ஓடும் ரயிலில் ஒருவன்! ( சிறுகதை ) ஏலையா. க.முருகதாசன். ( – ஜேர்மனி. )

 ›  ›  › ஓடும் ரயிலில் ஒருவன்! ( சிறுகதை ) ஏலையா. க.முருகதாசன். ( – ஜேர்மனி. )

கதைகள்,செய்திகள்+

ஓடும் ரயிலில் ஒருவன்! ( சிறுகதை ) ஏலையா. க.முருகதாசன். ( – ஜேர்மனி. )

வீடு போய்ச் சேருவதற்கு இன்னும் மூன்று மணித்தியாலங்களாவது தேவைப்படும்.ரயிலை விட்டு இறங்கி பஸ் எடுத்து போயச் சேர வேண்டும். எப்படி இந்த மூன்று மணித்தியாலங்களும் போகப் போகுதே என யோசித்துக் கொண்டிருந்தேன். சக பயணிகளைப் பார்ப்பதும் கண்ணாடிக்கு வெளியே தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது. போர் அடிக்கத் தொடங்கியது. அப்பொழுது மின்னலென ஒரு ஞாபகம் வந்தது. எனது நண்பன் பொழுது போவதற்கு வாசி என்று சொல்லி ஒரு புத்தகத்தைத் தந்தான். நண்பனின் மனைவி சுற்றித் தந்த சாண்ட்விச் வைத்த பைக்குள்ளேயே அந்தப் புத்தகத்தை வைத்திருந்ததால,; கையோடு வைத்திருந்த பையிலிருந்து அதை எடுத்தேன். நண்பன் தந்த போது புத்தகத்தின் பெயரைக் கவனிக்கவில்லை. வெளியே எடுத்த புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன்’ ஓடும் ரயிலில் ஒருவன்’என்றிருந்து.
எனது பிரயாணத்திற்கும் புத்தகத்தின் தலைப்புக்கும் பொருத்தமாகவே இருந்தது. ஓடும் ரயிலில்; சக பயணிகளுடன் நானும் ஒருவன் என்று  நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டே வாசிக்கத் தொடங்கினேன். அது ஒரு காதல் கதை போல் இருந்தது. முதல் வரியே, ‘ அவள் என்னெதிரில் உட்கார்ந்திருந்தாள். அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். நான்  எனக்கு  எதிரே உள்ள அடுத்தடுத்த இருக்கைகளில் இருப்பவர்களைப் பார்ப்பது போல அவளையும் என் கண் பார்வைக்குள் அகப்படுத்தி அவளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.அவள் கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். எனது  பார்வையை அவள் சந்திக்கவில்லை….’ தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.
ரயில் ஒரு தரிப்பிடத்தில் நின்றது. சில விநாடிகளில் ‘வணக்கம்’ என்று சொல்லியவாறு ஒரு இளைஞன் எனக்கெதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.வாசித்த பக்கத்தில் விரலை வைத்து புத்தகத்தை மடித்தவாறே புன்னகைத்து அவனுக்கு வணக்கம் சொன்னேன். ‘உங்கள் வாசிப்பை நான் குழப்பிவிட்டேன் போல நீங்கள் வாசியுங்கள்; ‘ என்ற அவனக்கு, இல்லை….இல்லை பரவாயில்லை என்றவாறு புத்தகத்தை மீண்டும் பைக்குள் வைத்தேன்.
சில விநாடிகள் இருவரும் மௌனமாவிருந்தோம். அவனே பேச்சைத் தொடக்கினான்’ நீங்கள் எங்கை போறியள் என்றான்’ கால்ஸ்றூக’ என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னேன்.அவன் எங்கே போகிறான் என்பதை நான் கேட்கவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது என பேசாதிருந்தேன். அவனே பேச்சைத் தொடர்ந்தான்’ இப்ப வாசித்தீர்களே அந்தப் புத்தகத்தின் பெயர் என்னவென்றான் ‘ஓடும் ரயிலில் ஒருவன் என்றேன்’. மீண்டும் மௌனம் நிலவியது .என்னையே உற்றுப் பார்த்தான். நெற்றியை சுருக்கி கைளால் நெற்றியைத் தேயத்தபடி உங்களை எனக்குத் தெரியுமென்று நினைக்கிறன்’ என்றான்.’எப்படி ‘ என்று கேட்டதற்கு, நீங்கள்தானே சாகித்தியன். உங்களுக்கு பேஸ்புக் இருக்குத்தானே நீங்கள் கதை எழுதுகிறவர்தானே’ என அவன்சொல்ல ‘ ம்…என்று அவன் அறிந்து கொண்டதை அங்கீகரித்தேன்.
