இக.கிருட்ணமூர்த்தி

 ›  › இக.கிருட்ணமூர்த்தி

படைப்பாளிகள்

இக.கிருட்ணமூர்த்தி

1976 இல் முதன்முதலாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் பண்ணாகம் என்னும் இடத்தில் நடைபெற்ற தமிழ் மகாநாட்டில் மாணவ தொண்டனாக பொது சேவையில் அடி எடுத்து வைத்தது.
– பல பொதுசேவை அமைப்புகளின் நிர்வாகத்திலும் அங்கத்தவராகவும், கலை, நாடகத்துறை இயக்குனராக கடமையாற்றியபோது எழுதி இயக்கிய ’’வேலையாள் வேண்டும்’;’ என்ற நாடகம் பெண்களின் நடிப்பில் யாழில் நாடக போட்டியில் 2 இடம் பெற்றது. யேர்மனியில் 15 சிறு நகைச்சுவை சமூக நாடகங்கள் எழுதி இயக்கியது அத்துடன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்
– வெளிவாரி பல்கலைக்கழக வத்தகமானி பட்டப்படிப்பை கற்றுவந்த காலத்தில் பொது சேவையால் கவரப்பட்டு வெளியேறியமை. யாழ் – ஆணையாளர் திரு.போஜன் தலமையில் சென்யோன்ஸ் அன்புலன் காங்கேசன்துறைப் பிரிவில் 1983இல் ’’கோப்பிறல்’’; பதவியில் கடமையாற்றியது. 1983 இன கலவரத்தால் கொழும்பிலிருந்து கப்பிலில் அழைத்து வரப்பட்ட தமிழர்களை  நடேஸ்வராக் கல்லுரியில் வைத்து பாதுகாப்பாக மருத்துவ உதவிகள் வழங்கியமை. 1988 இல் ’’முதல் உதவிப்’’ பயிற்சி ஆசிரியராக வடமாராட்சியில் கடமையாற்றியது.
-1991 யேர்மனியில் ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்டம் எனனும் அமைப்பின் இயக்குனராக  இருந்து ஐரோப்பாவில் தமிழ்த்தாகத்தால்  கையெழுத்து. தட்டச்சு ஒருசில கணணி பிரதிகளாக வெளிவந்த 18 சஞ்சிகளை ஒருங்கிணைத்த பெருமையும்  முதன் முதலாக ஓடியோவில் சோலை என்னும் ஒரு சஞ்சிகையை உருவாக்கி வெளியிட்டது இதற்கு திரு.இராசகருணா இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.
-யாழ் ’’ஈழமுரசு’’ பத்திரிகையின்செய்தியாளராகவும், யேர்மனியில் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட ’’நமது இலக்கு’’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும், ’’பண்ணாகம் இணையத்தளம்’’ பிரதம ஆசிரியராகவும், யேர்மனியில் தமிழ்பாடசாலையில் ஆசிரியராகவும் செயற்படுகிறார். மற்றும் சமய சமூக ஆர்வலரும் ஆவார்.

 

Share this Post:
இக.கிருட்ணமூர்த்தி Reviewed by on July 28, 2015 .

1976 இல் முதன்முதலாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் பண்ணாகம் என்னும் இடத்தில் நடைபெற்ற தமிழ் மகாநாட்டில் மாணவ தொண்டனாக பொது சேவையில் அடி எடுத்து வைத்தது. – பல பொதுசேவை அமைப்புகளின் நிர்வாகத்திலும் அங்கத்தவராகவும், கலை, நாடகத்துறை இயக்குனராக கடமையாற்றியபோது எழுதி இயக்கிய ’’வேலையாள் வேண்டும்’;’ என்ற நாடகம் பெண்களின் நடிப்பில் யாழில் நாடக போட்டியில் 2 இடம் பெற்றது. யேர்மனியில் 15 சிறு நகைச்சுவை சமூக நாடகங்கள் எழுதி இயக்கியது அத்துடன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்

ABOUT AUTHOR /