பொங்கலோ பொங்கல்! பொங்கிடும் பொங்கல்!! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  › பொங்கலோ பொங்கல்! பொங்கிடும் பொங்கல்!! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

கவிதைகள்

பொங்கலோ பொங்கல்! பொங்கிடும் பொங்கல்!! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

இயற்கை அன்னை அளித்திட்ட இந்நிலத்தே
காடுதிருத்தி மேடுதிருத்தி நற்கழனியாக்கி
கழனியிலே வளர்ந்த நாற்றை பதமாய்நட்டு
ஓடிவரும் ஆற்றுநீர் தடுத்து அணையும்கட்டி
தடுத்துநீரை பயிர்வளர நன்றாகப் பாய்ச்சி
உரமிட்டு வளர்த்த செந்நெற்பயிரும் அங்கே
கற்றுத்தெளிந்தோர் பண்பால் பணிதல்போல்
கதிர்மணி சுமந்து நெற்பயிரும் கவிழ்ந்திருக்க
கவிழ்ந்த கதிரை அறுத்து களத்தில் அடித்து
கண்டோம் நெல்மணிகள் உழவன் நிலத்தே
சிந்தியுழைத்த வியர்வைத்துளி மணிகளாலே
உழுதுண்டு வாழ்வார்பின் மற்றவரெலாம்
செல்லும்நிலை சொன்னவரை நினைவிறுத்தி
உழவருக்கு நன்றிசொல்லி பொங்கலிடுவோம்
நன்றி மறப்பது நன்றன்று என்றார் நம்பாட்டன்
அதைசிரமேற்று நாமும் வாழ்வில் நடப்பதாலே
கதிர்வளர செங்கதிரோனின் கதிர் உதவியதால்
பொங்கலிட்டு மகிழ்ந்தே நன்றி சொல்வோம்
இப்புவியில் நாமும் காப்பவனாம் கதிரவனுக்கே
பண்பாட்டை சிதைக்க யார்வரினும் நாம்விடோம்
உழவுக்கு உறுதுணையாய் நின்ற காளைகட்கும்
நன்றிசொல்ல ஏறுதழுவி அதைக்காட்டிடுவோம்
மல்யுத்தம் என்றுசொன்னால் மனிதன்மனிதனோடு
விளையாடும் விளையாட்டே மனிதவதையாமோ
மனிதன் மாட்டைமதித்து அதனுடன் விளையாடும்
விளையாட்டும் மாற்றாய் மிருகவதையாகிடுமோ
தமிழரின் உயர்வு நிலைத்திருக்க பொங்கிடுக
தமிழர் தமிழுணர்வும் பொங்கலாய் பொங்கிடுக
தமிழர் பாரம்பரியம் தழைத்திருக்க பொங்கிடுக
தமிழர் பண்பாடு சிதையாதிருக்க பொங்கிடுக
பொங்கலோ பொங்கல் என்றேகூறி மகிழ்வோம்
பொங்கல்தரும் இனிப்புபோல உள்ளமெல்லாம்
பொங்கிடும் ஆனந்தத்தில் நாம் களிப்படைவோம்!
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
பொங்கலோ பொங்கல்! பொங்கிடும் பொங்கல்!! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on January 14, 2017 .

இயற்கை அன்னை அளித்திட்ட இந்நிலத்தே காடுதிருத்தி மேடுதிருத்தி நற்கழனியாக்கி கழனியிலே வளர்ந்த நாற்றை பதமாய்நட்டு ஓடிவரும் ஆற்றுநீர் தடுத்து அணையும்கட்டி தடுத்துநீரை பயிர்வளர நன்றாகப் பாய்ச்சி உரமிட்டு வளர்த்த செந்நெற்பயிரும் அங்கே கற்றுத்தெளிந்தோர் பண்பால் பணிதல்போல் கதிர்மணி சுமந்து நெற்பயிரும் கவிழ்ந்திருக்க கவிழ்ந்த கதிரை அறுத்து களத்தில் அடித்து கண்டோம் நெல்மணிகள் உழவன் நிலத்தே சிந்தியுழைத்த வியர்வைத்துளி மணிகளாலே உழுதுண்டு வாழ்வார்பின் மற்றவரெலாம் செல்லும்நிலை சொன்னவரை நினைவிறுத்தி உழவருக்கு நன்றிசொல்லி பொங்கலிடுவோம் நன்றி மறப்பது நன்றன்று என்றார்

ABOUT AUTHOR /