கே.எஸ்.சுதாகர்

 ›  › கே.எஸ்.சுதாகர்

படைப்பாளிகள்

கே.எஸ்.சுதாகர்

1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். முதல் சிறுகதை ஈழநாடு வாரமலரில் ’இனி ஒரு விதி செய்வேம்’ வந்தது.

சுருதி, கதிரொளியான் எனது புனைபெயர்கள்.

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்.

இலங்கையில் ஈழநாடு, முரசொலி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் – யுகமாயினி, செம்மலர், வெற்றிமணி (ஜேர்மனி), பாலம் (நியூசிலாந்து), கலப்பை (அவுஸ்திரேலியா), சிவத்தமிழ் (ஜேர்மனி), தென்றல் (அமெரிக்கா), காற்றுவெளி, தளம் என்பவற்றில் இவரது படைப்புகள் வந்துள்ளன.

மரத்த்டி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை, மலைகள் போன்ற இணையத்தளங்களிலும் படைப்புகள் வந்துள்ளன.

’எங்கே போகின்றோம்’ என்ற சிறுகதைத்தொகுதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடாக (குமரன் பதிப்பகம்) வந்துள்ளது. ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதி ‘அக்கினிக்குஞ்சு’ வெளியீடாக (மித்ர பதிப்பகம்) வந்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இலண்டன்), மரத்தடி இணையம், தென்றல்

(அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (அவுஸ்திரேலியா) உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

Blog – www.shuruthy.blogspot.com.au

E.Mail – kssutha@hotmail.com

Share this Post:
கே.எஸ்.சுதாகர் Reviewed by on July 31, 2015 .

1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். முதல் சிறுகதை ஈழநாடு வாரமலரில் ’இனி ஒரு விதி செய்வேம்’ வந்தது. சுருதி, கதிரொளியான் எனது புனைபெயர்கள். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். இலங்கையில் ஈழநாடு, முரசொலி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் – யுகமாயினி, செம்மலர், வெற்றிமணி

ABOUT AUTHOR /