சுத்திவர சுந்தரிகள்…. ( கவிதை ) — } ஏலையா க.முருகதாசன்.

 ›  › சுத்திவர சுந்தரிகள்…. ( கவிதை ) — } ஏலையா க.முருகதாசன்.

கவிதைகள்

சுத்திவர சுந்தரிகள்…. ( கவிதை ) — } ஏலையா க.முருகதாசன்.

விடலைப் பருவத்து ஊரின் ஞாபகங்கள்
அலை அலையாக மனக்கரை தொடுகின்றன
பொங்கல் , புதுவருடப் பிறப்பு , தீபாவளியென்றால்
பொங்கல் சாப்பிட்டு முடிய உடல் திமிர் எடுக்க
பகல் பொழுதெல்லாம் விளையாட்டுக்கள் களைகட்டும்
அதில் கிளித்தட்டு தேர்வாகி அரங்கேறும் அந்நாளில்
கால்பலம் கைப்பலம் வேகம் எனக் கொண்டு
தொடை தெரிய மடித்துக் கட்டிய சாரத்துடன்
அரைக்கை பெனியனுடன்   அரும்பு மீசையும்
அழகான பருக்கள் முகத்தில் கொண்ட நான்
அயல்வீட்டு சுந்தரிகள் சுற்றிவர நின்று
வைத்த கண் வாங்காது பார்க்க
கால்கள் மண்ணில் பாய்ந்து சர்ரென்று சறுக்கி நிற்க
என்னவளின் முகத்தில் வடியும் வியர்வை
அவளிதழில் தளும்பி நிற்க, ரோஜா இதழில்
ஊற்றெடுத்த தேனோ என என் கண்வண்டு மொய்க்க
காமக் கோர்மொனும் காதலும் பின்னிப் பிணைந்து
என்னை ஆட்கொள்ள கால்கள் பலமேற
கைகள் முறுக்கேற புழுதிக்குள் பூத்த மதிமுகத்தாள்
எனை நோக்கி புன்னகைக்க எனக்குள்
பரவசம் பொங்கிப் பொங்கி எழ எழ வெற்றிவாகை சூடிடுவேன்
Share this Post:
சுத்திவர சுந்தரிகள்…. ( கவிதை ) — } ஏலையா க.முருகதாசன். Reviewed by on January 5, 2017 .

விடலைப் பருவத்து ஊரின் ஞாபகங்கள் அலை அலையாக மனக்கரை தொடுகின்றன பொங்கல் , புதுவருடப் பிறப்பு , தீபாவளியென்றால் பொங்கல் சாப்பிட்டு முடிய உடல் திமிர் எடுக்க பகல் பொழுதெல்லாம் விளையாட்டுக்கள் களைகட்டும் அதில் கிளித்தட்டு தேர்வாகி அரங்கேறும் அந்நாளில் கால்பலம் கைப்பலம் வேகம் எனக் கொண்டு தொடை தெரிய மடித்துக் கட்டிய சாரத்துடன் அரைக்கை பெனியனுடன்   அரும்பு மீசையும் அழகான பருக்கள் முகத்தில் கொண்ட நான் அயல்வீட்டு சுந்தரிகள் சுற்றிவர நின்று வைத்த கண்

ABOUT AUTHOR /