மலரும் முகம்பார்க்கும் காலம்.‏— தொடர் கவிதை ஆரம்பம் இல-1

 ›  › மலரும் முகம்பார்க்கும் காலம்.‏— தொடர் கவிதை ஆரம்பம் இல-1

கவிதைகள்

மலரும் முகம்பார்க்கும் காலம்.‏— தொடர் கவிதை ஆரம்பம் இல-1

செய்தொழில் உடல் சோரும்
சேயின் குதலையால் மெய் நிமிரும்
இல்லானின் கடின உழைப்புக்கு
இல்லாளின் ஆலிங்கனம் ஒத்தடமாகும்
மலரில் மணம் மதியில் குளிர்ச்சிபோல்
மழழைகளின் சிரிப்பில் மலரும் முகம்
ஆஸ்திக்கும் ஆசைக்குமொன்றாய்
ஈன்றெடுத்த இரு கண்மணிகளை
போர் ஏப்பமிட்டது அறியாது
ஏங்கித்தவித்து புலம்பி ஏறியிறங்கி
கைகூப்பி காலில் விழுந்து மன்றாடி
கையில் மனுவுடன் அலைகிறது
துணையற்ற பாசமிகு தாய்மனசு
காலம் காரிருளாய் நீண்டுபோச்சு
பெத்தவள் கண்ணீரும் வற்றிப்போச்சு
முகமும் குழியாகி சோபைபோச்சு
பிள்ளைகளை பார்க்கும் காலம் நீண்டுபோச்சு
பெற்றோர் பேணி பராமரித்தல்
பிதாமாதாக்களை பிள்ளை பேணுதல்
நாம் குழைக்கும் ஒவ்வொரு கவளத்தையும்
நன்றியுள்ளது தனக்கேயென வாய்பார்ப்பதும்
எம்மை பெத்ததுகள் பார்க்கும் காலம்.

கவிதை- பொலிகை ஜெயா poligi  jaya Swiss-2

Share this Post:
மலரும் முகம்பார்க்கும் காலம்.‏— தொடர் கவிதை ஆரம்பம் இல-1 Reviewed by on August 4, 2015 .

செய்தொழில் உடல் சோரும் சேயின் குதலையால் மெய் நிமிரும் இல்லானின் கடின உழைப்புக்கு இல்லாளின் ஆலிங்கனம் ஒத்தடமாகும் மலரில் மணம் மதியில் குளிர்ச்சிபோல் மழழைகளின் சிரிப்பில் மலரும் முகம் ஆஸ்திக்கும் ஆசைக்குமொன்றாய் ஈன்றெடுத்த இரு கண்மணிகளை போர் ஏப்பமிட்டது அறியாது ஏங்கித்தவித்து புலம்பி ஏறியிறங்கி கைகூப்பி காலில் விழுந்து மன்றாடி கையில் மனுவுடன் அலைகிறது துணையற்ற பாசமிகு தாய்மனசு காலம் காரிருளாய் நீண்டுபோச்சு பெத்தவள் கண்ணீரும் வற்றிப்போச்சு முகமும் குழியாகி சோபைபோச்சு பிள்ளைகளை பார்க்கும் காலம் நீண்டுபோச்சு

ABOUT AUTHOR /