மனமிருத்தி வணங்கிடுவோம் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

 ›  › மனமிருத்தி வணங்கிடுவோம் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

கவிதைகள்

மனமிருத்தி வணங்கிடுவோம் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

முருகனது திருநாமம் மூச்செல்லாம் நிறைந்திருக்கும்
      திருநீறு அவரிடத்தில் திகழொளியைத் தந்துநிற்கும் 
      வருகின்ற பொருளனைத்தும் வழங்கிடுவார் திருப்பணிக்கு
      வாழ்நாளில் வாரியார் வாழ்ந்திருந்தார் வையகத்தில் !
 
    இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாமே அறிந்திருந்தார்
    தலைக்கனத்தை ஒருநாளும் தானேற்றிக் கொண்டறியார் 
    நிலத்திலுள்ளார் கடவுள்தமை நினைத்துவிட பேசிநின்றார்
    பழுத்தசைவப் பழமாகப் பாரெல்லாம் சென்றுவந்தார் !
 
      அருணகிரி திருப்புகழை அவர்பாடும் விதத்தாலே
      அனைவருமே திருப்புகழை ஆசையுடன் படித்தார்கள்
      தெருவெங்கும் அவர்பேச்சைக் கேட்டுநின்ற காரணத்தால்
      முருகாவென் றழைக்கின்றார் முகிழ்ந்தெழுத்தார் மூலையெலாம் !
 
     சிரிப்பினைக் கையாண்டு சிந்தனையை ஊட்டிநின்றார்
     சிரிப்புடனே வாழ்வதற்குச் சிவனருளே தேவையென்றார்
     சிரிக்காதார் வாழ்வெல்லாம் சிறக்காது வெனவுரைத்தார் 
     சிரித்தமுகம் கொண்டுநின்ற சிவப்பழமாம் சுவாமியவர் !
 
      பாமரரரும் பண்டிதரும் பாராட்டப் பலசெய்தார் 
      பாடல்களை பிரித்ததற்குப் பாங்காக கருத்துரைத்தார் 
      அடுத்தவரின் முகஞ்சுழிக்க அவர்பேசும் விதமறியார் 
      அறிஞரெலாம் வாரியாரின் அருகுசெல்ல ஆசைப்பட்டார் ! 
 
      பல்கலைக் கழகத்தில் பலவுரைகள் அவர்செய்தார்
      பல்கலைக் கழகமாய் திகழ்ந்தாரே வாரியாரும் 
      விடைதெரியா பலவற்றை விளக்கிநின்றார் விரிவுரையால்
      விடசொல்லும் விதத்தாலே வியக்கவைத்தார்  வித்தகரை !
 
      உலகமெலாம் சென்றிடினும் ஓம்முருகா மறக்காது 
      முருகனது திருநாமம் முழுமனதாய் ஓதிநின்றார் 
      வருகின்ற அடியார்க்கு திருநீறு உவந்தளித்து 
      மருளகளகற்றி மனம்திருந்த மாமருந்தாய் அவரிருந்தார் !
 
      பேசினார் எழுதினார் பெருத்தவுடல் தான்சுமந்தார் 
      கூசாமால் குறுகாமல் குணம்சிறக்க வாழ்ந்திருந்தார் 
      மாசில்லா அவர்வார்த்தை வையகத்தை வாழ்விக்கும்
      காசினியில் அவர்வாழ்ந்த காலமதை நாம்நினைப்போம் !
 
       வாரியார் சுவாமிகள் வரலாறாய் ஆகிவிட்டார் 
       வரலாற்றில் அவர்போல வருவதற்கு யாருள்ளார் 
       வையகத்தார் மனம்திருந்த மருந்தாக அவரிருந்தார்
       வாரியார் சுவாமிகளை மனமிருத்தி வணங்கிடுவோம் !
image1
 
Share this Post:
மனமிருத்தி வணங்கிடுவோம் ! — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. Reviewed by on November 8, 2016 .

முருகனது திருநாமம் மூச்செல்லாம் நிறைந்திருக்கும்       திருநீறு அவரிடத்தில் திகழொளியைத் தந்துநிற்கும்        வருகின்ற பொருளனைத்தும் வழங்கிடுவார் திருப்பணிக்கு       வாழ்நாளில் வாரியார் வாழ்ந்திருந்தார் வையகத்தில் !       இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாமே அறிந்திருந்தார்     தலைக்கனத்தை ஒருநாளும் தானேற்றிக் கொண்டறியார்      நிலத்திலுள்ளார் கடவுள்தமை நினைத்துவிட பேசிநின்றார்     பழுத்தசைவப் பழமாகப் பாரெல்லாம் சென்றுவந்தார் !      

ABOUT AUTHOR /