அருண் விஜயராணி

 ›  › அருண் விஜயராணி

படைப்பாளிகள்

அருண் விஜயராணி

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்வசிக்கின்றார். அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதி வருகின்றார்
1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் “அவன் வரும்வரை” என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது “விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்” என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.
இலங்கை வானொலியில் சிறுகதைகள்இ சிந்தனைக்கட்டுரைகள்இ இசையும் கதையும்இ நாடகங்கள்இ தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன. ”தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன” என்ற இவரது வானொலி நாடகம்இ துணை என்ற பெயரில் ரூபவாஹினிதொலைக்காட்சிக்காக பி.விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார்.
அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலிஇ இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு இலக்கிய சிற்றிதழின் ஆசிரியராகவும் அருண். விஜயராணி பணியாற்றியுள்ளார். அத்துடன் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

Share this Post:
அருண் விஜயராணி Reviewed by on August 10, 2015 .

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்வசிக்கின்றார். அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதி வருகின்றார் 1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் “அவன் வரும்வரை” என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது “விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்” என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது. இலங்கை வானொலியில் சிறுகதைகள்இ சிந்தனைக்கட்டுரைகள்இ இசையும் கதையும்இ நாடகங்கள்இ தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன. ”தவறுகள்

ABOUT AUTHOR /