கிரகப் போர் (பகுதி.5) — } காசியரின் பேரன்.

 ›  › கிரகப் போர் (பகுதி.5) — } காசியரின் பேரன்.

கதைகள்

கிரகப் போர் (பகுதி.5) — } காசியரின் பேரன்.

படுக்கையறைக்குள் நுழைந்த பரமசாமியும் சுந்தரியும்  திகைத்துப் போய் நின்றதற்குக் காரணம் பூமியில் அவர்களின் படுக்கையறை போல் இருந்ததேயாகும். பூமியைவிடடு; பலவாயிரம் கோடி கிலோமீற்றருக்கு அப்பால் பிரபஞ்சத்தில் மிதக்கும் தளத்தில் வீடுகள் நிறைய இருப்பதும,; அந்த வீடுகளில் ஒரு வீட்டிலேதான் அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் நித்திரை கொள்வதற்குமாக ஒரு அறையடியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். பூமியிலிருந்த போது மனிதர்களுக்கு இருக்கும் பய உணர்ச்சி இப்பொழுது இவர்களுக்கு இல்லை. பூமியில் வைத்து இங்கு அழைத்து வந்த வேற்றுக்கிரக வாசிகள் இவர்களின் கைகளைப் பிடித்து அழைத்த போதே பரமசாமியிடமும் சுந்தரியிடமும் இருந்த பய உணர்ச்சி அவர்களின் நரம்பு மணடலங்களிலிருந்தும் மூளையிலிருந்தும்  அகற்றப்பட்டுவிட்டது.
வேற்றக்கிரக வாசிகளான இவர்களை அழைத்து வந்தவர்களிடம் பயம் என்ற ஒன்று இல்லவே இல்லை. வேற்றக்கிரக வாசிகளான இவர்களின் உடல் மனிதர்களின் உடலைத் தொடும் போது இவர்களின் உடலில் தோன்றும் அதிர்வு அலைகள் மனிதர்களின் உடலின் அதிர்வலைகளுடன் கலக்கும் போது மனிதர்களின் உடலில் பய உணர்ச்சி இல்லாமல் போய்விடுகிறது. அதனால்தான் பிரபஞ்சத்தில் அந்தரத்தில் மிதக்கும் தளத்தில் நின்ற போதும் பரமசாமிக்கோ சுந்தரிக்கோ பயம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தது.
ஆனால் அவர்களிடம் இருந்த  சந்தேகத்தை உணர்ந்து கொண்ட வேற்றக்கிரக வாசிகள் ‘புன்முறுவலுடன் நாங்கள் உங்களைப் போலவே இருக்கிறோமே என்று தானே யோசிக்கிறீர்கள்’ என்று கேட்டவுடன், இவர்கள் எப்படி அதனைத் தெரிந்து கொண்டார்கள் என யோசிப்பதற்கு முன் அவர்கள் நீங்கள் எங்களின் வாரிசுகள்.பூமியில் ஏலியன்ஸ் என்று சொல்லி வருவது முழுவதும் அங்குள்ள மனிதர்கள் செய்யும் பொய்ப் பிரசாரம். உங்களைப் போன்ற எங்களைப் பொன்ற உருவம் உள்ளவர்கள் இரண்டாயிரம் கிரகத்திலிருக்கிறார்கள். வேறு வேறு உருவத்தில் உள்ளவர்கள் ஆயிரம் கிரகத்திலிருக்கிறார்கள் என வேற்றக்கிரக வாசிகள் சொல்ல அவர்கள் திகைப்பு இன்னும் அதிகரிக்கின்றது.
