இலங்கை வீரர் சமிந்த எரங்கா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி!

 ›  › இலங்கை வீரர் சமிந்த எரங்கா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி!

விளையாட்டு

இலங்கை வீரர் சமிந்த எரங்கா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி!

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்கா இதயநோய் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்காவும் இடம் பெற்றிருந்தார். நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் அவர் விளையாடினார்.

இந்நிலையில் எரங்கா இதய நோய் காரணமாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக 2வது டெஸ்டில் பந்து வீசும்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனால் நாளை அவர் லாக்பரோக் யுனிவர்சிட்டியில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த இருந்தார்.

ஏற்கனவே இலங்கை அணியில் போதிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்று மேத்யூஸ் புலம்பி வரும் நிலையில், சமிந்தா எரங்காவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 21ம் திகதி தொடங்குகிறது.

Share this Post:
இலங்கை வீரர் சமிந்த எரங்கா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி! Reviewed by on June 20, 2016 .

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்கா இதயநோய் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்காவும் இடம் பெற்றிருந்தார். நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் அவர் விளையாடினார். இந்நிலையில் எரங்கா இதய நோய் காரணமாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 2வது டெஸ்டில் பந்து வீசும்போது அவரது பந்து வீச்சில்

ABOUT AUTHOR /