இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-

 ›  › இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-

படைப்பாளிகள்

இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-

இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர்

இளைய அப்துல்லாஹ் (1968)

1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ்.
இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார்.
1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
1996இ 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
1998 இல் ஜேர்மனில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டார்.
2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் மாதம் லண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர்இ அறிவிப்பாளர்இ நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகஇ ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து ஐரோப்பியஇ பிரித்தானியஇ மத்திய கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்தை பெற்றார்.
சளைக்காது தொடர்ந்து விவரணக் கட்டுரைகளை மிகச் சுவைபட எழுதி வரும் இளைய அப்துல்லாஹ்வின் எழுத்துக்கள் பிரபல்யமானவை.
அவரது அனுபவங்கள் கூறும் உண்மைச் சம்பவங்களை பதிவதில் திறமையானவர்.
இளைய அப்துல்லாஹ் இப்பொழுதும் லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும்இ விவரணத் தயாரிப்பாளராகவும் 13 வருடங்கள் பணிபுரிந்தார்.

இளைய அப்துல்லாஹ்வின் ஆறு தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.

1‘துப்பாக்கிகளின் காலம்’ சிறுகதை
2‘பிணம் செய்யும் தேசம்’ ‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்த ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.
3-அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்-கட்டுரை(உயிர்மை)இ
4-கடவுளின் நிலம்-கட்டுரை (விஸ்வ சேது இலக்கியபாலம்)
5-லண்டன் உங்களை வரவேற்பதில்லைகட்டுரை(காலச்சுவடு)இ
6-நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்-கட்டுரை (காலச்சுவடு

Share this Post:
இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்- Reviewed by on August 5, 2015 .

இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர் இளைய அப்துல்லாஹ் (1968) 1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள்இ இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ். இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல எழுத்தாளரானார். 1995 களில் இருந்து ‘புலம்பெயர்’ தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதைஇ சிறுகதைகள்

ABOUT AUTHOR /