அவசரத் தேவை -கருணைப் பார்வை!

 ›  › அவசரத் தேவை -கருணைப் பார்வை!

உதவிக்கரம்

அவசரத் தேவை -கருணைப் பார்வை!

சென்னையில் அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோருக்கான விடுதி, தொழில்பயிற்சி மையத்தில் பெரும்பாலான பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டன. இவர்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு, தமிழக அரசின் உதவிக்காகக் காத்திருக்கின்றனர். இவர்கள் தாங்கள் தங்கியுள்ள கட்டடத்தைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில்பயிற்சி: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ரெட்டைக்குழி தெருவில் தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்தச் சங்கத்தில் பார்வையற்றோருக்கு மெழுகுவர்த்தி, காகித கவர், நோட்டு-புத்தகங்கள், மிதியடி, கோப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் தாயாரித்தல் ஆகியவற்றைத் தயாரிக்கும் வகையில் தொழில்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
கட்டடங்களில் விரிசல், வீணான 100 மூட்டை சிமென்ட்: இந்த நிலையில், சென்னையில் அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த சங்கத்தின் அலுவலகம், விடுதிகளில் வைக்கப்பட்டிருந்த பதிவேடுகள், புதிய கட்டுமானத்துக்கான 100 மூட்டை சிமென்ட், பார்வையற்றோர் தயாரித்த பொருள்கள் என ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் சேதமடைந்து விட்டன. மேலும் விடுதி, தொழில்பயிற்சி கட்டடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அவற்றில் மழைநீர் வடிந்து, மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான கே.வி.பக்கிரிசாமி, பொதுச் செயலர் வி.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:
இங்கு தற்போது கல்லூரி மாணவிகள் 18 பேர் உள்பட மொத்தம் 50 பேர் தங்கியுள்ளனர். இங்கு பயிற்சி பெற்ற பலர் அரசு, தனியார் நிறுவனங்களில் எழுத்தர், ஆசிரியர் உள்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 35 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் பொருள்கள் சேதம்: தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு இந்த விடுதி, தொழில்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு தன்னார்வலர் ஒருவரது முயற்சியால் ரூ.27 லட்சம் மதிப்பில் அரங்கம் கட்டப்பட்டு வந்தது. சில பிரச்னைகளால் அந்தப் பணி தடைபட்டுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக நாங்கள் தயாரித்த அனைத்துப் பொருள்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. மேலும், கட்டுமானத்துக்கு வைக்கப்பட்டிருந்த சிமென்ட் மூட்டைகளும் தண்ணீரில் மூழ்கி பாழாகிவிட்டது.
கடந்த மாதம் பலத்த மழை பெய்தபோது சமையல் கூடம், தொழில்பயிற்சி மையம், அலுவலகம், கணினி மையம் எனக் கட்டடத்தின் பல பகுதிகளில் வெள்ளம் காரணமாக பெரிதும் அவதிப்பட்டோம்.
எனவே, இந்தக் கட்டடத்தைச் சீரமைக்க தர உதவியை எதிர்பார்க்கிறோம்.
பாôர்வையற்றோருக்கான இந்த விடுதியைச் சீரமைத்துத் தரவும், முன்புபோல இயங்கவும் அரசின் உதவியையும், புரவலர்களின் கருணைப் பார்வையையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் இங்கே தங்கியிருக்கும் 60-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்.
உதவிக் கரங்களை எதிர்நோக்கும் பார்வையற்றோர்!
“”மனிதாபிமான அடிப்படையில் தொடக்கத்தில் காகிதக் கவர், கோப்புகள், பைகள் தயாரிக்க பல்வேறு தனியார் நிறுவனங்களிடமிருந்து “ஆர்டர்கள்’ கிடைத்தன. இதைத் தொடர்ந்து, அதற்கேற்ப பொருள்களைத் தயாரித்து அதன் மூலம் கிடைக்கும் தொகையைப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது, பயிற்சி பெறுவோருக்கு உதவித் தொகை வழங்குவது எனப் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தோம். ஆனால், இப்போது சென்னை பெட்ரோலியம் நிறுவனத்திடமிருந்து (சிபிசிஎல்) மட்டுமே “ஆர்டர்கள்’ கிடைக்கின்றன.
பார்வையற்றோர் நலன் கருதி அரசு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் மனிதாபிமானத்தின் அடிப்படையில், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்க “ஆர்டர்கள்’ வழங்கினால் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மேலும் அதிகளவிலான பார்வையற்றோருக்கு உதவத் தயாராக இருக்கிறோம்.
நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்வையற்ற 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உதவி கேட்டு எங்கள் சங்கத்துக்கு வரலாம். அவர்களது மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டையைச் சரிபார்க்கப்பட்டு, விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கவும், அதற்கு பிறகு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றனர் இந்தப் பார்வையற்றோர் சங்கத்தை நிர்வகிக்கும் பக்கிரிசாமியும், விஸ்வநாதனும்.
மேலும் விவரங்களுக்கு விஸ்வநாதனை 94448 33353 என்ற செல்லிடப்பேசியில் தொடர்புகொள்ளலாம்.

Share this Post:
அவசரத் தேவை -கருணைப் பார்வை! Reviewed by on December 11, 2015 .

சென்னையில் அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோருக்கான விடுதி, தொழில்பயிற்சி மையத்தில் பெரும்பாலான பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டன. இவர்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு, தமிழக அரசின் உதவிக்காகக் காத்திருக்கின்றனர். இவர்கள் தாங்கள் தங்கியுள்ள கட்டடத்தைச் சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில்பயிற்சி: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ரெட்டைக்குழி தெருவில் தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்தச்

ABOUT AUTHOR /