ஆதவனும் மறைந்து கொண்டான்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

 ›  › ஆதவனும் மறைந்து கொண்டான்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

கவிதைகள்

ஆதவனும் மறைந்து கொண்டான்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன்.

மாலையில் காற்று மந்தமாருதமாக வீச
மணமிக்க மலரினது மகரந்தத்தூள்களும்
அக்காற்றொடு கலந்து வந்து மயக்கம்தர
மயக்கமான அந்த மாலைப்பொழுதினில்
மலை உச்சியிருந்து மெதுவாய் கதிரவன்
தன் கதிர்களைச் சுருக்கியே கீழிறங்க
தடாகத்தின் கரையில் நான் காத்திருக்க
என் காதலியும் வந்தாள் என்னைத் தேடி
வந்தவள் சீண்டினாள் வம்புகள் செய்துமே
தாவிப் பிடித்தேன் அவள் தளிர்க்கரத்தை
என் பிடியிருந்து தன் கைதனை இழுக்க
அவள் அணிந்த கண்ணாடி வளையல்கள்
உடைந்து நொருங்கி என் உள்ளங்கையை
காயப்படுத்தவே அங்கு இரத்தம் கசிந்தது
இரத்தத்தை பார்த்து பதறிய என் பைங்கிளி
அய்யோவென அலறித்துடித்த அடுத்தகணம்
தன் தாவணி இறக்கி ஓரத்தைக் கிழித்தாள்
என் உள்ளங்கையில் கட்டினைப் போட்டாள்
அந்தக்கணம் அவள் அருகிருந்த நெருக்கம்
மணமிக்க மலரின் மகரந்தத்தூள் காற்றில்
கொண்டுவந்த மணத்தை மிஞ்சி நின்றதால்
மயங்கிய நானும் என்மனம் தள்ளாடிடவே
அவள் செவ்விதழ்மேல் என்இதழ் பதித்தேன்
இதழ்பதிய அவளென்னைக் கட்டிப்பிடித்தாள்
அதற்கு மேல் அங்கு அரங்கேறும் காட்சிகள்
அனைத்தையும் காணமுடியாதென ஆதவனும்
மலையினடி சென்று மறைந்து கொண்டான்!sankara20140704
-சங்கர சுப்பிரமணியன்.
Share this Post:
ஆதவனும் மறைந்து கொண்டான்! — ( கவிதை ) — } சங்கர சுப்பிரமணியன். Reviewed by on July 26, 2016 .

மாலையில் காற்று மந்தமாருதமாக வீச மணமிக்க மலரினது மகரந்தத்தூள்களும் அக்காற்றொடு கலந்து வந்து மயக்கம்தர மயக்கமான அந்த மாலைப்பொழுதினில் மலை உச்சியிருந்து மெதுவாய் கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கியே கீழிறங்க தடாகத்தின் கரையில் நான் காத்திருக்க என் காதலியும் வந்தாள் என்னைத் தேடி வந்தவள் சீண்டினாள் வம்புகள் செய்துமே தாவிப் பிடித்தேன் அவள் தளிர்க்கரத்தை என் பிடியிருந்து தன் கைதனை இழுக்க அவள் அணிந்த கண்ணாடி வளையல்கள் உடைந்து நொருங்கி என் உள்ளங்கையை காயப்படுத்தவே அங்கு இரத்தம்

ABOUT AUTHOR /