திருமதி.தேனம்மை லக்ஸமணன்

 ›  › திருமதி.தேனம்மை லக்ஸமணன்

படைப்பாளிகள்

திருமதி.தேனம்மை லக்ஸமணன்

கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு)

இளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல்  பட்டதாரி (M.A Political Science)

புத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

மூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு)

தினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.

இவருடைய வலைப்பதிவில்  கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், இளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.

இதுவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், இவள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.

குமுதத்தில் “அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.

குமுதம் கெல்த் ஸ்பெஸலில்( முரஅரவாயஅ ர்நயடவா ளுpநஉயைட ) “மேக்கப்பிற்கு பேக்கப”; என்ற தலைப்பில் இவரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்தியா ருடேயில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் இரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” இதழில் “பெண் மொழி”என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.”இணையதள ப்ளாகர்”என்ற தலைப்பில் “நம் உரத்த சிந்தனை”இதழில் இவரைப் பற்றி வெளியாகி உள்ளது.

“சாதனை அரசி” “ங்கா” ஆகிய இவரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்”பதிப்பிலும் இந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.

இவ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.

மக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டிருந்தார்

Share this Post:
திருமதி.தேனம்மை லக்ஸமணன் Reviewed by on July 30, 2015 .

கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு) இளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல்  பட்டதாரி (M.A Political Science) புத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். மூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு) தினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4

ABOUT AUTHOR /