எம்.ஜெயராமசர்மா

 ›  › எம்.ஜெயராமசர்மா

படைப்பாளிகள்

எம்.ஜெயராமசர்மா

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா – பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப்
பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில்
டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும்
பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் கல்விப்பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ்,இந்துகலாசார விரிவுரையாளராகவும்,யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின்
வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலி
பரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும்,நாடகத்தயாரிப்பாளராகவும்
கடமையாற்றியுள்ளார்.மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன்
இந்துசாதனம்,மெல்லினம்,உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை,கட்டுரை,சிறுகதை,
விமர்சனம்,ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100
ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு
மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும்,எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும்
குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியா
வில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌
ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா
பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலகசைவ
சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும்,ஆய்வுக்கட்டுரையாள‌
ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்குசுற்றுப்பயணம்
சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம்,இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரை
கள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடு
சம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து
கல்விமையத்தின் ஆலோசகராகவும்,தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.அவரதுபடைப்புகள் அக்கினிக்குஞ்சு விலும் இடம்பெறுகின்றன.இந்தியப் பத்திரிகையான வல்லமையும் அவரது படைப்புக்களைத் தாங்கிவருகிறது.இவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்.

Share this Post:
எம்.ஜெயராமசர்மா Reviewed by on July 14, 2015 .

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா – பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் கல்விப்பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ்,இந்துகலாசார விரிவுரையாளராகவும்,யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும்,நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம்,மெல்லினம்,உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை,கட்டுரை,சிறுகதை, விமர்சனம்,ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய

ABOUT AUTHOR /