அவன் முகத்தில் முன்பிருந்த உற்சாகம் இல்லை. முகம் கலவரமாகியிருந்து. அவனிடத்தில் ஒரு தவிப்பு இருந்தது. என்னோடு எதைப்பற்றியோ பேச விரும்புகிறான் எனத் தெரிந்தது.
‘ஏன்  ஒரு மாதிரியாய் இருக்கிறியள்’ என்றேன்
‘ஒன்றுமில்லை’ எனப் பதில் சொன்ன அவன், ‘செவ்வாய்’ என்ற பெயரில் நீங்கள் எழுதிய கதையை ‘சங்கமம்’சஞ்சிகையில் வாசித்தேன் என்றவன். தொடர்ந்தான், செவ்வாய் தோசம் என்பது இரத்தத்தின் வித்தியாசத்தைச் சொல்வது. எல்லாருக்கும் எல்லா இரத்தமும் பொருந்துவதில்லை. இரத்த பொருத்தம் ஆண் பெண் உடலுறவுக்கு முக்கியம் என அந்தக் கதையில் வாசித்தேன். அது முக்கியமா’ எனக் கேட்டான். ‘நான் பலரிடம் விசாரித்தறிந்தலிருந்து அது உண்மைதான்’ என்றேன். அவன் முகம் இறுகத் தொடங்கியது. இருக்கையைவிட்டு எழுந்த அவன் தனக்குப் பின்னால் இருந்த இருக்கைகளையும் முன்னால் இருந்த இருக்கைகளையும் பார்த்தவிட்டு உட்கார்ந்தான் .;
‘எழும்பி என்ன பார்த்தனீங்கள்’ என்று கேட்டேன் .
‘ஒன்றுமில்லை………’ என்ற இழுத்தவன், ‘தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா’ என்று பார்தனான் என்றவன், ‘உங்களோடு கதைக்க வேண்டும் இது இரகசியம் போன்றது, நீண்ட நாட்களாக  குழப்பத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் உங்களுடைய ‘செவ்வாய்’ என்ற கதைதான்.
நான் எழுதிய கதை அவனைக் குழப்பியதாகச் சொன்னதும் நான் அதிர்ந்துவிட்டேன்.’என்னுடைய கதை உங்களைக் குழப்பிவிட்டதா…எப்படி ..’ என்று வியப்போடு கேட்டேன் தடுமாறிய குரலில், உங்களுடைய கதையில் செவ்வாய் தோசம் என்பது இரத்தத்தைச் சார்ந்தது. செவ்வாய் தோசம் உள்ளவர்களின் இரத்தம் செவ்வாய் தோசம் உள்ளவர்களின் இரத்தத்துடனேயே பொருந்தும் என்று எழுதியிருக்கிறீர்கள், அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது………மௌனமானான் .
நான் அவனை கூர்ந்து பார்த்தேன். ஏதோ சொல்ல நினைக்கிறான் சொல்லக் கூச்சப்படுகிறான் என்பது அவனது பார்வையில் தெரிந்தது. எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்றேன், சொல்லத் தொடங்கினான்.
‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லை, ஆனால் எனது தொழிற்சாலையில் வேலை செய்யும் வேறு நாட்டுப் பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறன்……..அதுதான்….
‘தொடர்பென்றால் உடலுறவுதானே’ கேட்டேன்.
அவன் தலையை மட்டும் ஆட்டினான்.அவனே தொடர்ந்தான் ‘அவர்களின் இரத்தம் என்னுடம்புக்கு பொருந்தாத இரத்தமாகவிருந்தால் எனக்கு ஏதும் வருத்தம் வந்துடுமோ என்று பயப்படுகிறேன்’ என்றான்.
‘ச்சாச்சா அப்படி ஒன்றும் நடக்காது பயப்படாதையுங்கோ’ எனத் தைரியம் கொடுத்தேன். தமது இரகசியங்களை மூடிமறைக்கும் மனிதர்களுக்குள் தனது இரகசியத்தை வெளிப்படையாகச் சொன்ன இளைஞனைப் வியப்புடன் பார்த்தேன். இரத்த வேறுபாட்டின் பிரச்சனைதான் அவன் தன் இரகசியத்தைச் சொல்ல வைத்தது என்று நினைத்துக் கொண்டேன்.
அவனின் பயத்தை வைத்து அது தொடர்பான எந்த வியாக்கியானத்தையும் அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்ல நான் விரும்பவில்லை.ஊர் விசயங்களை நோக்கி எங்கள் பேச்சு திரும்பியது. முன்றாவது  தரிப்பிடத்தில் ரயில் நிற்க அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டான்.
