என்னாளும் போற்றிடுவோம் ! — ( கவிதை ) — } அருந்ததி — தமிழ்நாடு.

 ›  › என்னாளும் போற்றிடுவோம் ! — ( கவிதை ) — } அருந்ததி — தமிழ்நாடு.

கவிதைகள்

என்னாளும் போற்றிடுவோம் ! — ( கவிதை ) — } அருந்ததி — தமிழ்நாடு.

நினைப்போம் நெகிழ்வோம்
    நெஞ்சமதில் நிறைத்திடுவோம்
    தனைப்பற்றி எண்ணாமல்
    தாய்மண்ணை மனமிருத்தி 
    இனம்வாழ வேண்டுமென்று
    இன்னுயிரை ஈந்தளித்த 
    ஈடில்லா வீரார்தமை 
    என்னாளும் போற்றிடுவோம் !
 
   இளமைதனை எண்ணாமல்
   இன்னுயிரை நினையாமல்
   இன்பமதைப் பாராமல்
   இதயமதில் மண்ணைவைத்து 
   இறப்பதனை இலட்சியமாய்
   ஏற்றுநின்ற வீரார்தமை 
   எல்லோரும் மனமிருத்தி
   என்னாளும் போற்றிடுவோம் !
 
    தமிழீழம் காண்பதற்கு
    தானுரமாய் ஆனார்கள்
    அரிதான உயிர்பற்றி
    அவரலட்டிக் கொண்டதில்லை 
    துணிவாகக் களம்புகுந்தார்
    துளியேனும் அஞ்சாமல்
    அவர்தியாகம் தனையெண்ணி
    அனைவருமே போற்றிடுவோம் !
Share this Post:
என்னாளும் போற்றிடுவோம் ! — ( கவிதை ) — } அருந்ததி — தமிழ்நாடு. Reviewed by on November 26, 2016 .

நினைப்போம் நெகிழ்வோம்     நெஞ்சமதில் நிறைத்திடுவோம்     தனைப்பற்றி எண்ணாமல்     தாய்மண்ணை மனமிருத்தி      இனம்வாழ வேண்டுமென்று     இன்னுயிரை ஈந்தளித்த      ஈடில்லா வீரார்தமை      என்னாளும் போற்றிடுவோம் !      இளமைதனை எண்ணாமல்    இன்னுயிரை நினையாமல்    இன்பமதைப் பாராமல்    இதயமதில் மண்ணைவைத்து     இறப்பதனை இலட்சியமாய்    ஏற்றுநின்ற வீரார்தமை     எல்லோரும் மனமிருத்தி    என்னாளும்

ABOUT AUTHOR /