‘புழுகத்தையும்’ மகிழ்ச்சியையும் தந்த பரதநாட்டிய அரங்கேற்றம்.

 ›  › ‘புழுகத்தையும்’ மகிழ்ச்சியையும் தந்த பரதநாட்டிய அரங்கேற்றம்.

நாடும் நடப்பும்

‘புழுகத்தையும்’ மகிழ்ச்சியையும் தந்த பரதநாட்டிய அரங்கேற்றம்.

29.10.16 அன்று, ஆடற்கலாலய அதிபரான ஆடற்கலைமணி  திருமதி.றெஜனி சத்தியகுமார் அவர்களின்  மாணவிகளான செல்விகள்  சுவேதா ஜெயகுமார், சபிதா தேவசேனன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இரு செல்விகளும் எவ்வித மேடைக்கூச்சமோ, தயக்கமோ பயமோ இன்றி மிகவும் இயல்பாகத் தம்மை தயார்படுத்தி, ஆடிய நடனங்களில் உள்ள முத்திரைகளிலோ, அபிநயங்களிலோ நுணுக்கமாகப் பார்த்த போதும் எவ்விதமான வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவுமில்லை. ஒரேவிதாமான கால அளவில் ஒரு விநாடிப் பொழுதும் பிசகாமல் பிசகாமல் ஒரே விதாமாக ஆடியமை சபையோரை பரவசப்படுத்திய அரங்கேற்றமாக இது இருந்தது. இரு அரங்கேற்றச் செல்விகளும் தாம் காட்டிய முத்திரைகளிலோ அபிநயங்களிலோ ஒரு இம்மியளவும் வித்தியாசமின்றி, இருவரும் ஒரே நேர அளவைக் கடைப்:பிடித்தமை மட்டுமல்ல நடனத்துக்னக அடித்தளமாக இருப்பது நளினம். இந்த நளினத்தை லாவகமாக கொண்டு வருவது மிகவும் சிரமமானது. ஆனால் இந்த இரு செல்விகளிடமும் அது இயல்பாகவே இருந்தது.
இவ்வரங்கேற்றத்திற்கு நட்டுவாங்கம் செய்வதவர் செல்வன் நிமலன். சத்தியகுமார். நட்டுவாங்கம் வரைமுறை தவறாமல் இருக்கும் போதும் நடனத்தை அழகாக ஆட முடியும். செல்வன் நிமலன் சத்தியகுமார் இளந்தலைமுறையைச் சேர்ந்தவர். ஜேர்மனியில் முதலாவது நடன ஆசிரியர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர்
இந்த அரங்கேற்றத்தில் ஒரு சிறப்பம்சம் இசையமைப்பாயளரும் பாடகருமான திரு. எஸ். கண்ணன் அவர்களையும், தபேலா வித்துவான் திரு. சண்முகலிங்கம் தேவகுருபரன் அவர்டுகளையும் தவிர்த்து இன்னொரு பாடகரான செல்வி.அனுஸ்யா கண்ணன்,மிருதங்கம் வாசித்த  கலாஜோதி லகிபன் தர்மபாலன்,வயலின் வாசித்த செல்வன் பிரவீன் சாரங்கன் ஆகியோர் இளந்தலைமுறையினர். இவர்கள் அனைவரும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு தமது பங்கை மிகவும் சிறப்பாக வாசித்தனர்.
திரு.எஸ் கண்ணன் அவர்களின் மகளான செல்வி. அனுஸயா கண்ணன் தந்தையின் குரலையும், பாடகியான தாயின் குரலையும் கலந்த ஒரு கம்பீரமான குரலைக் கொண்டிருந்தார். ஏத்தனையோ பாடகிகள் தோன்றினாலும் கே.பி.சுந்தராம்பாளின் குரலுக்கு இணையாக எக்குரலும் இல்லை. அவருடைய குரல் தனித்துவமான குரல். செல்வி.அனுஸயா கண்ணனும் எதிர்காலத்தில் மிகச்சிறந்த பாடகியாக வருவார் என்பது உறுதி.
அதே போல மிருதங்கம் வாசித்த செல்வன். து.லகிபனின் வாசிப்பு அபாரம். யாரோ கைதேர்ந்த மிருதங்க வித்துவான்தான் மிருதங்கம் வாசிக்கிறார் என நான் நினைத்துக் கொண்டிருக்க,அரங்கேற்றம் ஒன்றுக்கு வாசிப்பது இததான் முதல்முறை என அறிவிப்பாளர் சொன்னதும் எனது மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் அளவே இல்:லாமல் இருந்தது. அது போலத்தான் செல்வன் பிரவீன் சாரங்கனின் வயலின் வாசிப்பும் ‘ஆகா’ என பிரமிக்க வைத்தது. செல்வன் .பிரவீன் சாரங்கன் நடிகமணி வி.வி.வைரமுத்தவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு விழாவை கொண்டு நடத்துபவர் அறிவிப்:பாளரே. அறிவிப்:பாளரின் கம்பீரமான குரல் உடல் மொழி சொல்லப்படும் விடயத்தை சபையோர் சலிப்:படையாமல் அவதானமாக கேட்கும் விதத்தில் சொல்லுதல் இவை போன்றவையே அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் பற்றிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும். பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு அறிவிப்பாளராக கடமையாற்றிய செல்வன். ரமேஸ் ஜெயகுமாரும், ஜேர்மன் மொழி அறிவிப்:பாளராக கடமையாற்றிய செல்வியும் அளவான தமது அறிவிப்புகளால் பாராட்டுக்குரியவர்களானார்கள்.
இவ்விழாவிற்கு தலைவராக, பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி திரு.முகசிவகுமாரன், திருமதி.அனுசா சற்குணநாதன், திருமதி.பாமினி குமாரச்:சந்திரன் ஆகியோர் நடனத்தில் தாங்கள் அவதானித்த அவதானிப்புகளை உரைகளில் விளக்கினார்கள்.thumbnail_img_0497thumbnail_img_0495
எனக்கு இவ்வரங்கேற்றம்: ஒரு ‘புழுகத்தை’க் கொடுத்தது. சொல்லப் போனால் இளந்தலைமுறையினர் ‘தூள் கிளப்:பினார்கள்’ என்பது எனது பார்வையயாகும்.
ஏலையா க.முருகதாசன்
Share this Post:
‘புழுகத்தையும்’ மகிழ்ச்சியையும் தந்த பரதநாட்டிய அரங்கேற்றம். Reviewed by on November 13, 2016 .

29.10.16 அன்று, ஆடற்கலாலய அதிபரான ஆடற்கலைமணி  திருமதி.றெஜனி சத்தியகுமார் அவர்களின்  மாணவிகளான செல்விகள்  சுவேதா ஜெயகுமார், சபிதா தேவசேனன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இரு செல்விகளும் எவ்வித மேடைக்கூச்சமோ, தயக்கமோ பயமோ இன்றி மிகவும் இயல்பாகத் தம்மை தயார்படுத்தி, ஆடிய நடனங்களில் உள்ள முத்திரைகளிலோ, அபிநயங்களிலோ நுணுக்கமாகப் பார்த்த போதும் எவ்விதமான வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவுமில்லை. ஒரேவிதாமான கால அளவில் ஒரு விநாடிப் பொழுதும் பிசகாமல் பிசகாமல் ஒரே

ABOUT AUTHOR /