முற்றுப்புள்ளி! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

 ›  › முற்றுப்புள்ளி! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

கதைகள்

முற்றுப்புள்ளி! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் ..

 மதச்சண்டை மறைவதற்கு
வைக்கவேணும் முற்றுப்புள்ளி
இனச்சண்டை ஒழிந்தழிய
இடவேணும் முற்றுப்புள்ளி
துரைத்தனத்தால் மனமொடியச்
செய்துநிற்கும் நிலையகல
துணிவுடனே முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் வாருங்கள் !
மதுவரக்கன் ஒழிவதற்கும்
விபசாரம் மடிவதற்கும்
தெருச்சண்டை தீர்வதற்கும்
வைத்திடுவோம் முற்றுப்புள்ளி
நிதிநீதி தனிலெங்கும்
நீண்டுவரும் ஊழலுக்கும்
நிச்சயமாய் முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் வாருங்கள் !

கலப்படத்தைச் செய்வார்கும்
நிலம்சுரண்டி வாழ்வார்க்கும்
கட்டாயம் முற்றுப்புள்ளி
வைத்திடுதல் அவசியமே
உளமளவில் நாடுபற்றி
உணராத உலுத்தர்களை
உணரவைக்க முற்றுப்புள்ளி
உடனேயே இடல்வேண்டும் !

ஊழல்செய்யும் கூட்டத்தார்
உழைப்பில்லாக் கூட்டத்தார்
ஏழைகளைச் சுரண்டுவார்
இரக்கமதை நசுக்குவார்
கோளைகளாய் வாழுகின்ற
குணங்கொண்டார் யாவருக்கும்
வாழ்வினிலே முற்றுப்புள்ளி
வைத்திடுவோம் வாருங்கள் !

சினமணைத்து நின்றிடுவார்
தீவினையைத் தேர்ந்திடுவார்
குணமனைத்தும் நஞ்சுடையார்
குவலயத்தைக் கலைக்கிடுவார்
நலம்முழுக்க நசுக்கிவிட
நாளுமே நினைத்திடுவார்
இனமகன்று போவதற்காய்
இட்டிடுவோம் முற்றுப்புள்ளி !

சீதனத்தை வாங்குதற்கு
தேவையிப்போ முற்றுப்புள்ளி
காதல்தனை கொல்வார்க்கு
கட்டாயம் முற்றுப்புள்ளி
பாதகத்தை செய்வதற்கு
பாவைதனை தூண்டுவார்க்கு
நீதியெனும் முற்றுப்புள்ளி
நிச்சயமாய் தேவையிப்போ !

 
       பெற்றவரைப் பேணாமல்
       பெருந்தடையே எனவெண்ணி
       சற்றுமவர் மனம்பார்க்கா
       சண்டாள குணமுடையோர்
       காப்பகத்தில் விட்டுவிடும்
       கருணையற்ற செயலொழிய
        கட்டாயம் முற்றுப்புள்ளி
        வைத்திடுவோம் வாருங்கள் !
 
        பொறுமையெனும் நகையணியும்
         நிறைவுடைய பெண்ணினத்தை
         குறைபடுத்தும் குணமுடையார்
          நெறியுடைத்து நிற்கின்றார் 
         அவர்செயலை அகற்றிவிட
         ஆர்வமுடன் கிளர்ந்தெழுந்து 
          அவர்தமக்கு முற்றுப்புள்ளி
          அனைவருமே வைத்துநிற்போம் !
               
          காந்திக்கு முற்றுப்புள்ளி
கோட்சேயால் வந்தது
சாந்திக்கு முற்றுப்புள்ளி
சண்டையால் வருகிறது
திக்கெட்டும் முற்றுப்புள்ளி
தேவையாய் இருக்கிறதே 
           திசைமாற்றம் தடுப்பதற்கு
தேவையன்றோ முற்றுப்புள்ளி !
image2
Share this Post:
முற்றுப்புள்ளி! ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. Reviewed by on October 15, 2016 .

 மதச்சண்டை மறைவதற்கு வைக்கவேணும் முற்றுப்புள்ளி இனச்சண்டை ஒழிந்தழிய இடவேணும் முற்றுப்புள்ளி துரைத்தனத்தால் மனமொடியச் செய்துநிற்கும் நிலையகல துணிவுடனே முற்றுப்புள்ளி வைத்திடுவோம் வாருங்கள் !மதுவரக்கன் ஒழிவதற்கும் விபசாரம் மடிவதற்கும் தெருச்சண்டை தீர்வதற்கும் வைத்திடுவோம் முற்றுப்புள்ளி நிதிநீதி தனிலெங்கும் நீண்டுவரும் ஊழலுக்கும் நிச்சயமாய் முற்றுப்புள்ளி வைத்திடுவோம் வாருங்கள் ! கலப்படத்தைச் செய்வார்கும் நிலம்சுரண்டி வாழ்வார்க்கும் கட்டாயம் முற்றுப்புள்ளி வைத்திடுதல் அவசியமே உளமளவில் நாடுபற்றி உணராத உலுத்தர்களை உணரவைக்க முற்றுப்புள்ளி உடனேயே இடல்வேண்டும் ! ஊழல்செய்யும் கூட்டத்தார் உழைப்பில்லாக் கூட்டத்தார் ஏழைகளைச்

ABOUT AUTHOR /