விக்டோரிய பல்லினக் கலாச்சாரக் கழகம் வழங்கிய விருது!

 ›  ›  › விக்டோரிய பல்லினக் கலாச்சாரக் கழகம் வழங்கிய விருது!

செய்திகள்+,நாடும் நடப்பும்

விக்டோரிய பல்லினக் கலாச்சாரக் கழகம் வழங்கிய விருது!

வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதித்து, அதனால் பாராட்டைபெறும்போது
ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. நான் பெங்களூரில் இந்திய தொலைபேசி
தொழிலகத்தில் பணியாற்றியபோது கிடைத்த விருது என் வாழ்நாளில் நான்
மறக்க முடியாதது. என் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட ஓர் இயந்திரம்
உற்பத்தியில் ஒரு சாதனை ஏற்படுத்தியது. இச்சாதனை இன்றுவரையிலும்
முறியடிக்கப் படவில்லை. இதற்காக எனக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை
இன்னும் எண்ணி மகிழ்கிறேன். இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்
பணிபுரிந்த அத்தொழிலகத்தில் பெரிய அளவில் எனது புகைப்படத்தை வரவேற்பு
அறையில் வைத்து கௌரவித்ததுடன் தொழிலக செய்தித்தாளிலும் என்னைப்பற்றி
புகைப்படத்துடன் எழுதி கௌரவித்து பணமும் அன்பளிப்பாக கொடுத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து நான் ஆஸ்திரேலியாவில் குடியேறியபின் பணிபுரிந்த
தொலிழகத்திலும் நான் எண்ணற்ற விருதுகள் வாங்கியுள்ளேன்.
இருப்பினும் இவ்விருதுகளெல்லாம் என் தொழில் திறமைக்காக கிடைத்தவையே.
அதுவும் தனிப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்பட்டவை. ஆனால் 2009ஆம்
ஆண்டு நான்செய்த சமூகப் பணிக்காக ஆஸ்திரேலியதின விருது நடுவன் அரசால்
வழங்கப்பட்டது. இவ்விருதினைப் பெற்ற எனக்கு நான் வாழும் விக்டோரிய
மாநிலத்தில் அரசால் ஒரு பாராட்டினைப் பெறவேண்டுமென்ற அவா இருந்துவந்தது.
அந்த அவா இவ்வாண்டு நிறைவேறியது. இந்த ஆண்டு விக்டோரிய மாநில பல்லின
கலாச்சாரக் கழகத்தால் நான் ஆற்றிய சமூகப்பணியைப் பாராட்டி அதில் எனது
திறமைக்கு சான்றாக சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டேன்.
இம்மகிழ்ச்சியை அக்கினிக்குஞ்சு மற்றும் 24ரியல் நியூஸ் வாசகர்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
விருது பெற்ற சங்கர சுப்பிரமணியனை;

அக்கினிக்குஞ்சு
   மின்னிதழ் – 24 ரியல் நியூஸ் மின்னிதழ் நிர்வாகத்தினர் வாழ்த்தி மகிழ்கின்றனர்.

             

Share this Post:
விக்டோரிய பல்லினக் கலாச்சாரக் கழகம் வழங்கிய விருது! Reviewed by on November 17, 2016 .

வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதித்து, அதனால் பாராட்டைபெறும்போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. நான் பெங்களூரில் இந்திய தொலைபேசி தொழிலகத்தில் பணியாற்றியபோது கிடைத்த விருது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாதது. என் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட ஓர் இயந்திரம் உற்பத்தியில் ஒரு சாதனை ஏற்படுத்தியது. இச்சாதனை இன்றுவரையிலும் முறியடிக்கப் படவில்லை. இதற்காக எனக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை இன்னும் எண்ணி மகிழ்கிறேன். இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்த அத்தொழிலகத்தில் பெரிய அளவில் எனது புகைப்படத்தை வரவேற்பு அறையில் வைத்து கௌரவித்ததுடன் தொழிலக

ABOUT AUTHOR /