என் நிலையும் என்னவாகும்? — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  › என் நிலையும் என்னவாகும்? — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

கவிதைகள்

என் நிலையும் என்னவாகும்? — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

குழலெடுத்து ஊதினேன் அவ்விசையும்
என் அழகியை என்னிடமும் இழுத்து வர

பூங்குழலியவள் கண்ணால் ஏறெத்து
எனை நோக்கியதும் என் பார்வையவள்
கார்குழல் வனப்பினிலே கவிழ்ந்துவிழ

சீர்குழலின் சிங்காரம் சுருள் சுருளாய்
வளைந்து கிடக்க அவள் வளைகரமோ
நெளிந்துமதில் நீந்திச் செல்லும்போது
நெளிகிறதே என்மனமும் என்னிடமிங்கு
நிலைகொண்டு நிற்காது தவிப்பதேனோ

தன் கார்குழலில் ஊர்ந்திடும் பாவையவள்
பாங்கான விரல்களுமே பக்கத்தி்ல் நிற்கும்
எந்தன் கலைந்திருக்கும் தலைமுடியைக்
கோதிவிட்டு என் தவிப்பைப் போக்காதோ

என்றெண்ணி  நானும் இருந்த வேளை
இலவம்பஞ்சு போன்று ஏதோ ஒன்று
பட்டதுபோல் என்தலையில் அவளின்
மென்மையான விரல்கள் படிந்ததுவே

என்தலையில் அவள் விரல் பட்டதற்கே
என்கால்களின் கீழ் தரையும் நழுவுகிற
நிலையினை நானிங்கு உணர்வதனால்
அவள் என்னைத் தொட்டுத் தழுவினாலோ
என்நிலை என்னாகும் என்பதறியேன் நான்!

sankara20140704-300x300

– சங்கர சுப்பிரமணியன்.

Share this Post:
என் நிலையும் என்னவாகும்? — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on November 22, 2016 .

குழலெடுத்து ஊதினேன் அவ்விசையும் என் அழகியை என்னிடமும் இழுத்து வர பூங்குழலியவள் கண்ணால் ஏறெத்து எனை நோக்கியதும் என் பார்வையவள் கார்குழல் வனப்பினிலே கவிழ்ந்துவிழ சீர்குழலின் சிங்காரம் சுருள் சுருளாய் வளைந்து கிடக்க அவள் வளைகரமோ நெளிந்துமதில் நீந்திச் செல்லும்போது நெளிகிறதே என்மனமும் என்னிடமிங்கு நிலைகொண்டு நிற்காது தவிப்பதேனோ தன் கார்குழலில் ஊர்ந்திடும் பாவையவள் பாங்கான விரல்களுமே பக்கத்தி்ல் நிற்கும் எந்தன் கலைந்திருக்கும் தலைமுடியைக் கோதிவிட்டு என் தவிப்பைப் போக்காதோ என்றெண்ணி  நானும் இருந்த வேளை இலவம்பஞ்சு

ABOUT AUTHOR /