என்னைப் பார்த்துமே நகைத்தாள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  › என்னைப் பார்த்துமே நகைத்தாள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

கவிதைகள்

என்னைப் பார்த்துமே நகைத்தாள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

ஓலை வேய்ந்த அந்த கூரை வீடு
அவ்வீட்டில் இருந்தாள் எனக்காக
அவளைக் காணச்சென்றபோது
கன்னி வீற்றிருந்தாள் பாயின் மீதுl

கையிலே அவள் முடைகின்ற கூடை
கூடை முடையும் அந்த நாரோடு
அவள் என்னையுமன்றோ பின்னுகிறாள்
நாரை குறுக்கும் நெடுக்கும் இழுக்கிறாள்
என் நெஞ்சையும் அங்குமிங்கும் இழுக்கிறாள்

பின்னிடும் விரல்களை நான் பார்க்க
அவளோ கூடையைப் பார்க்கின்றாள்
அவள் தலைநிமிர்ந்து எனைப்பார்க்க
நான் அப்போது தடுமாறிப்போனேன்

வில்லேந்தும் வீரரே கூடை பின்ன இயலுமா
என்றே என்னை சீண்டயே வம்பும் செய்தாள்

அதையும் செய்வேன் அதற்கு மேலும்
செய்வேன் என்று நானும் கூறவும்
செய்யும் பார்ப்போமென  அழைக்க
சீறி பாய்ந்து தாவியதும் அவள் ஓட
அகப்பட்டவள் இடுப்பை என்கை வளைக்க
என்னை அவளும் பின்னலானாள்

கூடை பின்னவில்லையா என்றவளை நான்கேட்க
காளையைப் பின்னி இருக்கும் என்னால்
கூடையை எவ்வாறு பின்ன இயலுமென்றவளோ
திருக்குறள் படித்திருக்கிறீரா என்றும் வினவலானாள்

ஆம் என்று நான் சொன்ன மறுநொடியே
செவிக்குணவில்லாத போது என்றவளிடம்
சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுமென்றேன்

தங்கள் உடலை நான் பின்னாத போது
என்று சொல்லியே என்னையவள் பார்க்க
நான் திகைத்து நின்றபோது அவளும்
சற்று கூடையும் பின்னப்படும் என்றவளோ
இப்போது என்னால் எவ்வாறு கூடைபின்ன
இயலுமென்று என்னைப் பார்த்துமே நகைத்தாள்.

sankara20140704-300x300

-சங்கர சுப்பிரமணியன்.

Share this Post:
என்னைப் பார்த்துமே நகைத்தாள்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on November 28, 2016 .

ஓலை வேய்ந்த அந்த கூரை வீடு அவ்வீட்டில் இருந்தாள் எனக்காக அவளைக் காணச்சென்றபோது கன்னி வீற்றிருந்தாள் பாயின் மீதுl கையிலே அவள் முடைகின்ற கூடை கூடை முடையும் அந்த நாரோடு அவள் என்னையுமன்றோ பின்னுகிறாள் நாரை குறுக்கும் நெடுக்கும் இழுக்கிறாள் என் நெஞ்சையும் அங்குமிங்கும் இழுக்கிறாள் பின்னிடும் விரல்களை நான் பார்க்க அவளோ கூடையைப் பார்க்கின்றாள் அவள் தலைநிமிர்ந்து எனைப்பார்க்க நான் அப்போது தடுமாறிப்போனேன் வில்லேந்தும் வீரரே கூடை பின்ன இயலுமா என்றே என்னை சீண்டயே வம்பும்

ABOUT AUTHOR /