குரு அரவிந்தன்

 ›  › குரு அரவிந்தன்

படைப்பாளிகள்

குரு அரவிந்தன்

ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் குரு அரவிந்தன் காங்கேயன்துறையைச் சேர்ந்த மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் நடேஸ்வராக்கல்லூரி’ மகாஜனாக்கல்லூரி’ பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவராவார். மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் நிதிக்கட்டுப்பாட்டாளர். இலக்கிய ஈடுபாடும்  பன்முக ஆளுமையும் கொண்ட இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும்  பகுதி நேர ஆசிரியாகவும் ரொறன்ரோவில் கடமையாற்றுகின்றார்.

இவரது படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள்;:

விகடன் தீபாவளி மலர் விகடன் பவளவிழா மலர்ஆனந்தவிகடன் கலைமகள் கல்கி குமுதம் யுகமாயினி (தமிழ்நாடு) தாய்வீடு தூறல் உதயன் தமிழர் தகவல் (கனடா); தினக்குரல் வீரகேசரி வெற்றிமணி(யேர்மனி) புதினம்(லண்டன்) உயிர்நிழல்(பாரிஸ்) வல்லினம் (மலேசியா) காற்றுவெளி (லண்டன்) பதிவுகள்(இணையம்) திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்)

விருதுகள் – பரிசுகள்:

தங்கப் பதக்க விருது: உதயன் சிறுகதைப்போட்டி – கனடா

சிறந்த சிறுகதை விருது: வீரகேசரி மிலேனியம் இதழ் (2000)

சிறுகதைபோட்டி – முதற்பரிசு: ‘சுமை’ கனேடிய தமிழ் வானொலி-2007

சிறுகதை சிறப்புப் பரிசு: கந்தர்வன் நினைவுப் போட்டி-2008 (தமிழ்நாடு)

குறுநாவல் போட்டி: ‘அம்மாவின் பிள்ளைகள்’ (சிறப்புப்பரிசு) – யுகமாயினி-2009 (தமிழ்நாடு)

ஓன்ராறியோ முதல்வர் விருது : 10 வருட தன்னார்வத் தொண்டர் விருது – 2010 (கனடா)

குறுநாவல் போட்டி கலைமகள் விருது:(தமிழ்நாடு)’தாயுமானவர்’ – ராமரத்தினம் நினைவுப் பரிசு-2011

‘புனைகதை வித்தகன்’: சிறப்புக் கௌரவம் – கனடா பீல் தமிழர் அமைப்பு-2011

பாரிஸ்; கல்வி நிலைய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி- ‘கனகலிங்கம் சுருட்டு’ (சிறப்புப்பரிசு) -2012

தமிழர் தகவல் கனடிய இலக்கிய விருது – 2012 கனடா.

ஞானம் சிறுகதைப் போட்டி சிறப்புப் பரிசு (பரியாரிமாமி)- 2013

ஓன்ராறியோ முதல்வர் விருது : தன்னார்வத் தொண்டர் விருது – 2013 (ஒன்ராறியோ)

வெளிவந்த நூல்கள்: தமிழகத்தில் மணிமேகலைப் பிரசுரவெளியீடுகள்:

சிறுகதை தொகுப்புக்கள்  இதுதான் பாசம் என்பதா? (2002இ 2005)   என் காதலி ஒரு கண்ணகி (2001)  நின்னையே நிழல் என்று! (2006)

நாவல்கள் – ஒலிப்புத்தகங்கள்: (மூன்று ஒலிப்புத்தங்கள் – குறும்தட்டு)

திரைப்படம் – கதை திரைக் கதை வசனகர்த்தா.

(இந்திய-கனடிய கூட்டுறவு தயாரிப்பு)

மேடையேறிய நாடகம்: (கதை வசனம் நெறியாள்கை)

அன்னைக்கொருவடிவம் (சித்தங்கேணி ஒன்றிய ஆண்டுவிழா)

மனசுக்குள் மனசு. (மாகஜனக்கல்லூரி நூற்றான்டு விழா – மொன்றியல் ரொறன்ரோ)

மேடையேறிய சிறுவர் நாடகம்: (கதை வசனம் நெறியாள்கை)

சிறுவர் இலக்கியம்:

ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் 25 பக்கங்களில் வெளிவந்த இவரது நீர் மூழ்கி.. நீரில் மூழ்கி.. என்ற பெரியகதைக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருப்பது இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் கிடைக்காத பாக்கியமாகும்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவராகக் கடமையாற்றும் இவர் பீல் பிரஜைகள் சங்கத்தின்  உபதலைவராகவும்இ ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். இவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும்இ சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இவரது பல கதைகள் பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

Share this Post:
குரு அரவிந்தன் Reviewed by on July 29, 2015 .

ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் குரு அரவிந்தன் காங்கேயன்துறையைச் சேர்ந்த மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் நடேஸ்வராக்கல்லூரி’ மகாஜனாக்கல்லூரி’ பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவராவார். மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் நிதிக்கட்டுப்பாட்டாளர். இலக்கிய ஈடுபாடும்  பன்முக ஆளுமையும் கொண்ட இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும்  பகுதி நேர ஆசிரியாகவும் ரொறன்ரோவில் கடமையாற்றுகின்றார். இவரது படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள்;: விகடன் தீபாவளி மலர் விகடன் பவளவிழா மலர்ஆனந்தவிகடன்

ABOUT AUTHOR /