அம்மா எனும் அருமை மகள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  ›  › அம்மா எனும் அருமை மகள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

கவிதைகள்,செய்திகள்+

அம்மா எனும் அருமை மகள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

வெள்ளித் திரையினிலே நடிக்கவந்தார் நாயகியாய்

உள்ளத் திரையினிலே வீற்றுவிட்டார் நாயகமாய்
அள்ளக் குறையா அன்பைப் பொழிந்ததால் அன்றோ
தள்ளமுடியா தனிப்பெருமையை பெற்று நின்றார்
அஞ்சாநெஞ்சம் கொண்ட பேரணங்காம்
நெஞ்சமதில் வஞ்சமில்லா ஓரணங்காம்
எஞ்சிய வாழ்வதனை மக்களுக்கே அர்ப்பணித்து
துஞ்சிவிட்டார் துயரில்  நம்மை ஆழ்த்திவிட்டு
தேமதுரத் தமிழில் அவர் முழக்கம்  செய்ததைப்போல்
நாமசர ஆங்கிலத்திலும் முழக்கம்   செய்து நின்றவராம்
பாமரமக்கள் தம் நிலையுணர்ந்து பணிகள் செய்ததாலே
தாமுமானார் தனிப்புகழாய் அம்மா எனும் சொல்லினாலே
தான் தனது என்று வாழும் பெரும்பான்மை மக்களூடே
தனக்கென ஓர்வாழ்வதனை அமைத்திடாதிருந்து
ஊருக்காய் உழைத்து வாழ்ந்து ஓய்ந்த்தாலன்றோ
பேரெடுத்தார் பெருநிலத்தே அம்மா என்ற சொல்சுமந்து
தங்கத் தமழ்நாடு மண்ணில் உள்ளமட்டும்
வங்கக் கடலினில் ஓடிவரும் அலைகள் ஓயும் மட்டும்
மங்கிடாது உந்தன் புகழ் என்பதும் வெறும் வார்த்தையல்ல
எங்கள் வாழ்வதனில் அம்மா என்ற வார்த்தை அழிந்தும்போமோ!
sankara20140704-300x300
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
அம்மா எனும் அருமை மகள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on December 6, 2016 .

வெள்ளித் திரையினிலே நடிக்கவந்தார் நாயகியாய் உள்ளத் திரையினிலே வீற்றுவிட்டார் நாயகமாய் அள்ளக் குறையா அன்பைப் பொழிந்ததால் அன்றோ தள்ளமுடியா தனிப்பெருமையை பெற்று நின்றார் அஞ்சாநெஞ்சம் கொண்ட பேரணங்காம் நெஞ்சமதில் வஞ்சமில்லா ஓரணங்காம் எஞ்சிய வாழ்வதனை மக்களுக்கே அர்ப்பணித்து துஞ்சிவிட்டார் துயரில்  நம்மை ஆழ்த்திவிட்டு தேமதுரத் தமிழில் அவர் முழக்கம்  செய்ததைப்போல் நாமசர ஆங்கிலத்திலும் முழக்கம்   செய்து நின்றவராம் பாமரமக்கள் தம் நிலையுணர்ந்து பணிகள் செய்ததாலே தாமுமானார் தனிப்புகழாய் அம்மா எனும் சொல்லினாலே தான் தனது என்று

ABOUT AUTHOR /