விக்கி நவரட்ணம் – சுவீஸ்

 ›  › விக்கி நவரட்ணம் – சுவீஸ்

படைப்பாளிகள்

விக்கி நவரட்ணம் – சுவீஸ்

யாழ் வண்ணார்பண்ணை பிறப்பிடமாகும்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வாழ்வோடு இணைந்த இடமாகும்.

வண்ணார்பண்ணை செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஆரம்ப கல்வி. பயின்று,
யாழ் மத்திய கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர்.

கொழும்பில் தனியார் தறையிலும், பின்னர், யாழ் மாநரகசபையிலும் பதவி வகித்தவர்.

யாழ் மண்ணிலேயே சிறந்த மேடைப் பேச்சாளனாக அறிமுகப் படுத்தப்பட்டவர்.

கல்வி பயின்ற காலத்தில் இயல்பாகவே கவிதை, கதைகள் எழுதுவதில் நாட்டமிருந்தாலும், புலம்பெயர் மண் புடம் போட வைத்தது.

இவரின் இலக்கியப் பணிகள் செயற்திறன் பெற்றபோது இவரின் கவிதைகளுக்கு பிரான்ஸ் ஏ.பி.சி. வானொலி தளம் அமைத்துக் கொடுத்தது.

2002ம் ஆண்டு சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் ஏ. பி. .சி. வானொலி நடாத்திய “தேன் மதுர மாலை” கலை விழாவில் இவருடைய முதல் வெளியீடான “ஆகாய கங்கை” என்ற கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது.

2003ம் ஆண்டு Nஐர்மனி “கம்” மானிலத்தில் “ஆகாய கங்கை” கவிதைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

இலக்கியப் பணியில் இவரின் எண்ணங்கள் ராட்ஸச உணர்வுகளாக எழுந்து துள்ளிய துள்ளல்கள் கதைகளாக பிறப்பெடுத்தபோது உலகளாவிய ரீதியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. 1994ம் ஆண்டு சுவிஸ் தமிழர் கலாச்சார ஒன்றியம் நடாத்திய சிறு கதைப் போட்டியில் முதலாம் பரிசைப் பெற்றார்.

1995ம் ஆண்டும், 1997ம் ஆண்டும் இவர்கள் நடாத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார்.

“காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்” என்ற ஓர் ஆவணத் தொகுப்பு 2005ம் ஆண்டு பிரான்சில் வெளிடப்பட்டது. அந்த ஆவணத் தொகுப்பில் திரு. விக்கி நவரட்ணம் அவர்களையும் இணைத்துக் கொள்ளப்பட்டது காலம் தாங்கும் வரலாற்றுச் சிறப்பாகும.;

இவருடைய இலக்கியப் பணியை பாராட்டு முகமாக பிரான்ஸ் நாட்டின் “ஏவ்றி கலாமன்றத்தின்” ப

இவர் ஓர் சிறந்த நாடகக் கலைஞர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. தானே நடித்து இயக்கிய பண்டாரவன்னியன் நாடகம் இவரின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று கூறலாம்.

இவரின் இயற் பெயர் விக்கினேஸ்வரமூர்த்தியாக இருந்தாலும் தன் தந்தைமேல் உள்ள பாசத்தால் நவரட்ணம் என்ற தந்தையின் பெயரையும் இணைத்து இலக்கிய உலகில் விக்கி நவரட்ணம் என்ற பெயருடன் வலம் வருகின்றார். இவருடைய இலக்கியப்பணி மேன்மேலும் தொடரவும், நல்ல புகழோடு வாழவும், வாழ்த்துவோம்

Share this Post:
விக்கி நவரட்ணம் – சுவீஸ் Reviewed by on August 14, 2015 .

யாழ் வண்ணார்பண்ணை பிறப்பிடமாகும். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை வாழ்வோடு இணைந்த இடமாகும். வண்ணார்பண்ணை செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஆரம்ப கல்வி. பயின்று, யாழ் மத்திய கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர். கொழும்பில் தனியார் தறையிலும், பின்னர், யாழ் மாநரகசபையிலும் பதவி வகித்தவர். யாழ் மண்ணிலேயே சிறந்த மேடைப் பேச்சாளனாக அறிமுகப் படுத்தப்பட்டவர். கல்வி பயின்ற காலத்தில் இயல்பாகவே கவிதை, கதைகள் எழுதுவதில் நாட்டமிருந்தாலும், புலம்பெயர் மண் புடம் போட வைத்தது. இவரின் இலக்கியப் பணிகள் செயற்திறன் பெற்றபோது

ABOUT AUTHOR /