அனைத்துமே உனக்கு ! — ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண். .

 ›  › அனைத்துமே உனக்கு ! — ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண். .

கவிதைகள்

அனைத்துமே உனக்கு ! — ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண். .

அன்புடன் இரு 
ஆணவம் அகற்று
இன்முகம் காட்டு
ஈகை வளர்
உண்மையை உரை
ஊக்கத்தை நாடு
எரிக்கும் கோபத்தை
ஏற்காது இரு
ஐக்கியமாகு சத்தியவழியில்
ஒன்றிய மனத்துடன்
ஓதிநீ அறிந்திடு
ஒளடதம் ஆகும்
அனைத்துமே உனக்கு !

கள்ளமனத்தினை காணாமல்செய்திடு
கிள்ளியெறிந்திடு கீழவர்தொடர்பினை 
குறைகள்சொல்வதை கூறுகள்போட்டிடு
கெட்டவர்நட்பு கேடெனவுணர்ந்திடு
கைகளால் அன்பொடு கைகளைப்பற்றிடு
கொலைவெறி ஊட்டிடும் கோபத்தைவிட்டிடு
கெளரவமுந்தன் ஒளடதமாகுமே !

சன்மார்க்கம் நின்றால் சாந்தியைப் பெறலாம்
சிறுமதி கொண்டால் சீரெலாம் மறையும்
சுகம்பெற வேண்டில் சூழலை மாற்று 
செகமதில் உன்னைச் சேவிப்பர் நாளும்
சைகள் மூலம் சகலதும் உணர்த்தலாம்
சொல்லும் சொல்லை சோர்விலா சொல்லு
செளக்கியம் ஆகும் சகலதும் உனக்கு !

தர்மம் செய்வதை தாமதம் ஆக்காதே
திருட்டு என்பதை தீண்டாமல் இருந்திடு
துன்மார்க்க குணத்தைத் தூரவே விரட்டு 
தென்படும் உனக்கு தேவையாம் தெளிவு 
தைக்கும் வார்த்தையை தவிர்த்தே நில்லு
தொட்டிடும் யாவும் தோன்றிடும் நன்றாய் !


Share this Post:
அனைத்துமே உனக்கு ! — ( கவிதை ) — } எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண். . Reviewed by on May 20, 2016 .

அன்புடன் இரு ஆணவம் அகற்று இன்முகம் காட்டு ஈகை வளர் உண்மையை உரை ஊக்கத்தை நாடு எரிக்கும் கோபத்தை ஏற்காது இரு ஐக்கியமாகு சத்தியவழியில் ஒன்றிய மனத்துடன் ஓதிநீ அறிந்திடு ஒளடதம் ஆகும் அனைத்துமே உனக்கு ! கள்ளமனத்தினை காணாமல்செய்திடு கிள்ளியெறிந்திடு கீழவர்தொடர்பினை குறைகள்சொல்வதை கூறுகள்போட்டிடு கெட்டவர்நட்பு கேடெனவுணர்ந்திடு கைகளால் அன்பொடு கைகளைப்பற்றிடு கொலைவெறி ஊட்டிடும் கோபத்தைவிட்டிடு கெளரவமுந்தன் ஒளடதமாகுமே ! சன்மார்க்கம் நின்றால் சாந்தியைப் பெறலாம் சிறுமதி கொண்டால் சீரெலாம் மறையும் சுகம்பெற வேண்டில் சூழலை

ABOUT AUTHOR /