பேதமையென உரத்துச்சொல்லலாம்! …. ( கவிதை ) — } த.எலிசபெத். [ இலங்கை ]

 ›  › பேதமையென உரத்துச்சொல்லலாம்! …. ( கவிதை ) — } த.எலிசபெத். [ இலங்கை ]

கவிதைகள்

பேதமையென உரத்துச்சொல்லலாம்! …. ( கவிதை ) — } த.எலிசபெத். [ இலங்கை ]

 காதலில் கரைகாணலாம் வா -அழகே
காத்திருந்து இன்பம் சேர்க்கலாம்
மோதலை தூரப்போடலாம் -உயிரே 
மோட்சத்தை நாம் பெறலாம்…
கல்லையும் கடலையும் ரசிக்கலாம் -இன்றே
கவிதைபாடி நம்மை ருசிக்கலாம்
இல்லாத மகிழ்வுகளையெல்லாம் தேடலாம் -நம்முள்
இலகுவாக காதலை வளர்க்கலாம்…
ஊரூராய் போய் வரலாம் -இருவரும்
ஊர்வாயை விரியச்செய்யலாம் 
பாரெல்லாம் சுற்றித் திரியலாம் -பறவைகளாய்
பார்ப்போரை வியக்கவைக்கலாம்…
கண்களுக்குள் கனவுகளை விதைக்கலாம் -வண்ண‌
கவிதைகளாயதை அறுவடை செய்யலாம்
எண்ணங்களில் புன்னகையை பூசலாம் -எல்லா
இடங்களிலும் நம்பெயர் பதிக்கலாம்…
 
ஈரிதழ்களின் மணத்தை பூக்களுக்கும் சொல்லலாம் -நம்
ஈரிதய பந்தத்தினை ஒற்றையாயாக்கலாம் 
பேரிரைச்சல் கொண்ட இவ்வுலகபோக்குகளை -நாம்
பேதமையென உரத்துச்சொல்லலாம்
த.எலிசபெத்
இலங்கை
Share this Post:
பேதமையென உரத்துச்சொல்லலாம்! …. ( கவிதை ) — } த.எலிசபெத். [ இலங்கை ] Reviewed by on November 18, 2016 .

 காதலில் கரைகாணலாம் வா -அழகே காத்திருந்து இன்பம் சேர்க்கலாம் மோதலை தூரப்போடலாம் -உயிரே  மோட்சத்தை நாம் பெறலாம்… கல்லையும் கடலையும் ரசிக்கலாம் -இன்றே கவிதைபாடி நம்மை ருசிக்கலாம் இல்லாத மகிழ்வுகளையெல்லாம் தேடலாம் -நம்முள் இலகுவாக காதலை வளர்க்கலாம்… ஊரூராய் போய் வரலாம் -இருவரும் ஊர்வாயை விரியச்செய்யலாம்  பாரெல்லாம் சுற்றித் திரியலாம் -பறவைகளாய் பார்ப்போரை வியக்கவைக்கலாம்… கண்களுக்குள் கனவுகளை விதைக்கலாம் -வண்ண‌ கவிதைகளாயதை அறுவடை செய்யலாம் எண்ணங்களில் புன்னகையை பூசலாம் -எல்லா இடங்களிலும் நம்பெயர் பதிக்கலாம்…   ஈரிதழ்களின்

ABOUT AUTHOR /