ஆசைவயப்பட்டால் அத்தனையும் அதன் வழியே! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  › ஆசைவயப்பட்டால் அத்தனையும் அதன் வழியே! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

கவிதைகள்

ஆசைவயப்பட்டால் அத்தனையும் அதன் வழியே! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

வைகைக் கரையினிலே கயல்கள் துள்ளும்
வஞ்சியிவள் வதனத்திலும் கயல்கள் துள்ளும்
வைகையில் தூண்டிலிட்டால் கயல்கள் சிக்கும்
வஞ்சியிவள் கண்களன்றோ தூண்டில் இடுகின்றன

தூண்டிலிலே மீன் சிக்கி துடிப்பதுபோல்
கண்களிட்ட தூண்டிலில் என்மனம் துடிக்கிறதே
தூண்டிலில் மாட்டியய மீன் மடியுமானால்
கண்களில் மாட்டிய என் நிலை என்னாகுவோ

தூண்டிலிட்டவன் மனது வைத்தால் மீன் பிழைக்கும்
இவளும் மனது வைத்தாலானால் என்மனம் மகிழும்
அவனப்படி செய்தால் மீன் அவனுக்கு பிடிக்கவில்லை
இவள் அப்படிச் செய்தால என்னை பிடித்திருக்கிறது

விடுபட்ட மீன் கலக்கமின்றி வைகையில் நீந்தும்
அவளிடம் பிடிபட்ட என்மனம் கற்பனையில் நீந்தும்
நீந்தும் மீனின் வாழ்வில் மற்றொரு இன்னல் வரலாம்
மகிழும் எனக்கும் ஒரு நிலை அதுபோல் வருமோ

மீன் தூண்டிலில் மாட்டாதிருந்தால் மறுமுறைமாட்டும்
வஞ்சி் தூண்டிலிடாது போனால் வேறொருத்தி செய்வாள்
தூண்டலில் மாட்டிய மீனும் கண்ணில் மாட்டிய நானும்
மாட்டும் வகையால் இங்கு ஒன்றுபட்டு இருப்பதலினாலே

நீரில் வாழும் மீனென்ன நிலத்தில் வாழும் மனிதனென்ன
பகுத்தறியும் குணமிருந்தென்ன அது இல்லாதிருந்தென்ன
ஆசையின் வயப்பட்டிட்டால் அத்தனையும் அதன் வழியே!

sankara20140704-300x300

– சங்கர சுப்பிரமணியன்.

Share this Post:
ஆசைவயப்பட்டால் அத்தனையும் அதன் வழியே! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on November 20, 2016 .

வைகைக் கரையினிலே கயல்கள் துள்ளும் வஞ்சியிவள் வதனத்திலும் கயல்கள் துள்ளும் வைகையில் தூண்டிலிட்டால் கயல்கள் சிக்கும் வஞ்சியிவள் கண்களன்றோ தூண்டில் இடுகின்றன தூண்டிலிலே மீன் சிக்கி துடிப்பதுபோல் கண்களிட்ட தூண்டிலில் என்மனம் துடிக்கிறதே தூண்டிலில் மாட்டியய மீன் மடியுமானால் கண்களில் மாட்டிய என் நிலை என்னாகுவோ தூண்டிலிட்டவன் மனது வைத்தால் மீன் பிழைக்கும் இவளும் மனது வைத்தாலானால் என்மனம் மகிழும் அவனப்படி செய்தால் மீன் அவனுக்கு பிடிக்கவில்லை இவள் அப்படிச் செய்தால என்னை பிடித்திருக்கிறது விடுபட்ட மீன்

ABOUT AUTHOR /