நான் இறங்க வேண்டிய தரிப்பிடம் வரையும் அவன் சொன்னதைப் பற்றியே யோசித்துக கொண்டிருந்தேன். புத்தகத்தை எடுத்தேன், பக்கங்களைப் புரட்டினேன். வாசிக்க முடியவில்லை. கையில் புத்தகத்தை வைத்தபடி யன்னலுக்கூடாக நிலைகுத்தி வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். இவன் கல்யாணம் செய்யும் போது தனது மனைவிக்கு எனக்குச் சொல்வது போல சொல்வானா…..சொல்ல மாட்டான்…எனக்குள் ஒரு போராட்டம்.
கால்ஸ்றூக புகையிரத நிலையம் வந்தடைந்தது. இறங்கி பஸ்ஸில் ஏறி வீடு போய்ச் சேர்ந்தேன். ஒரு அரை மணித்தியாலத்திற்குப் பிறகு ரயில் சந்தித்த இளைஞன் சொன்ன கதையை மனைவிக்குச் சொன்னேன். மனைவி அதிர்ந்து போய் ‘ அவன் கல்யாணம் செய்யப் போகிற பெண்ணுக்குத் துரோகம் செய்யப் போகிறானே ‘என கொஞ்சம் கோபமாகச் சொன்னால்.
‘சரி அதையேன் நாங்கள் மனதில் போட்டு குழப்புவான்’ எனச் சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
இரண்டு மதாங்கள் செல்ல ஒரு நாள்  மனைவி ‘ என்னோடு படித்த மகிழினியின் மகளுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதாம். எங்கடை சிற்றிக்கு யாரோ தெரிந்தவையை பார்க்க வாறாளாம், எங்கடை வீட்டுக்கும் புருசனோடு வருகிறாளாம்,; சாப்பாடு குடு;ப்பமா’ என்றாள், ‘ ஓ…அதற்கென்ன குடுப்பம் எப்ப வருகினமாம் ‘ என்று  கேட்க ‘வாற சனிக்கிழமை’ என்றாள் மனைவி.
சனிக்கிமையும் வந்தது, மனைவி விருந்து கொடுப்பதற்கு தடபுடலாகச் சமைத்து வைத்துவிட்டு, புதுத்தம்பதிகளின்வருகைக்காக காத்திருந்தோம்.
எமது வீட்டின் கட்டிட வெளிக்கதவு மணிச்சத்தம் கேட்டது. மகிழினியின் மகள்தான் கணவனுடன்  வருகிறாள் என எதிர்பார்ப்புடன், கதவு திறப்பதற்குரிய பட்டனை அமர்த்திவிட்டு வீட்டுக் கதவைத் திறந்தபடி காத்திருந்தோம். படியேறி வந்தவர்களில் முதலில் மகிழினியின் மகளின் முகமே தெரிந்தது. எனது மனைவியைக் கண்டதும் ‘அன்ரி’ என விரைந்து வந்து அணைத்தாள். அங்கிள் என என்னையும் விழித்து கைலாகு கொடுத்தாள். தொடர்ந்து அவள் பின்னால் வந்து எங்களிருவருக்கும் கைலாகு கொடுத்த இளைஞனைப் பார்த்தேன். ரயிலில் சந்தித்த அதே இளைஞன்தான் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான்.
என்னைக் கண்டதும் அவன் முகத்திலிருந்த புன்சிரிப்பு மறைந்து முகம் இருண்டது. அவனை முன்பு சந்திக்காதது போல நான் உள்ளே வாருங்கள் என அழைத்து வந்து உட்காரச் செய்தோம்.
மனைவி சமையல் செய்தவற்றைக் கொண்டு வந்து மேசையில் வைத்துக் கொண்டிருந்தாள். மகழினியின் மகளிடம் பெயரைக் கேட்டேன். அவள் தன்னுடைய பெயர் ரஜிதா என்றும் புருசனின் பெயர் ஜனகன் என்றும் சொன்னாள். கணவனின் முகத்தைப் பார்த்த அவள் அவன் சோர்ந்திருப்பதைக் கண்டதும்’ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு, தலையிடிக்குதா’ எனக் கேட்க’ இல்லை ஒன்றுமில்லை’ என்றவன் என்னை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவன் தவிப்பை உணர்ந்த நான் இயல்பாகச் சிரித்து அப்பொழுதுதான் அவனைச் சந்திப்பது போல’ஜனகன் எலுமிச்சம் பழம் கரைத்துத் தரவா குடிச்சால் தலையிடி போய்விடும்’ என்றேன். அவனோ வேண்டாம் என்ற சொல்லியும் வேகமாகப் போய் எலுமிச்சம் பழத்தைக் கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தேன்.
