இன்புடன் வாழலாம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

 ›  › இன்புடன் வாழலாம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

கவிதைகள்

இன்புடன் வாழலாம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்
          கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும் 
          பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்
          இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !
 
          பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்
          அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய் 
          தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய் 
          வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !
 
          போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே
          வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே 
          மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்
          காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !
 
            இறைவனை எண்ணினால்
            இன்புடன் வாழலாம்
            குறையெலாம் அகன்றுநீ
             நிறைவுடன் வாழலாம் 
            கறையுடை மனத்தினை
             காணாமல் செய்திடில் 
             உலகினில் உன்னதம்
             உன்னுளே உதித்திடும் !
         
Share this Post:
இன்புடன் வாழலாம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. Reviewed by on December 26, 2016 .

நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்           கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்            பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்           இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !             பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்           அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்         

ABOUT AUTHOR /