீறல்களைக் கருவாகக் கொண்ட கதைகளை உள்ளடக்கியது. முல்வேலிக்குப் பின்னால் என்ற எனது குறுநாவல் திணணை. கோம்மில் (Thinniai.com)  வெளிவந்தது. இது ஈழப் போருக்குப பின் மணிக் அகதிகள் முகாமில் சிறையிருந்த ஈழத் தமிழ் அகதிகள் பற்றியது. மக்கள் வாசித்தால் அதன் விளைவுகளை உணரக் கூடியதாக கூடியதாக இருக்கும்.

ஒவன் ஒருத்திக்கு மட்டுமே என்ற பிலோமினா- அந்தனிமுத்து காதல் வளர்ந்து, திருமணத்தில் போய் முடிய இருந்தது. அந்தனியின் மரணத்துக்குப் பின் பிலோமினாவின் மனதில் இறைவனைத் தவிர வேறு ஒருவனுக்கு இடமிருக்கிவில்லை. தற்கொலை செய்ததாக எழுதியிருந்தால் அப்பெண்ணை கோழையாக்கியிருப்பேன். சோகமான முடிவு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இது போன்ற எத்தனையோ சோகமான கதைகள் கடும் உழைப்பாளிகளான மீனவர்களின் குடும்பங்களுக்கிடையே உண்டு.

எனது சிறு கதைகளையும் பல தரப்பட்ட கட்டுரைகளையும், கவிதைகளையும் KuviyamCanada.com யில் வாசிக்கலாம்.

மேலும் தொடர்புக்கு

மேலும் தொடர்புக்கு

Kulendiren2509@gmail.com

Share this Post:
கச்சைத்தீவு கதை விமர்சனத்துக்கு ஆசிரியரின் பதில். Reviewed by on January 15, 2017 .

அன்பின் வாசகர் அண்டனூர் சுராவுக்கு…  என்னை சிந்திக்க வைத்த தங்கள் விமர்சனத்துக்கு மிகவும் நன்றி. இது போன்ற வாசகர்களின் விமர்சனங்கள் ஒரு எழுத்தாளனின் கற்பனை வளத்துக்கு உரமாகிறது. கதையில் அந்தனிமுத்து, இலங்கை கடற்படையின் கட்டளைக்கு பணியாதலால் சுடப்பட்டான். அவனோடு சென்ற நண்பன் உயிர் தப்பி வந்து நடந்ததை சொன்னதாக கதையில் எழுதியுள்ளேன். அந்தனிக்கு என்ன நடந்தது என்பது தந்தை சூசைக்கு  எப்படி தெரியவந்தது என்பதை சொல்லவே அப்படி சுருக்கமாக எழுதினேன். இதை நீடித்து, அந்தனியயையும் அவன் நண்பனையும்

ABOUT AUTHOR /