வேண்டிநிற்போம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

 ›  › வேண்டிநிற்போம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

கவிதைகள்

வேண்டிநிற்போம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

 காசநோய் ஒருகாலாம் காலனாய் நின்றது
கணக்கின்றிப் பலபேர்கள் காலனிடம் போனார்கள்
மருந்துபல வந்ததனை மாற்றிவிட்ட காரணத்தால்
காசநோய் கதையிப்போ காணாமல் நிற்கிறது !
அப்போது தொடக்கமே ஆருக்கு வந்தாலும்
அவராடி அடங்கிவிடும் அவலத்தை தருகின்ற
முற்றிநிற்கும் நோயாக முழுவுலகும் பரந்துநிற்கும்
புற்றுநோயை தடுப்பதற்கு புறப்படுங்கள் மருத்துவமே !

குழந்தைமுதல் பெரியவரை புற்றுநோய் வதைக்கிறது
குணமடைய பலமருந்தும் கொடுத்துமே வருகின்றார்
என்றாலும் இந்தநோய் எதைப்பார்த்தும் அசையாமல்
எமனாக வந்துநின்று இம்சையே கொடுக்கிறது !

புற்றுநோய் வந்துவிட்டால் புறவுலகே இருண்டுவிடும்
வெற்றிடமாய் எல்லாமே விரக்தியாய் ஆகிவிடும்
சுற்றமெலாம் சூழ்ந்திருந்து துக்கத்தில் ஆழ்ந்திடுவார்
வற்றிவிடும் வாழ்வுநோக்கி மனமழுது நின்றுவிடும் !

 
            எப்படி வருமென்று எவர்க்குமே தெரியாது
            அப்படி வந்துவிட்டால் அதுஅவர்க்கு பெருந்துன்பம்
            தப்பிவிட மாட்டோமா எனவெண்ணும் ஏக்கத்தால்
            தவியாய்த் தவிப்பதுவே பெருந்தவிப்பாய் ஆகிவிடும் !
 
             பலவிதப் புற்றுநோய்கள் பலருக்கும் வருகிறது
             சிலருக்கு சுகம்வந்து சிறிதுகாலம் வாழ்ந்திடுவர்
             புற்றுநோய் பற்றிக்கொண்டோர் புலம்பிநின்று அழுதிடுவர்
             அழுதிடுவார் கவலைபற்றி அதுவலட்டிக் கொள்வதில்லை !
 
             புகைபிடித்தால் புற்றுநோய் வருமென்று சொன்னாலும்
             புகைத்தபடி புற்றுநோய் விளம்பரத்தில் புகைவிடுவார் 
             அவர்க்குப்பகை புகையென்று அறிந்து அவரிருந்தாலும்
              அவர்புகையை ரசித்தபடி ஆனந்தம் கொண்டிடுவார் !
 
             விழிப்புணர்ச்சிக் கூட்டங்கள் பலசென்று வந்தாலும்
             விழுப்புணர்ச்சி அவரிடத்தில் விழித்தபடி தானிருக்கும்
             விழுந்தெழும்பி விவரீதம் அவருக்கு வந்தபின்னர்
             விழுபிதுங்கி வேதனையில் வெந்துஅவர் துடித்துநிற்பார் !
 
             புற்றுநோய் கோரமதை புரிந்துணர்ந்து கொள்ளவேண்டும்
             புற்றுநோய் விழிப்புணர்வை பூரணமாய் பெறவேண்டும்
             அற்பமெனப் புற்றுநோயை அலட்சியமாய் பார்க்காது
             ஆரோக்கியம் நல்வாழ்வு அமைந்துவிட வேண்டிநிற்போம் !
image1
             
Share this Post:
வேண்டிநிற்போம் ! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. Reviewed by on November 19, 2016 .

 காசநோய் ஒருகாலாம் காலனாய் நின்றது கணக்கின்றிப் பலபேர்கள் காலனிடம் போனார்கள் மருந்துபல வந்ததனை மாற்றிவிட்ட காரணத்தால் காசநோய் கதையிப்போ காணாமல் நிற்கிறது !அப்போது தொடக்கமே ஆருக்கு வந்தாலும் அவராடி அடங்கிவிடும் அவலத்தை தருகின்ற முற்றிநிற்கும் நோயாக முழுவுலகும் பரந்துநிற்கும் புற்றுநோயை தடுப்பதற்கு புறப்படுங்கள் மருத்துவமே ! குழந்தைமுதல் பெரியவரை புற்றுநோய் வதைக்கிறது குணமடைய பலமருந்தும் கொடுத்துமே வருகின்றார் என்றாலும் இந்தநோய் எதைப்பார்த்தும் அசையாமல் எமனாக வந்துநின்று இம்சையே கொடுக்கிறது ! புற்றுநோய் வந்துவிட்டால் புறவுலகே இருண்டுவிடும் வெற்றிடமாய்

ABOUT AUTHOR /