மாலினி மாலா

 ›  › மாலினி மாலா

படைப்பாளிகள்

மாலினி மாலா

ஈழத்து சகல பத்திரிகைகள் மூலம் சிறுகதை தொடர்கதை கட்டுரைகள் பேட்டிகள் விமர்சனங்கள்……
இலங்கை வானொலி நாடகங்கள் சிறுகதைகள் இசையும் கதையும் கட்டுரைகள் வேறு ஜனரஞ்சக நிகழ்ச்சிகள்
இருபத்திரண்டே வயதுக்குள் மிகவேகமாக இலக்கியத்துறையில் ஓரளவு உயரம் தொட்டு நின்ற போது அறிமுகமாகி இருந்த பெயர். அரியாலையூர் மாலினி சுப்பிரமணியம்.
புலப்பெயர்வின் பின் ஈழமுரசு உட்பட சில பத்திரிகைகளில் சில கதைகள் வானொலி நாடகங்கள் நிகழ்ச்சிகள் சில என்பதுடன் அந்தத் துறையை விட்டே நீண்ட கால ஒதுக்கம். இடையில் இருமுறை ஐரோப்பிய மற்றும் இலங்கை இணைந்த சிறுகதைப் போட்டிகளில் இருமுறை முதலிடம் தங்கப்பதக்கமாய் வென்றும் விலத்திப் போன ஆர்வம் பின் அந்தத் துறை விட்டே ஒதுங்க வைத்தது.

நீண்ட வருடங்களின் பின் வீரகேசரியில் முன்பு தொடராக வெளியாகி பலரது பாராட்டைப் பெற்ற நாவலை மணிமேகலைப்பிரசுரம் வெளியிட குடும்பப் பாசமும் நட்பின் நேசமும் முன்னே இருந்த பாதை நோக்கி வற்புறுத்தி நகர்த்த எழுத்தின் மௌனத்தை உடைத்து வெளிவந்த இரண்டாவது நாவல் அர்த்தமுள்ள மௌனங்கள். அதன் பின்னான பயணம் கவிதையாக , கட்டுரையாக , சிறுகதையாக ,நாவலாக மீண்டும் அதே பாதையில் நிறுத்திவிடா தீர்மானத்துடன். …. முன்னைய பெயர் அடையாளம் தவிர்த்த வெறும் மாலினியாய் உங்கள் அறிமுகத்துடன் தொடரும் பேனாவின் பயணம்……

Share this Post:
மாலினி மாலா Reviewed by on August 9, 2015 .

ஈழத்து சகல பத்திரிகைகள் மூலம் சிறுகதை தொடர்கதை கட்டுரைகள் பேட்டிகள் விமர்சனங்கள்…… இலங்கை வானொலி நாடகங்கள் சிறுகதைகள் இசையும் கதையும் கட்டுரைகள் வேறு ஜனரஞ்சக நிகழ்ச்சிகள் இருபத்திரண்டே வயதுக்குள் மிகவேகமாக இலக்கியத்துறையில் ஓரளவு உயரம் தொட்டு நின்ற போது அறிமுகமாகி இருந்த பெயர். அரியாலையூர் மாலினி சுப்பிரமணியம். புலப்பெயர்வின் பின் ஈழமுரசு உட்பட சில பத்திரிகைகளில் சில கதைகள் வானொலி நாடகங்கள் நிகழ்ச்சிகள் சில என்பதுடன் அந்தத் துறையை விட்டே நீண்ட கால ஒதுக்கம். இடையில் இருமுறை

ABOUT AUTHOR /