„மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவி- 9

 ›  › „மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவி- 9

கவிதைகள்

„மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவி- 9

இனவழியறிவோடு
சிகரத்துக் கேகுவோம்
முகவரிகள் நாம் பதிக்க
முகமூடிகள் அகற்றிய
முழுமனித பாதைகளின்
முதல் வழியில்
தடம் பதிப்போம்.
கனவுகள் வரைந்த
காட்சிகளின் பாதைகளில்
உணர்வுகளை வழிநடத்தி
உள்ளங்களை வென்றெடுத்து
ஒன்றிணைந்த வேள்விகளால்
உயிர் கொடுத்தேனும்
உச்சங்கள் நாம் தொடுவோம் .
வாழ வந்த பூமியிலே
வாதங்களை வளர்த்து நிற்கும்
பேதங்களை களைந்து விட்டு
வந்து வாழ்ந்த காரணத்தை
சென்ற பின்னும்
சிறப்பில் வைக்கும்
சிகரங்களாய்
செதுக்கிச் செல்வோம்.

மாலினி மாலா,ஜேர்மனிGetAttachment (4)

Share this Post:
„மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவி- 9 Reviewed by on September 1, 2015 .

இனவழியறிவோடு சிகரத்துக் கேகுவோம் முகவரிகள் நாம் பதிக்க முகமூடிகள் அகற்றிய முழுமனித பாதைகளின் முதல் வழியில் தடம் பதிப்போம். கனவுகள் வரைந்த காட்சிகளின் பாதைகளில் உணர்வுகளை வழிநடத்தி உள்ளங்களை வென்றெடுத்து ஒன்றிணைந்த வேள்விகளால் உயிர் கொடுத்தேனும் உச்சங்கள் நாம் தொடுவோம் . வாழ வந்த பூமியிலே வாதங்களை வளர்த்து நிற்கும் பேதங்களை களைந்து விட்டு வந்து வாழ்ந்த காரணத்தை சென்ற பின்னும் சிறப்பில் வைக்கும் சிகரங்களாய் செதுக்கிச் செல்வோம். மாலினி மாலா,ஜேர்மனி

ABOUT AUTHOR /