தமிழில் தங்களுடன் பேசியதை இது எப்படி சாத்தியமானது என அவர்கள் யோசிக்கும் போது ‘பூமியில் உள்ள எல்லா மனிதர்களின் மொழிகளை எங்களால் பேச முடியும் பூமியில் மனிதர்களை கொண்டு வந்து இறக்கிய போது அவர்களும் வல்லமையுடையவர்களாகத்தான் இருந்ததார்கள் நாளடைவில் அவர்களின் கெட்ட மனநிலையால் அந்து வல்லமை இல்லாமல் போய்விட்டது. பூமியிலஇ உள்ள மனிதர்கள் வெகு விரைவில் அழிக்கப்படுவார்கள்’ என்று சொன்ன போதுகூட பரமசாமியிடமோ சுந்தரியிடமோ பயம் ஏற்படவில்லை. தொடர்ந்து எந்ததக் கேள்வியையும் கேட்காமல் படுக்கையறைக் கட்டிலில் போய் உட்கார அறையைச் சாத்திவிட்ட அந்த ஆணும் பெணணும் போய்விடுகிறார்கள்.
பரமசாமிக்கும் சுந்தரிக்கும் சுகமாக நித்திரை கொண்டனர். நித்திரையை விட்டெழுந்ததும் தங்கள் வீட்டின் குளியறைபோலிருந்த அந்தக் குளியலஇ அறையில் குளித்தார்கள். குளித்துமுடிந்ததுமுஇஅடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று யோசிப்பதற்குள் பக்கத்து அறை திறக்க அங்கே அழகான பெண்கள் அழகாக சிரித்தபடியே அவர்களுக்கு இட்லியும் கோப்பி போன்ற பானத்தையும் கொண்டு வந்து வைத்ததார்கள். சாப்பிடுங்கள் இதையும் குடியுங்கள் என அந்தபஇ பானத்தைக் காட்டி விட்டுச் சென்றுவிட்டார்கள். சாப்பிடலாமா விடலாமா குடிக்கலாமா விடலாமா என்ற பயம் அவர்களுக்கு இல்லை. நன்றாகச் சாப்பிட்டார்கள். அந்தப் பானத்தையும் குடித்ததார்கள் அநதப பானம் ஏதோ ஒரு புதுவிதமான சுவையாக இருந்தது.
தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்க நினைக்கும் போதே அவர்கள் பதில் சொல்லிவிடுவதால் எதையுமே அவர்களிருவரும் கேட்கவில்லை. அவர்களிருவருக்கும் பயம் என்ற ஒன்று இல்லாததால் அவர்களுக்கு அந்த இடம் இயல்பானதாகவிருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.
அவர்களின் அறைக்குப் பக்கத்திலிருந்த கதவு மெல்லத் திறந்தது. வாசலில் ஒரு ஆண் வந்து நின்றார். உங்களை அழைத்துக் கொண்டு மாங்கதிர் என்ற எமது தாய்க் கிரகத்திற்குப் போகப் போகிறோம். இi உங்களுக்குரிய உடைகள். இங்கிருந்து இன்னும் பல கோடி மைல்களுக்கப்பால்தான் எங்களின தாய்க்கிரகம் இருக்கின்றது. இந்த உடைகளை அணிந்து கொண்டு தயாராக இருங்கள் என அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்த ஆண் கதவைச சாத்திவிட்டுச் செல்கிறான்.
பரமசாமிக்கும் சுந்தரிக்கும் இது கனவா அல்லது உண்மையில் நாங்கள் பிரபஞ்சத்தில் ஒரு தளத்தில்தான் நிற்கிறோமா என அணுமானிக்க முடியாதிருந்தது. சில நிமடங்கள் செல்ல புதிய உடையை அணிந்திருந்த அவர்களை ஒரு ஆணும் பெண்ணும் அழைத்தக் கொண்டு போய் இருக்கையில் அமர்த்தினார்கள். அவர்களும் அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள்.
