யாவரும் போற்ற கைப்பிடித்தேன்!

 ›  › யாவரும் போற்ற கைப்பிடித்தேன்!

கவிதைகள்

யாவரும் போற்ற கைப்பிடித்தேன்!

அத்தை மகளுமில்லை நீ எனக்கு
ஆனாலும் உனை நான் காதலித்தேன்
மாமன் மகனும் அல்ல நான் உனக்கு
இருந்தாலும் எனை நீ காதலித்தாய்

நீ பிறந்த ஊரில் நான் பிறக்கவில்லை
நான்பிறந்த ஊரில் நீ பிறக்கவில்லை
நான் படித்த பள்ளியில் நீ படிக்கவில்லை
இருவரும் ஒரே கல்லூரியிலும் பயிலவில்லை

நானும் நீயும் ஒன்றாகவும் பணிபுரியவில்லை
பிறந்த நாட்டாலும் வேறுபட்டோம்
பேசும் மொழியாலும் வேறுபட்டோம்
எவ்வாறு நாம் ஒன்றானோம்
ஒன்றாய் இணைத்தது நூலகமன்றோ

சிங்காரச் சென்னையின் சிறந்த அந்நூலகத்தில்
உடையாலும் உருவத்தாலும் வேறுபட்ட உன்னைக் கண்டேன்
முற்றாக நானும் என்னை மறந்தேன்
நீ  வாசித்த அந்நூலைக் கண்டதாலே

உன்கையிலோ கண்ணதாசனின் கவிதைத் தொகுப்பு
என்னவோ செய்தது என் இதயத் துடிப்பு
தமிழ் தெரியுமா என்று நான் உனைக்கேட்க
தமிழ்மேல் உனக்கோ காதல் என்றாய்

அன்று ஏற்பட்ட நம் இருவர் அறிமுகமே
தமிழைக் காதலித்த நீ என்னையும் காதலித்தாய்
யாவரும் கேளிர் என்று சொன்னான் முப்பாட்டன்
யாவரும் போற்றிட கைப்பிடித்தேன் உன்னை!

sankara20140704-300x300

-சங்கர சுப்பிரமணியன்.

Share this Post:
யாவரும் போற்ற கைப்பிடித்தேன்! Reviewed by on November 24, 2016 .

அத்தை மகளுமில்லை நீ எனக்கு ஆனாலும் உனை நான் காதலித்தேன் மாமன் மகனும் அல்ல நான் உனக்கு இருந்தாலும் எனை நீ காதலித்தாய் நீ பிறந்த ஊரில் நான் பிறக்கவில்லை நான்பிறந்த ஊரில் நீ பிறக்கவில்லை நான் படித்த பள்ளியில் நீ படிக்கவில்லை இருவரும் ஒரே கல்லூரியிலும் பயிலவில்லை நானும் நீயும் ஒன்றாகவும் பணிபுரியவில்லை பிறந்த நாட்டாலும் வேறுபட்டோம் பேசும் மொழியாலும் வேறுபட்டோம் எவ்வாறு நாம் ஒன்றானோம் ஒன்றாய் இணைத்தது நூலகமன்றோ சிங்காரச் சென்னையின் சிறந்த அந்நூலகத்தில்

ABOUT AUTHOR /