இதற்கிடையில் மனைவி ‘ சரி சாப்பிட வாங்கோ’ என மகிழினி ‘என்ன அன்ரி வந்தவுடனே சாப்பிடவா, கொஞ்ச நேரம் கதைச்சிட்டுச் சாப்பிடுவோமே’ என சாப்பிட்டுக் கொண்டே கதைக்கலாம்’  என்றாள் மனைவி.
நால்வரும் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மனவி மகிழினியின் தாயுடன் ஒரே வகுப்பில் படித்த காலத்தை இரசித்து இரசித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல ஜனகன் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நானும் அன்றுதான் அவனைச் சந்திப்பது போல கல்லுளி மங்கனாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தேன்.images (20)
நான் கதை எழுதுபவன், கிண்டிக்கிளறிப் பூராயம் புடுங்குவது எனது வேலை. கிடைத்த இடைவெளியி;ல், இரண்டு பேருக்கும் பேசித்தான் கல்யாணம் நடந்ததோ எனக் கேட்க, ‘ இல்லை அங்கிள், விரும்பி பிளஸ் பேசி என்று உற்சாகமாச் சொன்னாள். ‘ எத்தனை வருசமாக ‘ என்ற முடிப்பதற்குள் ‘ ஜனகன் மூன்ற வருசமாக விரும்பியிருந்தோம் இல்லையா’ என மிகவும் இயல்பாகச் சொன்னான்.
நான் கதைத்துக் கொண்டிருப்பதை இடைமறித்து மனைவி தனக்கும் தனது தோழிக்குமுள்ள சினேகிதத்தைப் பற்றியே மகிழினிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஜனகனால் எங்கள் உரையாடலுடன் ஒட்டிக் கொள்ள முடியவில்லை. ஒப்புக்குச் சிரித்தான். அதைக் கவனித்த மகிழினி, இவருக்கு என்ன நடந்தது வரும் போது சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டு வந்தாரே. …அவள் முடிக்க முந்தி’ இந்த வெய்யில் எல்லாரையும் குழப்பிவிடும், அவருக்கு ஒன்றுமில்லை என்று’ அவன் நிலையை உணர்ந்து சொன்னேன். சாப்பிட்டு முடிந்ததும் கதைத்துக் கொண்டிருந்தோம்.
எனது மனைவி சொன்ன’ கல்யாணம் செய்யிறவளுக்கு துரோகம் செய்யப் போகிறானே’ என்ற சொற்கள் திரும்பத் திரும்ப எனக்குள் மோதிக் கொண்டிருந்தன. என்னைச் சமாளிப்பதே எனக்குப் பிரச்சினையாகவிருந்தது. நடித்துக் கொண்டிருந்தேன்.
மாலைத் தேனீரையும் குடித்துவிட்டு விடைபெற்றக் கொண்டு அவர்கள் போய்விட்டார்கள். நான் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருந்தேன்.
அன்று ரயிலில் சந்தித்த இளைஞன் உனது தோழியின் மருமகன்தான் என எப்படிச் சொல்வேன்.ஆனால் ஒருநாள் சொல்லத்தான் வேண்டும்.
1982172_1399034230360882_1011978937_n
  ஏலையா. க.முருகதாசன். ( – ஜேர்மனி. )
(முக்கிய வேண்டுகோள்: இக்கதைக்கு மட்டுமல்ல என்னால் எழுதப்பட்டு இவ்விணையத்தளத்தில் பிரசுரமாகும் எனது ஆக்கங்களை வாசிக்கும் வாசகர்கள் அவற்றில் உள்ள குறைநிறைகளை விமர்சனங்களாக முன் வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்)
Share this Post:
ஓடும் ரயிலில் ஒருவன்! ( சிறுகதை ) ஏலையா. க.முருகதாசன். ( – ஜேர்மனி. ) Reviewed by on August 12, 2016 .

வீடு போய்ச் சேருவதற்கு இன்னும் மூன்று மணித்தியாலங்களாவது தேவைப்படும்.ரயிலை விட்டு இறங்கி பஸ் எடுத்து போயச் சேர வேண்டும். எப்படி இந்த மூன்று மணித்தியாலங்களும் போகப் போகுதே என யோசித்துக் கொண்டிருந்தேன். சக பயணிகளைப் பார்ப்பதும் கண்ணாடிக்கு வெளியே தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது. போர் அடிக்கத் தொடங்கியது. அப்பொழுது மின்னலென ஒரு ஞாபகம் வந்தது. எனது நண்பன் பொழுது போவதற்கு வாசி என்று சொல்லி ஒரு புத்தகத்தைத் தந்தான். நண்பனின் மனைவி சுற்றித்

ABOUT AUTHOR /