அதிஸ்ட சாலி ..! ( கவிதை ) — } இணுவையூர் சக்திதாசன்.

 ›  › அதிஸ்ட சாலி ..! ( கவிதை ) — } இணுவையூர் சக்திதாசன்.

கவிதைகள்

அதிஸ்ட சாலி ..! ( கவிதை ) — } இணுவையூர் சக்திதாசன்.

அழாமல் ஒரு பிள்ளை

ஆளாக முடியாது ஆளாகும் போதிலே

தொல்லைகள் கண்டு மனம் எழாமல் போனால்

வீனாகிடும் வாழ்வு.

விழாமல் வாழ்ந்தோம் என்பதை விட

விழும் ஒவ்வொரு முறையும்

எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை

என்பார் நெல்சன் மண்டேலா

எதிரிகள் உன் முன்னே ஏராளம் இருக்கல்லாம்

எல்லோருக்கும் நீ பயந்தியானால்

உன் பலம் இழக்கலாம்

உனக்கென்ன ஒரு சில எதிரியை தெரி

அவனை மிஞ்சிட கடுமையாய் உழை

நல்ல எதிரி கிடைத்தால் நீ அதிஸ்ட சாலி

தூக்கத்தில் கூட தட்டி எழுப்புவான்

உன் கால் மாட்டில் கிடந்தது

வீரம் காட்டுவான்

தாக்கத்தில்

உணர்சிகளுக்கு உரம் ஊட்டுவான்

மறக்க நினைத்தாலும்

மனதுக்குள் மறைந்து கிடந்தது சிரிப்பான்

உடலுக்கு விற்றமின் உணர்வுக்கு அணு மின்

தளர்வுக்குள் கற்று தேர்ந்தபின்

சுற்றிப் பார் அசடு வழிய விழிப்பான்

விலகாத வழிப் பயணம் நிழலாக தொடரும்.

இணுவையூர் சக்திதாசன்

Share this Post:
அதிஸ்ட சாலி ..! ( கவிதை ) — } இணுவையூர் சக்திதாசன். Reviewed by on December 7, 2016 .

அழாமல் ஒரு பிள்ளை ஆளாக முடியாது ஆளாகும் போதிலே தொல்லைகள் கண்டு மனம் எழாமல் போனால் வீனாகிடும் வாழ்வு. விழாமல் வாழ்ந்தோம் என்பதை விட விழும் ஒவ்வொரு முறையும் எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை என்பார் நெல்சன் மண்டேலா எதிரிகள் உன் முன்னே ஏராளம் இருக்கல்லாம் எல்லோருக்கும் நீ பயந்தியானால் உன் பலம் இழக்கலாம் உனக்கென்ன ஒரு சில எதிரியை தெரி அவனை மிஞ்சிட கடுமையாய் உழை நல்ல எதிரி கிடைத்தால் நீ அதிஸ்ட சாலி தூக்கத்தில்

ABOUT AUTHOR /