நீராடுகின்றாள்! நீந்துகின்றாள்!!

 ›  › நீராடுகின்றாள்! நீந்துகின்றாள்!!

கவிதைகள்

நீராடுகின்றாள்! நீந்துகின்றாள்!!

வெள்ளை எங்கிருந்தால் நன்றென்று
வெகுகாலம் நானும் சிந்தித்து சிந்தித்து
விடையொன்று கண்டேன் என்றேன்
எவ்விடத்தில் கண்டீரென்று கேட்டாள்
என்னவளும் என்னிடம் இனிமையாக

உடையில் அந்த வெள்ளை இருந்தால்
அதை உடுத்துபவர் உயர்வாய்த் தெரிவார்
என்றே நானும் சொல்லி நின்ற பொழுது
அயோக்கியத் தனம் பண்ணி இப்புவியில்
வாழும் அந்த ஈனப் பிறவிகள் எல்லோரும்
வெள்ளை உடுத்தி நின்றால்
உயர்ந்தவராய் மதிக்கும் உள்ளமும்
உமக்குண்டாவென பதில் கேள்வி கேட்டாள்

பதிலறியாது நானும் விழித்தங்கு நின்றேன்
வெண்பற்கள் தெரிய சிரித்தாள் என்னழகி
பதில் கிடைத்ததால் நானும் பரவசமானேன்

வெள்ளை நிறம் பற்களில் இருந்தால் நலமே
என்று நானும் சொல்லி என்னவளைப் பார்க்க
வாயை விட்டு இன்னும் வரமாட்டீரோ என்றாள்

எனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொன்னேன்
இல்லை இல்லை என்றே எல்லாவற்றையும்
அவளும் மறுத்து வந்ததாலே வேறு வழியின்றி
விடையை நீயே சொல்லேன் என்றேன் நான்

என் தோல்வி கண்டவளும் மகிழ்ந்துமே போக
கதலியிடம் தோற்பதிலும் மகிழ்வுண்டு என்றேன்
உன் விடையும் சரியாய் இருந்தால்
இன்னும் மகிழ்வடைவான் இவன் என்றேன்

அதற்குள் அவசரமும் உமக்கேன் என்றவள்
சொன்ன பதிலாலே ஆச்சரியமும் அடைந்தேன்
அத்தோடவளை அதிசயித்தும் பார்த்தேன்

அவள் சொன்ன பதிலிலும் ஒரு சுவையுண்டு
மெச்சுபவர்க்கு மட்டும் பதிலை நான் சொல்வேன்
வெள்ளை நிறமதுவும் உள்ளமதில் இருந்தால்
அதைவிட நன்று யாதுள என்று சொல்லியவள்

கள்ளமில்லா வெள்ளை மனம் நமக்கிருந்தால்
எல்லையில்லா இன்பம் வாழ்வில் என்றுமுண்டு
என்றவளும் பாடுகின்றாள் அதனால் இப்போ
என் இதயத்திலும் நீராடுகின்றாள்! நீந்துகிறாள்!!

-சங்கர சுப்பிரமணியன்.

Share this Post:
நீராடுகின்றாள்! நீந்துகின்றாள்!! Reviewed by on October 24, 2015 .

வெள்ளை எங்கிருந்தால் நன்றென்று வெகுகாலம் நானும் சிந்தித்து சிந்தித்து விடையொன்று கண்டேன் என்றேன் எவ்விடத்தில் கண்டீரென்று கேட்டாள் என்னவளும் என்னிடம் இனிமையாக உடையில் அந்த வெள்ளை இருந்தால் அதை உடுத்துபவர் உயர்வாய்த் தெரிவார் என்றே நானும் சொல்லி நின்ற பொழுது அயோக்கியத் தனம் பண்ணி இப்புவியில் வாழும் அந்த ஈனப் பிறவிகள் எல்லோரும் வெள்ளை உடுத்தி நின்றால் உயர்ந்தவராய் மதிக்கும் உள்ளமும் உமக்குண்டாவென பதில் கேள்வி கேட்டாள் பதிலறியாது நானும் விழித்தங்கு நின்றேன் வெண்பற்கள் தெரிய சிரித்தாள்

ABOUT AUTHOR /