கிரகப்போர் (பாகம்: 6) — } காசியரின் பேரன்.

 ›  ›  › கிரகப்போர் (பாகம்: 6) — } காசியரின் பேரன்.

கதைகள்,செய்திகள்+

கிரகப்போர் (பாகம்: 6) — } காசியரின் பேரன்.

மாங்கதிர் கிரகத்தின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள விமான நிலையத்தில் பரமசாமியும் சுந்தரியும் வந்திறங்கியதை உணர்ந்து கொண்டார்கள். பூமியைவிட்டு பல்லாயிரம் கோடி மைலகளுக்கப்பால் உள்ள ஒரு கிரகத்தில் தாம் இருக்கிறோம் என்ற உண்மையை அவர்களின் மூளை ஒப்புக் கொண்டாலும் அதை அவர்களால் நம்ப முடியாமலும் இருந்தது.
அவர்களிருவரும் மாங்கதிர் கிராமத்துக்கு வரவழைக்கப்பட்ட மிகவும் முக்கியமான விருந்தினர்களாக அங்குள்ளவர்களால் உபசரிக்கப்பட்டார்கள்.எல்லாவற்றையும் விட ஆச்சரியம் அவர்கள் பூமியில் உள்ள மனிதர்கள் போல் இருப்பதும்,தமிழில் பேசுவதும் அவர்களுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உடைகளும் தமிழர்கள் உடுக்கும் உடைகளாகவே இருந்தன.விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவர்களை இராஜ மரியாதையுடன் அங்குள்ள சிலர் அழைத்துச் சென்றனர்.பூமியை விட்டு வந்திருக்கிறோம் என்பதை அவர்களிருவரும் உணர்ந்த போதும் எதோ ஒரு மந்திரசக்திக்கு கட்டுப்பட்டவர்கள் போல அவர்களிருவரும் நடந்து கொண்டார்கள்.பயமென்ற என்ற உணர்ச்சி கொஞ்சமும் அவர்களிடத்தில் இல்லமலிருந்தது.விமான நிலையத்திற்கு வெளியே அவர்கள் கண்ட காட்சி அவர்களை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்தியது.
விமான நிலையத்திற்கு வெளியே பனைகளும் தென்னைகளும் வாழை மரங்களும் பூச்செடிகளும் வரிசையாக இருப்பதைப் பார்த்தும் தாங்கள் இருப்பது வேற்றக்கிரகந்தானா என நம்ப முடியாமல் தவித்தார்கள். விமான நிலையத்தில் காத்திருந்த வாகனமொன்றில் ஏற்றினார்கள். அந்த வாகனம் பூமியில் உள்ள வாகனம் போலல்லாது வேறு ஒரு வடிவத்தில் இருந்தது.அந்த வாகனம் போகும் வேகத்தை அவர்களால் கணக்கெடுக்க முடியவில்லை. பூமியில் வாகனமொன்றில் போகும் போது அதன் வேகத்தை உணர முடியும். ஆனால் அவர்களிருவரும் உட்கார்ந்திருந்த வாகனத்தின் வேகம் மெதுவாகப் போகின்றதா வேகமாகப் போகின்றதா என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. வாகனம் ஒரு பெரிய கட்டிடத்தின் உள்ளே போய் நின்றது.அங்கே நின்ற ஆண்களும் பெண்களும் அவர்களை புன்னகையுடன் வரவேற்றார்கள். அவர்களின் உடலில் இருந்து ஒருவித நறுமணம் வீசிக் கொண்டே இருந்தது. இரு பெண்கள் அவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அஙஇக அவர்களுக்கு உணவு வைக்கப்பட்டிருந்தது. என்ன வகை உணவு என்பதை அவர்களால் உணர முடியவில்லை.ஆனால் சுவையாக இருந்தது.
சில நிமிடங்கள் இன்னொரு பெரிய மண்டபத்திற்கு அவர்களிருவரையும் அழைத்து வந்து உட்காரச் சொன்னார்கள். அது விஞ்ஞானகூடம் போன்றிருந்தது. பலர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.பெரிய திரை ஒன்றிருந்தது. அங்கு வந்த ஒருவர் பரமசாமியையும் சுந்தரியையும் வரவேற்று பேசிவிட்டு ஒரு தூரநோக்கு கண்ணாடிக்கூடாகப் பார்க்கச் சொன்னார்கள். பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். பூமியில் உள்ள தமது வீட்டைப் பார்த்தார்கள். இப்பொழுது அங்கே விடியற்பொழுது.அவர்களின் வீடு பூட்டப்பட்டிருந்தது. வீதியில் போவோரில் சிலர் இவர்களின் வீட்டுக்கருகாமை சென்று ‘ சுந்தரி சுந்தரி அழைப்பதும், ‘இவள் எங்கை போய்விட்டாள் என்று சொல்வதும் இவர்களின் காதுகளில் பொருத்தப்பட்டிருந்த கருவிக்கூடாகக் கேட்டது.தங்களுக்கு மிக அருகில் அந்தக் காட்சிகள் தெரிந்ததை நம்ப முடியாமல் தவித்தார்கள.;
