பத்திரமாய் இருக்கச் சொல்வாய்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  › பத்திரமாய் இருக்கச் சொல்வாய்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

கவிதைகள்

பத்திரமாய் இருக்கச் சொல்வாய்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

வானிலே நீந்தி ஓடிடும் வான்மதியே
விடியும் வேளை நீயும் விழித்திருப்பின்
மேற்குமலை அடிவாரத்தில் அங்கொரு
சிற்றூர் பொன்னகரம் என்ற பெயரிலுண்டு
அவ்வூரில் செங்கமல பொய்கையுண்டு

பொய்கையில் குளித்து மகிழ்ந்திடவே
தாரகை ஒருத்தியும் வந்திடுவாளாங்கு
அங்கஅடையாளம் உனக்குசொல்வேன்
அவளை ஒருவேளை நீ அங்கு கண்டால்
எனக்காக ஒரு உதவியை நீ செய்வாயா

மனதை கொள்ளையிடும் மாநிற அழகி
கீழுதட்டில் வலதுகோடியில் ஒரு மச்சம்
இடையோ இருப்பதுபோல தெரியாது
நடந்தால் மயிலின் சாயல் அவளுக்கு
குயிலும் தோற்றிடும் அவள் குரல்முன்

சூழ்ந்துவரும் பெண்களில் சுடரெனவே
சுந்தரப் பெண்ணாய் தோன்றி நிற்பாள்
அப்படிஒருசுந்தரியை நீயும் கண்டால்
சொல்லிடுவாய் ஒருசெய்தி அவளிடம்

காதலன் சொன்னேன் தயங்காதே என்று
பாலைவனத்தில் நான் இங்கு வாழ்ந்தாலும்
பசுஞ்சோலை ஆகிறது மனம் அவள் நினைவால்
அவள் வாழ்வை பசுஞ்சோலையாக்க
பாலைவனம் விட்டு நான் வரும்வரையில் பாவையை பத்திரமாய் இருக்க சொல்வாய்!

sankara20140704-300x300

-சங்கர சுப்பிரமணியன்.

Share this Post:
பத்திரமாய் இருக்கச் சொல்வாய்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on November 30, 2016 .

வானிலே நீந்தி ஓடிடும் வான்மதியே விடியும் வேளை நீயும் விழித்திருப்பின் மேற்குமலை அடிவாரத்தில் அங்கொரு சிற்றூர் பொன்னகரம் என்ற பெயரிலுண்டு அவ்வூரில் செங்கமல பொய்கையுண்டு பொய்கையில் குளித்து மகிழ்ந்திடவே தாரகை ஒருத்தியும் வந்திடுவாளாங்கு அங்கஅடையாளம் உனக்குசொல்வேன் அவளை ஒருவேளை நீ அங்கு கண்டால் எனக்காக ஒரு உதவியை நீ செய்வாயா மனதை கொள்ளையிடும் மாநிற அழகி கீழுதட்டில் வலதுகோடியில் ஒரு மச்சம் இடையோ இருப்பதுபோல தெரியாது நடந்தால் மயிலின் சாயல் அவளுக்கு குயிலும் தோற்றிடும் அவள் குரல்முன்

ABOUT AUTHOR /