கிருசாந்திகளின் குருதி இன்னும் காயவில்லை

 ›  › கிருசாந்திகளின் குருதி இன்னும் காயவில்லை

கவிதைகள்

கிருசாந்திகளின் குருதி இன்னும் காயவில்லை

ஆடிப்பிறப்பின் அதிகாலை
காரைநகரின் கடக்கரைக் கிராமங்களிலொன்றில்
வெள்ளரசுக்கிளையொன்றில்
தற்கொலை செய்து கொண்ட புத்தரின் பிணம்
அனாதரவாய்
ஆடிக்கொண்டிருந்தது

காலைப்பத்திரிகை
சட்டத்ததால் கட்டப்பட்ட
சதிகாரர்கள் பூமியில்
மேலுமோரு சிறுமி
ஆண்குறிகளால்
அடக்கம் செய்யப்பட்ட செய்தியை
தாங்கி வந்தது

சூரியன் சுட்டெரிக்கும் தார் வீதியில் விழுந்த
பச்சைப் புழுவாய் மனம் துடிக்கின்றது
மூடுண்ட இந்த நகரத்தின்
இரட்சகர்கள்
அந்தக் பதினொரு வயதுக் குழந்தையை
அதன் குழந்தைத் தனத்துடன் சேர்த்து
தின்று போட்டிருக்கிறார்கள்

அடக்குமுறைக்கான
துப்பாக்கிகள் மௌனிக்கின்ற பொழுதெல்லாம்
ஆண் குறிகள் ஆர்ப்பரிக்கின்றன.
அவை குழந்தை குஞ்சு குமரி
கிழம் என்று பார்ப்பதில்லை
பத்து துப்பாக்கியை விட
பாலியல் கருவி பலம் வாய்ந்தது
சுடுகுழலின் வலிமையைவிட
இழப்புகள் பல மடங்கு இதில்தான்
சித்தார்த்தரின் பிற்தோன்றல்களின் தாற்பரியமிது

ஓ…..
சிங்கள சகோதரிகளே உங்கள் கச்சைகளை
இறுகப் பூட்டிக் கொள்ளுங்கள்
உங்கள் யோனிகளுக்கு இனி
வேலையில்லாமல் போகப்போகின்றது.

ச. நித்தியானந்தன்

Share this Post:
கிருசாந்திகளின் குருதி இன்னும் காயவில்லை Reviewed by on July 14, 2015 .

ஆடிப்பிறப்பின் அதிகாலை காரைநகரின் கடக்கரைக் கிராமங்களிலொன்றில் வெள்ளரசுக்கிளையொன்றில் தற்கொலை செய்து கொண்ட புத்தரின் பிணம் அனாதரவாய் ஆடிக்கொண்டிருந்தது காலைப்பத்திரிகை சட்டத்ததால் கட்டப்பட்ட சதிகாரர்கள் பூமியில் மேலுமோரு சிறுமி ஆண்குறிகளால் அடக்கம் செய்யப்பட்ட செய்தியை தாங்கி வந்தது சூரியன் சுட்டெரிக்கும் தார் வீதியில் விழுந்த பச்சைப் புழுவாய் மனம் துடிக்கின்றது மூடுண்ட இந்த நகரத்தின் இரட்சகர்கள் அந்தக் பதினொரு வயதுக் குழந்தையை அதன் குழந்தைத் தனத்துடன் சேர்த்து தின்று போட்டிருக்கிறார்கள் அடக்குமுறைக்கான துப்பாக்கிகள் மௌனிக்கின்ற பொழுதெல்லாம் ஆண் குறிகள்

ABOUT AUTHOR /