தூரநோக்குக் கருவியிலிருந்து கண்களை எடுத்ததும். பெரிய திரையில் காட்சிகள் தெரியத் தொடங்கின.பூமியில் சட்லைற் வேலை செய்யாமல் இருந்த போது நடந்த அத்தனை சம்பவங்கள் தொட்டு தங்களை மாங்கதிர் கிரகத்திற்கு கொண்டு வந்தது வரை உள்ள அத்தனை நிகழ்வுகளும் திரையில் காட்சியளிக்கத் தொடங்கின.இவர்கள் மந்திரசக்தி உள்ளவர்களா அல்லது அதீதமான விஞ்ஞான சக்தி உள்ளவர்களா தான் படித்த செய்தி போல தமிழர்கள் மந்திர சக்தி உள்ளவர்கள் அந்தச் சக்தியைத்தான் விஞ்ஞான சக்தியாக மாற்றினார்கள் என்பது உண்மைதானோ என பரமசாமி நினைத்தார்.
‘பரமசாமி நீங்கள் நினைப்பது சரியே தமிழர்கள் மந்திரசக்தி உள்ளவர்கள். அவர்கள் இங்கிருந்துதான் பூமிக்கு அனுப்ப்பட்டவர்கள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட முன் பூமிக்கு அனுப்பபட்ட மனிதர்களின் வாரிசுகளே இப்பொழுதிருக்கும் மனிதர்கள். தமிழ் மொழியிலிருந்து அங்கு பேசும் அனைத்து மொழிகளும் உருவாகின. நாங்கள் இங்கிருந்தபடியே ஒவ்வொரு விநாடியம் பூமியில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வருகின்றோம்.இனிப் பூமியை அழிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. பூமியில் உள்ள அமெரிக்கா சொல்வது போல ஏலியன்ஸ் உருவத்தில் எந்த உயிரினமும் இல்லை. மாங்கதிர் என்ற எங்கள் கிரகம் 15,000 கிரகங்களை கண்காணித்து வருகின்றது.
செவ்வாய் கிரகம் என்று பூமியில் உள்ளவர்களாலஇ அழைக்கப்படும் கிரகமும் மனிதர்கள் வாழ்ந்து அழிக்கப்பட்ட கிரகமே. அவர்கள் தமக்குத் தாமே அழிவைத் தேடிக் கொண்டவர்கள். நீங்கள் இங்கேயே தங்கப் போகிறீர்களா அல்லது பூமிக்கே திரும்பப் போகிறீர்களா என இதுவரை பேசிக் கொண்டிருந்த மனிதர் கேட்டதும், பரமசாமியும் சுந்தரியும் ‘நாங்களிரவரும் இங்கேயே இருக்க விரும்புகிறோம்’ என்றனனர்.’நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் பூமியில் பலகோடி மனிதர்கள் இருந்தும் உங்களிருவருக்குமே அந்த அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது.இன்னும் சில நிமிடங்களில் இன்னொரு கிரகத்திற்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறோம் சில நிமிடங்கள் ஓய்வெடுங்கள் என அவர் போக ஒரு ஆண் இருவரையும் அழைத்துக் கொண்டு போய் ஒரு வாகனத்தில் உட்கார வைக்கிறான். அது படுக்கை அறை கொண்ட வாகனம். அவர்கள் படுக்கையில் படுத்ததும் நித்திரையாகிவிடுகிறார்கள்.வாகனம் போய்க் கொண்டிருப்பது போல உணர்கிறார்கள். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவர்கள் மலைத்துப் போய் நிற்கிறார்கள்.
பூமியில் கோவிலகளில்களில் சிலைகளாக வைத்துக் கும்பிடப்படும் விநாயகர் உருவகங்கள் உயிருள்ளவையாக அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள்
(இப்பகுதி நிறைவு பெறுகிறது. பரமசாமியும் சுந்தரியும் மாங்கதிர் கிரகத்தில் வாழ ஒப்புக் கொண்டதால்,அவர்களின் வாழ்க்கை இனி அங்குதான். ஆனால் அவர்களுக்கு பல கிரகங்களுக்கு போய் வரும் வாய்ப்பு கிடைக்கப் போகின்றது. பூமியிலிருந்து பலர் அடிக்கடி மாயமாக மறைகிறார்கள். அவர்களுக்கு என்னவாயிற்று என்பதை எவராலும் அறிய முடியவில்லை. அப்படி யாருக்கும் தெரியாமல் மாயமாக மறைந்தவர்கள்தான் பரமசாமியும் சுந்தரியும். இனி…………….)
Share this Post:
கிரகப்போர் (பாகம்: 6) — } காசியரின் பேரன். Reviewed by on January 11, 2017 .

மாங்கதிர் கிரகத்தின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள விமான நிலையத்தில் பரமசாமியும் சுந்தரியும் வந்திறங்கியதை உணர்ந்து கொண்டார்கள். பூமியைவிட்டு பல்லாயிரம் கோடி மைலகளுக்கப்பால் உள்ள ஒரு கிரகத்தில் தாம் இருக்கிறோம் என்ற உண்மையை அவர்களின் மூளை ஒப்புக் கொண்டாலும் அதை அவர்களால் நம்ப முடியாமலும் இருந்தது. அவர்களிருவரும் மாங்கதிர் கிராமத்துக்கு வரவழைக்கப்பட்ட மிகவும் முக்கியமான விருந்தினர்களாக அங்குள்ளவர்களால் உபசரிக்கப்பட்டார்கள்.எல்லாவற்றையும் விட ஆச்சரியம் அவர்கள் பூமியில் உள்ள மனிதர்கள் போல் இருப்பதும்,தமிழில் பேசுவதும் அவர்களுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியத்தை

ABOUT AUTHOR /