இந்தியாவுக்குதவிடட்டும் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண்.

 ›  › இந்தியாவுக்குதவிடட்டும் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண்.

கவிதைகள்

இந்தியாவுக்குதவிடட்டும் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண்.

ஐஞ்ஞூறும் ஆயிரமும் ஆலாய்ப் பறக்கிறது
          ஆரிடம் போவதென அங்கலாய்த்து நிற்கிறது 
          வங்கிகளோ நோட்டைமாற்ற மலைத்துமே நிற்கிறது
          எங்கிருந்தோ நோட்டெல்லாம் எட்டியெட்டிப் பார்க்கிறது !
 
          ஏழைகளோ உள்ளநோட்டை இரக்கமுடன் பார்க்கின்றார்
          இருக்கின்றார் அவர்களுடம் எடுத்துவிட முயலுகிறார்
          காவல்துறை இப்போது கண்விழித்துப் பார்க்காவிடின்
          கள்ளரிடம் மறுபடியும் நோட்டுக்கற்றை குவிந்துவிடும் !
 
          மோடியெனும் மூளையது முன்வைத்த திட்டமதை
          ஆடிவிடச் செய்வதற்கு அநேகம்பேர் முயலுகிறார்
           தாடிவைத்த மோடிஐயா தளர்வடைந்து போகாமல் 
           கோடிகளைப் பதுக்குவாரா கொண்டுவந்து நிறுத்துங்கள் !
 
          கறுப்புப் பணமெல்லாமே கால்முளைத்து வெளியில்வர
          எடுக்குமுங்கள் நடவடிக்கை இந்தியாவுக் குதவிடட்டும் 
          பணமுதலை பலவின்று பரிதவிக்கும் நிலைபார்த்து
          பாரதத்தாய் மனம்மகிழப் பார்த்திடலாம் மோடிஐயா !
 
          என்னதிட்டம் கொணர்ந்தாலும் எதிர்ப்புவந்து முன்னிற்கும்
          சொன்னபடி நீங்கள்செய்தால் துட்டர்தமைத் துடைத்திடலாம்
          நாணயத்தைக் காப்பாற்ற நல்லதிட்டம் கொண்டுவந்தீர்
          நாணயமாய் நடக்குமுங்கள் நாநயத்தை மெச்சுகிறோம் !
image1
 
Share this Post:
இந்தியாவுக்குதவிடட்டும் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண். Reviewed by on November 17, 2016 .

ஐஞ்ஞூறும் ஆயிரமும் ஆலாய்ப் பறக்கிறது           ஆரிடம் போவதென அங்கலாய்த்து நிற்கிறது            வங்கிகளோ நோட்டைமாற்ற மலைத்துமே நிற்கிறது           எங்கிருந்தோ நோட்டெல்லாம் எட்டியெட்டிப் பார்க்கிறது !             ஏழைகளோ உள்ளநோட்டை இரக்கமுடன் பார்க்கின்றார்           இருக்கின்றார் அவர்களுடம் எடுத்துவிட முயலுகிறார்        

ABOUT AUTHOR /