அந்தத் தளம் அசைவது போல அவர்கள் உணர்ந்தார்கள். அந்த தளத்திற்கு வெளியே பார்க்கக்கூடிய விதத்தில் இருந்த கண்ணாடி ஊடக பார்த்த போது நட்சத்திரங்கள் தெரிந்தன. பூமியை இங்கிருந்து பார்க்க முடியாதா என நினைத்துக் கொண்டு பரமசாமி ஆணின் பக்கம் திரும்ப ‘பூமியை இங்கிருந்து உங்களுடைய கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் எங்களால் பார்க்க முடியும். உங்களைப் போல எங்களுக்கு உருவங்கள் இருந்தாலும் எங்களுக்கு விசேசமான சக்திகள் உண்டு. பொறுமையா இருங்கள் தாய்க்கிரகத்திலிருந்து பூமியைப் பார்க்க முடியும் உங்கள் வீட்டையும் பார்க்க முடியும் என சிரித்தபடியே ஆண சொன்னான். பக்கத்திலிருந்த ஆணும் பெண்ணும் புன்முறுவல் பூத்தபடியே இருந்தனர்.
முன்னாலிருந்த ஒரு பெட்டி போன்ற ஒன்றைத் திறந்து இரு பேணிகளில் தண்ணீர் போன்ற ஒன்றை வார்த்து பரமசாமிக்கும்சுந்தரிக்கும் கொடுத்துவிட்டு அவர்களும் குடித்ததார்கள். அந்தத்தளம் பொகும் பாதை எங்கும் இருளாகவும் இருந்தது வெளிச்சமாகவும் இருந்தது. பூமிலிருந்து சூரியனைச் சந்திரனைப் பார்ப்பது போல சில கிரகங்கள் பரமசாமிக்கும் சுந்தரிக்கும் தெரிந்தன. ஒரு பெரிய கிரகத்தைக காட்டி இங்கிருந்துதான் நீங்கள் விநாயகர் என்று பெயர் வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்ற அவரை அனுப்பியிருந்தோம்.பூமியை விட சக்திமிக்க உயிரினங்கள் வேறு கிரகங்களிலிருக்கின்றன. அவை எல்லாம் எமது தாய்க்கிரகமான மாங்கதிர் கிரகத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. உங்களை அங்கெல்லாம் அழைத்துப் போவோம்’ என்று அவர்களிருவரும் மாறி மாறி விளங்கப்படுத்திக் கொண்டிருக்கையில் விமானம் பூமியை நோக்கி இறங்கும்போது தெரிவது போல கட்டிடங்கள் தெரியத் தொடங்கின. வியப்பின் உச்சத்திற்கே பரமசாமியும் சுந்தரியும் போய்விட ‘இது பூமியல்ல தாய்க்கிரகமான மாங்கதிர் கிரகத்திற்கு வந்துவிட்டோம்’ என்று அந்த ஆணும் பெண்ணும் சொன்னார்கள்.
(அடுத்து என்ன? ……. தொடரும், இன்னும் பல அதிசயங்களுடன்)
Share this Post:
கிரகப் போர் (பகுதி.5) — } காசியரின் பேரன். Reviewed by on January 5, 2017 .

படுக்கையறைக்குள் நுழைந்த பரமசாமியும் சுந்தரியும்  திகைத்துப் போய் நின்றதற்குக் காரணம் பூமியில் அவர்களின் படுக்கையறை போல் இருந்ததேயாகும். பூமியைவிடடு; பலவாயிரம் கோடி கிலோமீற்றருக்கு அப்பால் பிரபஞ்சத்தில் மிதக்கும் தளத்தில் வீடுகள் நிறைய இருப்பதும,; அந்த வீடுகளில் ஒரு வீட்டிலேதான் அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் நித்திரை கொள்வதற்குமாக ஒரு அறையடியில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். பூமியிலிருந்த போது மனிதர்களுக்கு இருக்கும் பய உணர்ச்சி இப்பொழுது இவர்களுக்கு இல்லை. பூமியில் வைத்து இங்கு அழைத்து வந்த வேற்றுக்கிரக வாசிகள் இவர்களின்

ABOUT AUTHOR /