விஷம் வைத்து கொல்லப்பட்டாரா ஜெயா..? ( வீடியோ)

 ›  › விஷம் வைத்து கொல்லப்பட்டாரா ஜெயா..? ( வீடியோ)

முகநூல்

விஷம் வைத்து கொல்லப்பட்டாரா ஜெயா..? ( வீடியோ)

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த ஐந்தாம் திகதி மாரடைப்பு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார்.

இதனையடுத்து, கடந்த 6ஆம் திகதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஜெயலிலதாவின் மரணம் குறித்து நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் பல்வேறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டுவந்தன.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அவரின் நெருங்கிய தோழி சசிக்கலாவே, காரணம் எனவும், சசிக்கலா மற்றும் அவரது கும்பலும் இணைந்து ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்து கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்து குரல் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற சட்டத்தரணி கிருஷ்ண மூர்த்தி இந்த குரல் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா அபகரிக்க முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜெயலலிதாவின் அனைத்து சொத்து விபரமும் தன்னிடம் இருப்பதாக கூறிய அவர், இது தொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும், போயஸ் காடர்ன் இல்லத்தில் இருந்து சசிகலா வெளியேற வேண்டும் எனவும், அவர் அந்த குரல் பதிவின் ஊடாக வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, குறித்த குரல் பதிவு காரணமாக ஏற்பட்டுள்ள பரபரப்பை அடுத்து உச்ச நீதிமன்ற சட்டத்தரணி கிருஷ்ண மூர்த்தியை சிலர், நேரில் சென்று அச்சுறுத்தியமை குறித்த காணொளி ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

இதன் போது உச்ச நீதிமன்ற சட்டத்தரணி கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்ய கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Post:
விஷம் வைத்து கொல்லப்பட்டாரா ஜெயா..? ( வீடியோ) Reviewed by on December 10, 2016 .

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த ஐந்தாம் திகதி மாரடைப்பு காரணமாக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார். இதனையடுத்து, கடந்த 6ஆம் திகதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஜெயலிலதாவின் மரணம் குறித்து நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் பல்வேறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டுவந்தன. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அவரின் நெருங்கிய தோழி சசிக்கலாவே, காரணம் எனவும், சசிக்கலா மற்றும் அவரது கும்பலும் இணைந்து ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்து கொலை செய்து

ABOUT AUTHOR /